Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: தீவிரவாதிகள்.

அன்று தீவிரவாதி; இன்று வன்முறை! சிக்கிக் கொண்டாரா ரஜினி?

அன்று தீவிரவாதி; இன்று வன்முறை! சிக்கிக் கொண்டாரா ரஜினி?

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் பலியாயினர். அப்போது இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், போராட்டக்காரர்களுடன் தீவிரவாதிகளும் நுழைந்ததால்தான் போராட்டம் வேறு திசைக்குச் சென்றதாகவும், இப்படி எதற்கெடுத்தாலும் போராடினால் நாடு சுடுகாடு ஆகிவிடும் என்றும் சொன்னார். இப்படி அவர் கருத்து சொன்ன அடுத்த நிமிடமே, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்றவர்கள் ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்தனர். போராட்டக்காரர்களையும், குண்டடிபட்டு இறந்தவர்களையும் ரஜினி தீவிரவாதிகள் என்கிறாரா? என பொதுவெளியில் வினாக்களை முன்வைத்தனர். அதற்கு ரஜினியிடம் இருந்து மவுனமே பதிலாக இருந்தாலும், அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இந்நிலையில், நடுவண் பாஜக அரசு, குடியுரிமை திர
”கமல்ஹாசனை சுட்டுக் கொல்வோம்”!:  இந்து மகா சபா மிரட்டல்

”கமல்ஹாசனை சுட்டுக் கொல்வோம்”!: இந்து மகா சபா மிரட்டல்

அரசியல், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஹிந்துக்களுக்கு எதிராக பேசும் கமல்ஹாஸனையும், அவரைப் போன்றவர்களும் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என்று அகில பாரத இந்து மகாசபா தேசியத் துணைத்தலைவர் பண்டிட் அசோக் ஷர்மா மிரட்டல் விடுத்துள்ளார். நடிகர் கமல்ஹாஸன் சில நாள்களுக்கு முன், 'தமிழ்நாட்டில் இந்து தீவிரவாதம் ஊடுருவிட்டது. இந்து தீவிரவாதிகள் இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான்' வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகள் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன. உத்தரபிரதேசத்தில் கமல்ஹாஸன் மீது மதத்திற்கு எதிராக அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதற்கிடையே அகில பாரத இந்து மகாசபாவின் தேசிய துணைத்தலைவர் பண்டிட் அசோக் ஷர்மா, மீரட் நகரில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது: கமல்ஹாஸனும் அவரைப் போன்றவர்களும் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் அல்லது தூக்கிலிடப
எடப்பாடி பழனிசாமி இப்படி; மம்தா பானர்ஜி அப்படி!

எடப்பாடி பழனிசாமி இப்படி; மம்தா பானர்ஜி அப்படி!

இந்தியா, சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பிறப்பு முதல் இறப்பு வரை எல்லாவற்றுக்கும் ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கிய காவி கும்பலை எதிர்க்கும் மிகப்பெரும் சக்தியாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உருவெடுத்துள்ளார். மத்திய அரசால் வழங்கப்படும் ஆதார் எண்ணை அனைத்து திட்டங்களுடனும் இணைக்கும் படி மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. அதேபோல் சிம் கார்டுகளை சமூக விரோதிகள், தீவிரவாதிகள் பயன்படுத்துவதைத் தடுக்க மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் கடந்த மார்ச் 23-ஆம் தேதி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கொல்கத்தாவில் ஒரு பொதுக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ''நான் என்னுடைய மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க மாட்டேன். ஆதார் இணைக்குமாறு கட்டாயப்படுத்துவது தனிநபர் உரிமை மீது நடத்தப்படும் தாக்குதலாகும். இதனால் என் மொபைல் எண் இணைப்பை துண்டித்தாலும் பரவாயில