Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: துணைவேந்தர்

சேலம் பெரியார் பல்கலை புதிய துணைவேந்தராக ஜெகன்நாதன் நியமனம்! தொடரும் ‘ஜி’ சென்டிமென்ட்!

சேலம் பெரியார் பல்கலை புதிய துணைவேந்தராக ஜெகன்நாதன் நியமனம்! தொடரும் ‘ஜி’ சென்டிமென்ட்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் பெரியார் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை முன்னாள் டீன் ஜெகன்நாதன் நியமிக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறையாக கொங்கு மண்டலத்தில் இருந்தும், கவுண்டர் சமூகத்தினரையே துணை வேந்தராக நியமிக்கப்பட்டிருப்பது யதார்த்தமா? அல்லது உள்நோக்கமா? என்ற விவாதமும் பல்கலை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தராக இருந்து வந்த பேராசிரியர் குழந்தைவேலுவின் பதவிக்காலம் கடந்த ஜன. 8ம் தேதியுடன் முடிவடைந்தது. எனினும், புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும்வரை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.   பல்கலை விவகாரங்களில் வேந்தர் என்ற முறையில் ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் இருப்பதை மறுக்க முடியாது. என்றாலும், பணி நிறைவு பெற்று, வழியனுப்பு விழா நடத்தப்பட்ட நிலையில் குழந்தைவேலுவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்ட
ஊழலை அம்பலப்படுத்தினால் தண்டனை; அடக்கி வாசித்தால் புரமோஷன்! பெரியார் பல்கலை வகுத்த புதிய சிலபஸ்!! #PeriyarUniversity #Scam

ஊழலை அம்பலப்படுத்தினால் தண்டனை; அடக்கி வாசித்தால் புரமோஷன்! பெரியார் பல்கலை வகுத்த புதிய சிலபஸ்!! #PeriyarUniversity #Scam

கல்வி, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்தினால் தண்டனையும், தில்லுமுல்லுகளை கண்டும்காணாமல் அடக்கி வாசித்தால் பதவி உயர்வும் வழங்கும் விந்தையான நடைமுறைகளை பெரியார் பல்கலையில் பின்பற்றப்படுவது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.   பெரியார் பல்கலை   சேலம் பெரியார் பல்கலை 28 துறைகளுடன், 101 கல்லூரிகள் இணைவுடன் இயங்கி வருகிறது. பல்கலையில், 150க்கும் மேற்பட்ட உதவி / இணை / பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.   இப்பல்கலையில் 2014ம் ஆண்டு ஜூன் முதல் 2017 ஜூன் வரை மூன்று ஆண்டுகள் சுவாமிநாதன் என்பவர் துணைவேந்தராக பணியாற்றி வந்தார். அவர் பணியில் இருந்த காலக்கட்டத்தில் பெரியார் பல்கலை மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள உதவி பெறும் கல்லூரிகளில் 136 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்பட்டன.   ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஒவ்வொருவரிடம் இருந்தும் 25 லட்சம் மு
போலிகள் கூடாரமான சேலம் பெரியார் பல்கலை.!; மவுனம் கலைவாரா துணைவேந்தர்? #PeriyarUniversity

போலிகள் கூடாரமான சேலம் பெரியார் பல்கலை.!; மவுனம் கலைவாரா துணைவேந்தர்? #PeriyarUniversity

கல்வி, கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
-சிறப்பு செய்தி-   சுங்குவார் சத்திரத்தில் சுக்கு காபி விற்ற அனுபவம் இருந்தாலே போதும், வணிகவியல் துறை பேராசிரியர் ஆகிவிடலாம் என்பதை நிரூபித்து இருக்கிறது சேலம் பெரியார் பல்கலைக்கழகம். பீடிகை போடாமல் நேராக விஷயத்துக்கு வருவோம்.   பெரியார் பல்கலையில் கடந்த 2015-2016ம் ஆண்டின் வரவு, செலவினங்கள் தணிக்கை செய்யப்பட்டது. உள்ளாட்சித் தணிக்கை ஆய்வாளர் ரவி தலைமையிலான குழுவினர், கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை தணிக்கைப் பணிகளை நடத்தி முடித்தனர்.   தணிக்கை நடத்திய காலக்கட்டம் வரை கடந்த 20 ஆண்டுகளில் பெரியார் பல்கலையில் மேற்கொள்ளப்பட்ட செலவினங்களில் கிட்டத்தட்ட ரூ.47 கோடிக்கு உரிய செலவின ஆவணங்களை தணிக்கைக்கு உட்படுத்தவில்லை என்பது, தணிக்கை அறிக்கையின் ஹைலைட் பாயிண்ட்.   அந்த அறிக்கையில், மேலும் பல முறைகேடுகள் சுட்டிக்காட்டப
முன்னாள் பதிவாளர் தற்கொலை வழக்கிற்கு மூடுவிழா?  முக்கிய குற்றவாளிகளை தப்பவைக்க சதித்திட்டம்

