Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: திராவிட கட்சிகள்

போலி ஜனநாயகத்திற்கா உங்கள் வாக்கு? #2

போலி ஜனநாயகத்திற்கா உங்கள் வாக்கு? #2

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தேர்தல் 2021, முக்கிய செய்திகள்
தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம், வழக்கம்போல கனல் கக்குகிறது. இதுவரையிலான தமிழக தேர்தல் வரலாற்றில், இந்த தேர்தலானது அதிமுக, திமுக ஆகிய இரு திராவிட கட்சிகளுக்கும் முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும். மக்களும் கூட, தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள வழக்கத்தை விடவும் கூடுதல் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.   நாளை (ஏப். 6) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள இந்த கடைசி நிமிடத்தில், திருவாளர் பொதுஜனங்களின் சிந்தனைக்காக சில சங்கதிகளை பேச விழைகிறேன். சற்றே நீளமான பதிவுதான். இந்த நாட்டின் எதிர்காலத்திற்காக கொஞ்சம் பொறுமை காத்து செவிசாய்க்க வேண்டுகிறேன்.   களத்தில் எத்தனை முனை போட்டி நிலவினாலும், நீங்கள் திமுக அல்லது அதிமுக கூட்டணி ஆகியவற்றில் ஒன்றைத்தான் தேர்வு செய்யப் போகிறீர்கள். எவற்றையெல்லாம் முன்வைத்து இங்கே ஒரு கூட்டணியை புற
கோஷ்டி பூசல்களால் தடுமாறும் ரஜினி மக்கள் மன்றம்!

கோஷ்டி பூசல்களால் தடுமாறும் ரஜினி மக்கள் மன்றம்!

அரசியல், சேலம், தமிழ்நாடு
ரஜினிகாந்த், 'போர் வரட்டும், அதுவரை காத்திருங்கள்' என்று எதை நினைத்து சொன்னாரோ... ஆனால், சேலத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்குள் நாளுக்குநாள் அதிகரித்து வரும் கோஷ்டி பூசல் அக்கப்போர்களால் உறுப்பினர் சேர்ப்பு உள்ளிட்ட ஒட்டுமொத்த பணிகளும் அடியோடு முடங்கியுள்ளன.   கோஷ்டி பூசல்   திமுக, அதிமுக, காங்கிரஸ் போன்ற வளர்ந்த கட்சிகளுக்கே உரித்தான கோஷ்டி பூசல்களைக் காட்டிலும், இன்னும் முளை விடவே ஆரம்பிக்காத ரஜினி மக்கள் மன்றத்தில் உள்கட்சி மோதல்கள் உச்சத்தை அடைந்துள்ளன.   கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவது உறுதி என்று வெளிப்படையாக அறிவித்தார். அதன்பின்னர், தனது ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றம் என மாற்றினார்.   சலசலப்பு   பாபா முத்திரை, இணையம் வழியாக புதிய உறுப்பினர் சேர்க்கை என அடுத்தடுத்த நகர்வுகளால் வேகமெடுத்தது ரஜினி ம
”ஈழத்தைப் பற்றி பேச இங்கே நான் ஒருவன்தான் இருக்கிறேன்!” – வெடிக்கும் சீமான்!! #Seeman

”ஈழத்தைப் பற்றி பேச இங்கே நான் ஒருவன்தான் இருக்கிறேன்!” – வெடிக்கும் சீமான்!! #Seeman

அரசியல், இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  - சிறப்பு நேர்காணல் -   சேலம் அருகே எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் மக்களிடம் நேரில் கருத்து கேட்கச் சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, ஜூலை 18ம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். ஜாமின் கோரி வழக்கு தொடர்ந்ததில், 'இந்த கைதே சட்ட விரோதமானது,' என்று கண்டித்த சேலம் மாவட்ட நீதிமன்றம், மறுநாள் மாலையில் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஜூலை 20ம் தேதி காலையில், சேலம் மத்திய சிறையில் இருந்து சீமான் வெளியே வந்தார்.   அன்று இரவு, சேலத்தில் சீமான் தங்கியிருந்த ஹோட்டலில் அவரை சந்தித்தோம். நாம் சென்ற நோக்கம் குறித்து, ஹோட்டல் லாபியில் உள்ள இன்டர்காம் மூலம் தகவல் தெரிவித்தோம்.   அவருடைய வழக்கறிஞரின் ஆலோசனையின்பேரில் நம்மை சந்தித்தார் சீமான். நேர்காணலின் துவக்கம் முதல் இறுதிவரை கொஞ்சமும் அவரிடம் எனர்ஜி குறையவில்லை. வார்த்தைகள் ஒவ்வ
கமல் – ரஜினி: இருதுருவ அரசியலா? இணைந்த கைகளா?

கமல் – ரஜினி: இருதுருவ அரசியலா? இணைந்த கைகளா?

அரசியல், சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
விரைவில் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்திருந்த கமல்ஹாசன், தன்னை மக்களுக்கு பிடிக்கவில்லை எனில், மக்கள் விரும்பும் ஒருவருக்கு இயன்ற உதவிகள் செய்யவும் தயாராக இருக்கிறேன் என்று திடீரென்று பல்டி அடித்துள்ளார். கோடம்பாக்கம் என்பது திரையுலகின் கனவுத்தொழிற்சாலை மட்டுமல்ல. அது, அரை நூற்றாண்டுக்கும் மேலாக அரசியல் தலைவர்களை உருவாக்கும் தொழிற்கூடமாகவும் இருந்து வந்திருக்கிறது. இப்போதும் தமிழர்களில் கணிசமானோர் கோடம்பாக்கத்தின் வாசலில்தான் தலைவர்களை தேடிக்கொண்டிருக்கின்றனர். கமல், ரஜினி ஆகியோருக்குள் எழுந்துள்ள அரசியல் அபிலாஷைகளும் அத்தகையதுதான். அவர்களை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா இல்லையா என்பது தேர்தலில்தான் தெரியும். இருவருமே தனித்து இயங்குவது குறித்துதான் பேசி வருகின்றனர். ஆனாலும், தமிழருவி மணியன் போன்றவர்கள் ரஜினி, கமல் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தங்களின் உள்ளக்கிடக்கையை வெளிப