Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: நகைச்சுவை.

நடிகர் விவேக் திடீர் மரணம்; ‘மரங்கள் உள்ளவரை சுவாசத்தில் கலந்திருப்பார்!’

நடிகர் விவேக் திடீர் மரணம்; ‘மரங்கள் உள்ளவரை சுவாசத்தில் கலந்திருப்பார்!’

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
விவேக்: 1961 - 2021 'சின்ன கலைவாணர்' என்று அழைக்கப்படும் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக், மாரடைப்பால் சனிக்கிழமை (ஏப். 17) அதிகாலையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 59: நடிகர் விவேக், வெள்ளிக்கிழமை (ஏப். 16) வீட்டில் இருந்தபோது திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் மயங்கி விழுந்தார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரை உடனடியாக மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சுய நினைவின்றி கிடந்த விவேக்கிற்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. பரிசோதனையில், அவருக்கு ரத்த நாளத்தில் 100 சதவீதம் எல்ஏடி அடைப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. உடனடியாக ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் சரி செய்தனர். இந்த சிகிச்சை சுமார் 1 மணி நேரம் நடந்துள்ளது. இதையடுத்து எக்மோ
குலேபகாவலி – சினிமா விமர்சனம்

குலேபகாவலி – சினிமா விமர்சனம்

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நடனப்புயல் பிரபுதேவா நடிப்பில், 15 நாள் இடைவெளியில் வெளிவந்திருக்கும் இரண்டாவது படம், 'குலேபகாவலி'. உலகம் எங்கும் இன்று (ஜனவரி 12, 2018) வெளியாகி இருக்கிறது. நடிப்பு: பிரபுதேவா, ஹன்சிகா மோத்வானி, ரேவதி, 'முனீஸ்காந்த்' ராம்தாஸ், மன்சூர் அலிகான், ஆனந்தராஜ், யோகி பாபு, சத்யன் மற்றும் பலர்; இசை: விவேக் & மெர்வின்; ஒளிப்பதிவு: ஆனந்தகுமார்; தயாரிப்பு: கேஜேஆர்; இயக்கம்: கல்யாண். கதை என்ன?: பிரிட்டிஷ்காரர் ஒருவர் 1945ம் ஆண்டு, இந்தியாவை விட்டு வெளியேறுகிறார். அவர் செல்லும்போது, அவரிடம் இருக்கும் விலை உயர்ந்த வைரங்களை திருடும் இந்தியர் ஒருவர், அதை குலேபகாவலி என்ற கிராமத்தில் புதைத்து வைக்கிறார். பல ஆண்டுகள் கழித்து, அந்த இந்தியரின் பேரனுக்கு குலேபகாவலி கிராமத்தில் வைர புதையல் இருப்பது தெரிய வருகிறது. அதை எடுக்க இந்தியாவுக்கு வரும் அவர், சிலை கடத்தும் கும்பலிடம் அந்த பொறுப்பை ஒப்படை