Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: நாமக்கல்

ஆளுங்கட்சி 1000; அதிமுக 500 ரூபாயும் வேட்டி சேலையும்! சூடு பறக்கும் வெண்ணந்தூர் உள்ளாட்சி தேர்தல் களம்!!

ஆளுங்கட்சி 1000; அதிமுக 500 ரூபாயும் வேட்டி சேலையும்! சூடு பறக்கும் வெண்ணந்தூர் உள்ளாட்சி தேர்தல் களம்!!

அரசியல், நாமக்கல், முக்கிய செய்திகள்
நாமக்கல் அருகே, வெண்ணந்தூர் 6வது வார்டு மாவட்ட கவுன்சிலர் தேர்தலையொட்டி, திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் போட்டிப்போட்டு பண பட்டுவாடாவில் ஈடுபட்டது, அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட மற்றும் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல்கட்டமாக அக். 6ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு சனிக்கிழைமை (அக். 9) தேர்தல் நடக்கிறது.   நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்தில் 6வது வார்டில் இருந்து மாவட்ட கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவின் பி.ஆர்.சுந்தரம், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். அதையடுத்து அந்தப் பதவிக்கு நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணியாகவும், பாமக, தேமுதிக, அமமுக,
மல்லசமுத்திரம்: திமுக கவுன்சிலரின் கணவரை காரில் விரட்டிச்சென்று கொல்ல முயற்சி! முன்னாள் ஊழியர் உள்பட 7 பேர் மீது புகார்!!

மல்லசமுத்திரம்: திமுக கவுன்சிலரின் கணவரை காரில் விரட்டிச்சென்று கொல்ல முயற்சி! முன்னாள் ஊழியர் உள்பட 7 பேர் மீது புகார்!!

நாமக்கல், முக்கிய செய்திகள்
மல்லசமுத்திரம் அருகே, திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவரை, அவருடைய முன்னாள்  ஊழியர் உள்பட 7 பேர் காரில்  விரட்டிச்சென்று அடித்துக் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள அவினாசிப்பட்டி காலனியை சேர்ந்தவர் முருகேசன் (50). திமுக பிரமுகர். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இவர், மல்லசமுத்திரம் ஒன்றியக்குழு திமுக கவுன்சிலராக உள்ளார்.   முருகேசன், சொந்த ஊரில் பேப்பர் கோன் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார். மேலும், தனியார் நிறுவனங்களுக்கு தேவையான வடமாநில தொழிலாளர்களை ஒப்பந்தத்தின்பேரில் பணிக்கு அமர்த்தும் மேன்பவர் கன்சல்டசன்சி நிறுவனமும் நடத்தி வருகிறார்.   இவரிடம், மோர்பாளையம் அருகே உள்ள ராமாபுரத்தைச் சேர்ந்த சரவணன் என்ற வாலிபர், கார் ஓட்டுநராகவும், மேலாளராகவும் 7 ஆண்டுகளாக வேலை செய்து வந்த
ஊரடங்கினால் சீரழிக்கப்பட்ட 2 சிறுமிகள்; 75 வயது முதியவர் முதல் பள்ளி மாணவர் வரை 12 பேர் கும்பல் வெறியாட்டம்!

ஊரடங்கினால் சீரழிக்கப்பட்ட 2 சிறுமிகள்; 75 வயது முதியவர் முதல் பள்ளி மாணவர் வரை 12 பேர் கும்பல் வெறியாட்டம்!

குற்றம், நாமக்கல், முக்கிய செய்திகள்
நாமக்கல் அருகே, ஓலை குடிசையில் வசித்து வரும் இரண்டு சிறுமிகளை 75 வயது முதியவர் முதல் பிளஸ்-2 மாணவர் வரை 11 பேர் கும்பல் கடந்த ஆறு மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ள சம்பவம், முட்டை மாவட்டத்தை உலுக்கி எடுத்துள்ளது.   நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வாம்பாள். இவருடைய கணவர், மூட்டைத் தூக்கும் தொழிலாளி. இரு ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பால் இறந்து விட்டார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த செல்வாம்பாளுக்கு மூன்று மகள்கள்; இரண்டு மகன்கள். மூத்த மகள் திருமணம் ஆகி, வெளியூரில் குடும்பத்துடன் வசிக்கிறார். மற்ற இரு மகள்களில் ஒருவர் ரேகா (13); இன்னொரு மகள் ரஞ்சனி (12). (தாயார் மற்றும் மகள்களின் பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளன). செல்வாம்பாள், மல்லூரில் உள்ள தனியார் சேகோ ஆலையில் கூலி வேலை செய்கிறார். தினசரி
‘அந்நியன்’ வாலிபரால் உறைந்த ‘முட்டை’ மாவட்ட கிராமம்!! ”பத்து தலையாவது உருண்டுருக்கும் ரெண்டு உசுரோட போச்சு!”