முன்னாள் பதிவாளர் தற்கொலை வழக்கிற்கு மூடுவிழா? முக்கிய குற்றவாளிகளை தப்பவைக்க சதித்திட்டம்

அரசியல், ஈரோடு, கிருஷ்ணகிரி, குற்றம், சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
  சேலம் பெரியார் பல்கலையில், பணி நியமனத்தில் பல கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக கூறப்படும் புகாரில் முக்கிய புள்ளியாகச் சொல்லப்படும் முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதனை தப்ப வைக்கும் நோக்கில், முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலை வழக்கை இழுத்து மூடும் வேலையில் காவல்துறையினர் இறங்கியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் கிளம்பியுள்ளன. பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 2012-2015 காலக்கட்டத்தில் பதிவாளராக இருந்தவர் அங்கமுத்து. அதற்கு முன் இதே பல்கலையில் அவர் உடற்கல்வி இயக்குநராகவும் இருந்தார். அப்போது துணைவேந்தராக இருந்த சுவாமிநாதன், உதவி பேராசிரியர்களை நியமிக்க 25 லட்சம் ரூபாயிலிருந்து 45 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக புகார்கள் எழுந்தன.     குறிப்பாக, சுவாமிநாதன் பணியில் இருந்த 2014-2017 காலக்கட்டத்தில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 136 பணியிடங்கள் நிரப்பப்
பாரதியார் பல்கலை துணைவேந்தர்  கைதானது எப்படி?;  ”வசூலிப்பதே  முழுநேர தொழில்”;  திடுக்கிடும் தகவல்கள்

பாரதியார் பல்கலை துணைவேந்தர் கைதானது எப்படி?; ”வசூலிப்பதே முழுநேர தொழில்”; திடுக்கிடும் தகவல்கள்

குற்றம், கோயம்பத்தூர், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டதன் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் பொறுப்புக்கு வந்த நாள் முதல், நடந்த அனைத்து பணி நியமனங்களிலுமே யுஜிசி விதிமீறல்களும், பண பேரமும் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோயம்பத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கணபதியை, லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி தட்சணாமூர்த்தி தலைமையிலான போலீசார், இன்று (பிப்ரவரி 3, 2018) காலையில் கையும், களவுமாக சுற்றிவளைத்துப் பிடித்து கைது செய்தனர். இந்தப் பல்கலையின் துணைவேந்தராக கணபதி, கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார். மன்னார்குடி கும்பலின் ஆசியுடன் அவர் இந்தப் பதவியில் அமர்த்தப்பட்டார். அப்போது தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யா, ஜெயலலிதாவுக்கு ரொம்பவே இணக்கமாக இருந்தார். மன்னார்குடி கும்பல் ஆசி: அதனால்தான், சசிகலா கும்பல் கைக்காட்ட
பாரதியார் பல்கலை. துணை வேந்தர் கைது; ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டார்

பாரதியார் பல்கலை. துணை வேந்தர் கைது; ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டார்

கோயம்பத்தூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி, 30 லட்சம் ரூபாயை லஞ்சம் வாங்கியபோது அவரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பொறி வைத்துப்பிடித்து, கைது செய்தனர். கோயம்பத்தூரில் செயல்பட்டு வரும் பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர், கணபதி. கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் இப்பதவியில் அவர் நியமிக்கப்பட்டார். அவர் இந்த பொறுப்புக்கு வந்ததில் இருந்தே, உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புதல், பல்கலைக்கழகத்தில் தற்காலிக பணியாளர்கள் நியமனம் போன்றவற்றில் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், பாரதியார் பல்கலை கட்டுப்பாட்டில் இயங்கும் அதன் உறுப்புக்கல்லூரியில் உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு சுரேஷ் என்பவர் விண்ணப்பித்து இருந்தார். அந்த பணியில் சேர வேண்டுமானால், தனக்கு ரூ.35 லட்சம் கொடுக்க வேண்டும் என்று துணைவேந்தர் கணபதி பேரம் பேசியுள்ளார