Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: நடிகை கஸ்தூரி

திறக்கப்பட்டது ஜெயலலிதா சிலையா? அல்லது காந்திமதி சிலையா?; நெட்டிஸன்கள் கிண்டல்

திறக்கப்பட்டது ஜெயலலிதா சிலையா? அல்லது காந்திமதி சிலையா?; நெட்டிஸன்கள் கிண்டல்

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஜெயலலிதா பிறந்த நாள் விழாவையொட்டி, அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அவருடைய முழு உருவச்சிலை திறக்கப்பட்டது. சிலை, ஜெயலலிதா உருவத்தோடு பொருந்திப் போகாமல் இருந்ததால் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் விழாவையொட்டி ஆளும் அதிமுகவினர் விமர்சையாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். அவருடைய பிறந்தநாளான இன்று (பிப்ரவரி 24, 2018), சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், ஜெயலலிதாவின் 7 அடி உயரமுள்ள முழு உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது. அங்கு ஏற்கனவே உள்ள எம்ஜிஆர் சிலை அருகிலேயே ஜெயலலிதாவின் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர். ''இந்தியாவிலேயே கட்டுக்கோப்புடன் கட்சி நடத்திய ஒரே தலைவர் அம்மா அவர்கள்தான்'' என்று முதல்வர் இபிஎஸ் புகழாரம் சூட்டினார். ''ஆட்சி நட
இளையராஜாவை அவமதித்த நாளிதழை காறி துப்பிய நடிகை கஸ்தூரி!; ட்விட்டரில் குவியும் பாராட்டு

இளையராஜாவை அவமதித்த நாளிதழை காறி துப்பிய நடிகை கஸ்தூரி!; ட்விட்டரில் குவியும் பாராட்டு

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது கிடைத்தது குறித்த செய்தியை, அவரின் சாதி பெயரைச் சேர்த்து தலைப்புச் செய்தியாக வெளியிட்ட நாளிதழை நடிகை கஸ்தூரி காறி உமிழும் வீடியோ பதிவுக்கு, ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்திய திரையுலகில் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் இசைஞானி இளையராஜா. அவருடைய பாடல்களுக்காகவே பல படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. இன்றுவரை பின்னணி இசையில் அவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. இளையராஜாவை, இசைக்கடவுளாகவே கருதும் வெறிபிடித்த ரசிகர்களும் உண்டு. அவரின் திரையுலக சாதனையைக் கவுரவிக்கும் வகையில் நடுவண் அரசு, நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்படும் என, கடந்த 25ம் தேதி அறிவித்தது. அடுத்த நாள் (ஜனவரி 26, 2018) காலை பத்திரிகைகளில் இதுதான் தலைப்ப