‘அந்நியன்’ வாலிபரால் உறைந்த ‘முட்டை’ மாவட்ட கிராமம்!! ”பத்து தலையாவது உருண்டுருக்கும் ரெண்டு உசுரோட போச்சு!”

குற்றம், நாமக்கல், முக்கிய செய்திகள்
''அய்யோ... இப்ப வரைக்கும் எங்களுக்கு அந்த படபடப்பும் பயமும் போகலைங்க. ஈரக்குலையெல்லாம் நடுங்கிப் போச்சுங்க சார். சம்பவம் நடந்து மூணு நாளாச்சு. உங்ககிட்ட பேசும்போதுகூட எங்க முகமெல்லாம் குப்புனு வேர்த்துப் போச்சு பாருங்க...,'' என கொஞ்சமும் பதற்றம் தணியாமல் பேசினர், பாலப்பாளையம் கிராம மக்கள். நாமக்கல் மாவட்டம் ஆண்டகளூர் கேட்டில் இருந்து திருச்செங்கோடு சாலையில் இருக்கிறது, இந்த கிராமம். பாலப்பாளையம் உப்பிலிய நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி அஞ்சலை. கூலித்தொழிலாளிகள். இவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன், மதியழகன். திருமணமாகி விட்டது. பெரம்பலூரில் அரசுப்பள்ளி ஆசிரியராக இருக்கிறார். இரண்டாவது மகன், கோடீஸ்வரன் (31). எம்.எஸ்சி., பி.எட்., கணிதம் படித்திருக்கிறார். பெற்றோருக்கு எழுதப்படிக்கத் தெரியாவிட்டாலும், மகன்களை படித்து ஆளாக்கியுள்ளனர்.
20 லட்ச ரூபாய்க்கு இலவச காய்கறிகள்! மக்களை தேடித்தேடி சென்று வழங்கிய செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன்! தனி ஒருவன் #1

20 லட்ச ரூபாய்க்கு இலவச காய்கறிகள்! மக்களை தேடித்தேடி சென்று வழங்கிய செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன்! தனி ஒருவன் #1

சிறப்பு கட்டுரைகள், நாமக்கல், முக்கிய செய்திகள்
வாழ்க்கையில் எதிர்ப்படும் இன்னல்களும், சவால்களும்தான் உலகுக்கு நிஜ நாயகர்களை அடையாளம் காட்டுகின்றன. அப்படி, ஒரு காலத்தில் பண்ணை அடிமையாக இருந்த செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தன்னுடைய கிராம மக்களுக்கு தேடித்தேடிச் சென்று 20 லட்சம் ரூபாய்க்கு காய்கறிகளை இலவசமாக வழங்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.   நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள அவினாசிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (49). மனைவி தமிழ்ச்செல்வி. மகன், மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் 1வது ரிசர்வ் வார்டு கவுன்சிலராக திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் தமிழ்ச்செல்வி. அதற்கு முன்பு, அவினாசிப்பட்டி
சட்டம் அறிவோம்: குழந்தையை தத்து எடுப்பது எப்படி?

சட்டம் அறிவோம்: குழந்தையை தத்து எடுப்பது எப்படி?

தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த ஓய்வு பெற்ற பெண் செவிலியர் உதவியாளர் ஒருவர், சட்ட விரோதமாக குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்து வந்த சம்பவம் அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உலகம் முழுவதுமே, ஆண், பெண் இருபாலரிடத்திலும் மலட்டுத்தன்மை பிரச்னை அதிகரித்து வருவதுதான் குழந்தையின்மைக்கு முக்கிய காரணம். இதனால், சட்டப்படி குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ள மத்திய, மாநில அரசுகளே அதற்கான வழிமுறைகளைச் செய்திருந்தாலும், அதற்கான நடைமுறைகளும், விதிமுறைகளும் அதிகம். அதனால்தான் குழந்தையில்லா தம்பதியினரில் பலர் தத்தெடுக்க தயாராக இருந்தாலும், அரசின் கெடுபிடிகள் காரணமாக சட்ட ரீதியான தத்தெடுத்தலை புறக்கணித்து விட்டு, சட்ட விரோதமாக குழந்தையை விலை கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். எனினும், புதிய அகராதி வாசகர்களுக்காக, சட்டப்பூர்வமாக ஒரு குழந்தையைத் தத்தெடுப்பத
ஒரு பெண் குழந்தையின் விலை 2 லட்சம்! தரம் பிரித்து பச்சிளம் சிசுக்கள் விற்பனை!!

