Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: துணை வேந்தர்

பெரியார் பல்கலை: கல்வி ஆண்டின் முதல் நாளிலேயே சலசலப்பு ஆரம்பம்!

பெரியார் பல்கலை: கல்வி ஆண்டின் முதல் நாளிலேயே சலசலப்பு ஆரம்பம்!

கல்வி, கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
பெரியார் பல்கலையில், கல்வி ஆண்டின் முதல் நாளிலேயே மூத்த பேராசிரியர்கள் சிலர் துறைத்தலைவர் பதவி கேட்டு போர்க்கொடி தூக்கியதால் துணை வேந்தர் கடும் அதிருப்தி அடைந்தார்.   சேலம் பெரியார் பல்கலையில் 2018-19ம் கல்வி ஆண்டின் முதல் நாள் வகுப்புகள் ஜூலை 2ம் தேதி தொடங்கின. இதையொட்டி, அன்றைய தினம் பல்கலையில் பணியாற்றும் அனைத்து உதவி, இணை பேராசிரியர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்ட கூட்டம், துணை வேந்தர் கொழந்தைவேல் தலைமையில் நடந்தது.   செனட் அரங்கத்தில் நடந்த இந்தக் கூட்டம், பகல் 12 மணிக்கு தொடங்கி 1.45 மணியளவில் நிறைவு பெற்றது. கூட்ட நிகழ்வுகள் வெளியே 'லைவ்' ஆக தெரிந்து விடக்கூடாது என்பதற்காக அனைவரின் செல்போன்களும் கூட்டம் முடியும் வரை செயல்படாத வகையில் ஜாமர் கருவி மூலம் முடக்கப்பட்டது. ஆராய்ச்சி தொடர்பாக வெளிநாடு செல்லும் பேராசிரியர்களுக்கு 50 சதவீதம் உதவித்தொகை வழங்கப்பட
துணை வேந்தர் கணபதி மீது குவியும் புகார்கள்;  கட்டப்பஞ்சாயத்து  ரவுடிபோல் மிரட்டியது அம்பலம்!

துணை வேந்தர் கணபதி மீது குவியும் புகார்கள்; கட்டப்பஞ்சாயத்து ரவுடிபோல் மிரட்டியது அம்பலம்!

கோயம்பத்தூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி, லஞ்சம் பெற்றுக்கொண்டு பணி நியமனம் செய்ததாக 20 பேர் புதிதாக லஞ்ச ஒழிப்புப்பிரிவில் புகார்கள் அளித்துள்ளனர். மேலும், உதவி பேராசிரியர் சுரேஷை கட்டப்பஞ்சாயத்து ரவுடிபோல் பணம் கேட்டு கடுமையாக மிரட்டியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவை பாரதியார் பல்கலை துணை வேந்தராக பணியாற்றி வந்த கணபதியை, கடந்த 3ம் தேதி லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். உதவி பேராசிரியர் சுரேஷ் என்பவரை பணி நியமனம் செய்வதற்காக 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். இதையடுத்து, அவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று முன்தினம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். கணபதிக்கு தரகு வேலை பார்த்ததாக பேராசிரியர் தர்மராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். மற்றொரு பேராசிரியர் மதிவாணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வரு
துணை வேந்தர் கணபதி பணியிடை நீக்கம்; ஆளுநர் உத்தரவு

துணை வேந்தர் கணபதி பணியிடை நீக்கம்; ஆளுநர் உத்தரவு

குற்றம், கோயம்பத்தூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பணி நியமனத்திற்காக 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட பாரதியார் பல்கலை துணை வேந்தர் கணபதியை பணியிடை நீக்கம் செய்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். கோவை பாரதியார் பல்கலையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் சுரேஷ். அவரை அந்தப் பணியில் நியமனம் செய்வதற்காக பல்கலை துணைவேந்தர் கணபதி, ரூ.30 லட்சம் கேட்டுள்ளார்.   கடந்த 3ம் தேதி சுரேஷ் தான் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி துணை வேந்தரிடம் லஞ்சப்பணத்தைக் கொடுப்பதற்காக அவருடைய வீட்டிற்குச் சென்றார். லஞ்சம் வாங்கிய துணை வேந்தர் கணபதியை, லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். கணபதியின் லஞ்ச பேரத்திற்கு உடந்தையாக இருந்ததாக பாரதியார் பல்கலை பேராசிரியர் தர்மராஜ் என்பவரையும் கைது செய்தனர். கணபதி, சிறையில் அடைக்கப்பட்டு 48 மணி நேரத்திற்கு மேலாகியும் அவர் பணியிடை நீக்கம் செய
துணைவேந்தர் கணபதி மட்டும்தான் குற்றவாளியா?

துணைவேந்தர் கணபதி மட்டும்தான் குற்றவாளியா?

கோயம்பத்தூர், சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கோவை பாரதியார் பல்கலை துணை வேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ள விவகாரத்தில் அவரும் ஓர் அம்புதானே தவிர, தகுதியில்லாத நியமனங்களின் பின்னால் உள்ள நியமனக்குழு, ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்களும் பரவலாக ஒலிக்கத் தொடங்கி உள்ளன. பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவது என்பது துணை வேந்தர் மற்றும் பதிவாளர் ஆகிய இருவரின் செயல்முறைகளுக்கு மட்டுமே உட்பட்டது அல்ல. ஓர் உதவி பேராசிரியரை நியமிக்க வேண்டுமெனில் அதில் பல்வேறு படிநிலைகள் உள்ளன. உதாரணமாக, உதவி பேராசிரியர் நியமனத்தை எடுத்துக்கொள்ளலாம். எந்தெந்த துறையில் காலிப்பணியிடங்கள் உள்ளன?, அதற்கான கல்வித்தகுதிகள் என்னென்ன? என்பது போன்ற விவரங்கள் பத்திரிகைகள், பல்கலைக்கழக இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிடப்படும். இதற்காக விண்ண
துணை வேந்தர்கள் நியமனத்தில் சமூகநீதி புறக்கணிப்பு!; 496 பதவிகளில் 48 பேர் மட்டுமே ஓபிசி!!

துணை வேந்தர்கள் நியமனத்தில் சமூகநீதி புறக்கணிப்பு!; 496 பதவிகளில் 48 பேர் மட்டுமே ஓபிசி!!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நாடு முழுவதும் உள்ள இந்திய பல்கலைக்கழகங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட 496 துணைவேந்தர்களில் 48 பேர் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனால் சமூகநீதி முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதில் அய்யம் எழுந்துள்ளது. இந்தியா போன்ற பன்முகக் கலாச்சாரம் நிலவும் நாடுகளில் இடஒதுக்கீடு சட்டம் இல்லாவிட்டால், பல இனங்களே எழுத்தறிவின்றி போய்விடும். அந்த சாபம், தலைமுறை தலைமுறையாக தொடரவும் கூடும். இதை உணர்ந்ததால்தான் திராவிட இயக்கங்கள், சமூகநீதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தன. வருகின்றன. ஆனால், பாஜக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் 'கிரீமி லேயர்' குறித்து அடிக்கடி பொது விவாதத்திற்கு வருவதை அறியலாம். அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் அடிப்பொடிகள் கூட்டமோ, இட ஒதுக்கீடு என்பதை பிச்சை இடுவது அல்லது பிச்சை பெறுவதற்குச் சமம் என்பதுபோல் பேசுகின்றனர். என்னளவில் இட ஒதுக்க