Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: தேசிய கீதம்

சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் கட்டாயமில்லை!; உச்சநீதிமன்றம்

சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் கட்டாயமில்லை!; உச்சநீதிமன்றம்

இந்தியா, முக்கிய செய்திகள்
சினிமா திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தேசப்பற்றை வளர்க்க, நாடு முழுவதும் உள்ள அனைத்து சினிமா திரையரங்குகளிலும் படம் தொடங்குவதற்கு முன்பு, கட்டாயம் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கடந்த 2016ஆம் ஆண்டு, நவம்பர் 30ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஓர் உத்தரவில் குறிப்பிட்டு இருந்தது. தேசிய கீதம் இசைக்கப்படும்போது திரையில் தேசியக்கொடி இடம்பெற வேண்டும் என்றும் கூறியிருந்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் ஆதரவு, எதிர்ப்பு என கலவையான விமர்சனங்கள் எழுந்தன. திரையரங்கத்திற்கு வரும் ரசிகர்கள் பலர், தேசிய கீதம் இசைக்கப்படும்போது அதற்கு மரியாதை செலுத்தும் வகையில் எழுந்து நிற்பதில்லை என்ற புகார்கள் எழுந்தன.   சில இடங்களில் தேசப்பற்று என்ற பெயரில், தேசிகீதத்தை அவமதிப்பதாகக் கூறி அப்பாவி மக்க
”அரசியலில் ரஜினி உடன் இணைந்து செயல்பட தயார்!” – கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

”அரசியலில் ரஜினி உடன் இணைந்து செயல்பட தயார்!” – கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அரசியல் களத்தில் ரஜினியுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் ரிபப்ளிக் டிவி என்ற ஹிந்தி சேனலுக்கு அளித்திருந்த பிரத்யேக பேட்டி இன்று (நவம்பர் 12, 2017) பகல் 11 மணிக்கு ஒளிப்பரப்பப்பட்டது. நெறியாளர் அர்னாப் கோஸ்வாமி, நம்ம ஊர் தமிழ் சேனல்களில் சொல்வதுபோல் தீவிரவாதத்திற்கும், பயங்கரவாதத்திற்கும் அர்த்தம் தெரியாமல் குழப்பத்திலேயே இருந்தார். கமல்ஹாசனை, இந்து விரோதி என்பதை சித்தரிக்க ரொம்பவே மெனக்கெட்டார். லஷ்கர்-இ-தொய்பா வரை வம்பில் சிக்கிவிடவும் முயற்சித்தார். அர்னாப் கோஸ்வாமி மோடியின் பக்கவாத்தியம்போல பேசியதையும், இந்துக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி போல பேசியதையும் அவதானிக்க முடிந்தது. அவர் எதிர்பார்த்த பதில்களைப் பெற முடியாமல், ஒருகட்டத்தில் ஏமாற்றம்
”சிங்கப்பூரின் உன்னதமான சர்வாதிகாரத்தை விரும்புகிறோம்” – கமல் ட்வீட்

”சிங்கப்பூரின் உன்னதமான சர்வாதிகாரத்தை விரும்புகிறோம்” – கமல் ட்வீட்

உலகம், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நடிகர் கமல்ஹாசன், சிங்கப்பூர் நாட்டின் உன்னதமான சர்வாதிகாரத்தை விரும்புவதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வழக்கம்போல் அவருடைய கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளன. மத்திய, மாநில அரசுகள் மீதான விமர்சனங்களை ட்விட்டர் சமூக வலைத்தளம் மூலம் நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். 'மெர்சல்' படத்தின் சில காட்சிகளுக்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அந்தப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து இருந்தார் கமல்ஹாசன். இந்நிலையில், திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் இசைக்கப்படுவது குறித்து மறுபரிசீலனை செய்யலாம் என்று சில நாள்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து இருந்தது. இது தொடர்பாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''சிங்கப்பூரில் தேசிய கீதம் தினமும் நடுநிசியில் மட்டுமே இசைக்கப்படுகிறது. அதேபோல் தூர்தர்ஷனில் செயல்ப