ஒரு பெண் குழந்தையின் விலை 2 லட்சம்! தரம் பிரித்து பச்சிளம் சிசுக்கள் விற்பனை!!

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
ஒரு பெண் குழந்தையின் விலை இரண்டு லட்சம் ரூபாய் என்றும், குண்டான, அழகான, அமுல் பேபி மாதிரியான ஆண் குழந்தை நாலேகால் லட்சம் ரூபாய் என்றும் குழந்தைகளை தரம் பிரித்து விற்பனை செய்து வரும் ராசிபுரம் செவிலியர் உதவியாளர் கைது செய்யப்பட்டார்.   மாறி வரும் உணவுப்பழக்கவழக்கம், மேற்கத்திய கலாச்சாரம் போன்றவற்றால் இன்றைக்கு ஆண், பெண்களிடையே மலட்டுத்தன்மை அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட இருபாலருக்குமே 50 சதவீதம் வரை மலட்டுத்தன்மை குறைபாடு இருக்கிறது என்கிறது மருத்துவத்துறை. இந்நிலையில் செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வாய்ப்புகள் இருந்தாலும், அதற்காகும் அதிகபட்சமான செலவுகள் காரணமாக குறுக்கு வழியில் பலர் குழந்தைகளை விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 'காரா' (CARA - Central Adoption Resource Authority) மூலம் சட்டப்படி குழந்தைகளை தத்து எடுக்கலாம். எனினும்,
கோகுல்ராஜ் கொலை வழக்கு: சரமாரி கேள்விகளால் அரசு தரப்பு சாட்சி திணறல்! #Day2 #Gokulraj

கோகுல்ராஜ் கொலை வழக்கு: சரமாரி கேள்விகளால் அரசு தரப்பு சாட்சி திணறல்! #Day2 #Gokulraj

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் கேட்ட சரமாரி கேள்விகளால் அரசுத்தரப்பு சாட்சி பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார்.   சடலமாக கோகுல்ராஜ்...   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி வழக்கம்போல் வீட்டில் இருந்து கிளம்பிச் சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. மறுநாளான 24.6.2015ம் தேதி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கிழக்கு தொட்டிபாளையத்தில் உள்ள ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜின் சடலம் கைப்பற்றப்பட்டது. காவல்துறையினர் விசாரணையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜூம், அவருடன் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்த கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும் பழகி வந்ததால், அவர்கள் காதலித்து வருவதாக எண்ணி கோகுல்ராஜை ஒரு கும்பல் திட்டமிட்டு ஆணவக
சேலம் கூட்டுறவு தேர்தல்: அதிகாரிகள் கூட்டு சேர்ந்து கோல்மால் செய்தது அம்பலம்!

சேலம் கூட்டுறவு தேர்தல்: அதிகாரிகள் கூட்டு சேர்ந்து கோல்மால் செய்தது அம்பலம்!

ஈரோடு, சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கப் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க தேர்தலில், அதிகாரிகள் கூட்டு சேர்ந்து வேட்புமனுத் தாக்கல் செய்யாதவர்களை எல்லாம் நிர்வாகிகளாக நியமிக்க சதி செய்திருப்பது அம்பலமாகி உள்ளது. சேலம் பள்ளப்பட்டியில் எஸ்.111, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கப் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம், கடந்த 1998ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த வீட்டுவசதி சங்க பணியாளர்கள் 400க்கும் மேற்பட்டோர் அங்கத்தினர்களாக உள்ளனர். இதன் உறுப்பினர்களிடம் இருந்து நிரந்தர இட்டு வைப்புகளை பெறுவதும், அவர்களுக்கு கடனுதவிகளை வழங்குவதும் இந்த சங்கத்தின் பணிகளாகும். கூட்டுறவு தேர்தல் என்றாலே, ஆளுங்கட்சிகளே அனைத்துப் பதவிகளையும் சட்ட விரோதமாக கைப்பற்றுவதுதான் தமிழ்நாட்டில் காலங்க