Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: திமுக தலைவர்

கொல்லைப்புறமாக வந்தவர் யார்?: எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

கொல்லைப்புறமாக வந்தவர் யார்?: எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கட்சியின் தலைமைப் பதவிக்கு கொல்லைப்புறமாக வந்தவர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறிவரும் குற்றச்சாட்டுக்கு சேலத்தில் இன்று (செப். 25, 2018) நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.   கண்டன பொதுக்கூட்டம்   திமுக, காங்கிரஸ் கட்சிகளைக் கண்டித்து சேலம் கோட்டை மைதானத்தில் இன்று மாலை அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியது:   ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் போர் நடந்தது. அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, மூன்றரை மணி நேர உண்ணாவிரத நாடகத்தை நடத்தி, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக கூறினார். அதை நம்பி ஈழத்தில் பதுங்கு குழிகளில் இருந்த பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என அனைவரும் வெளியே வந்தனர். அவர்கள் மீது ராஜபக்சே குண்டுமழை பொழிந்து லட்சக்கணக
தயாநிதி மடியிலேயே கை வைத்த துரைமுருகன்!; திமுக பொதுக்குழுவில் சுவாரஸ்யம்!! #DMK #MKStalin

தயாநிதி மடியிலேயே கை வைத்த துரைமுருகன்!; திமுக பொதுக்குழுவில் சுவாரஸ்யம்!! #DMK #MKStalin

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  திமுக பொருளாளராக பதவியேற்ற துரைமுருகன், கட்சிக்காக ஓடியாடி நிதி திரட்ட வேண்டும் என்று தயாநிதி மாறன் யோசனைகூற, அதே அம்பை தயாநிதி மீதே ஏவிய துரைமுருகனால் பொதுக்குழுவில் பலத்த சிரிப்பலை எழுந்தது.   சென்னை அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது.  திமுக தலைவராக மு.க.ஸ்டாலின், பொருளாளராக  தலைமை நிலைய செயலாளர் துரைமுருகன் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். கட்சியின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் வாழ்த்துரை வழங்கினர்.   முன்னாள் மத்திய அமைச்சரும், சன் குழும இயக்குநர்களுள் ஒருவருமான தயாநிதி மாறன் பேசுகையில், மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோருக்கு வாழ்த்துச் சொன்னார். பிறகு, பொருளாளர் பதவியேற்றுள்ள துரைமுருகன், மு.க.ஸ்டாலின்போல ஓடியாடி கட்சிக்கு நிதி குவிக்க வேண்டும் என்று வேடிக்கையாக குறிப்பிட்டார். இதையடுத்து ஏற்புரையாற்றிய துரைமுருகன், அவர் தி
ஸ்டாலின் அடித்த சிக்ஸர்!; கன்னி உரையில் கனல் கக்கிய ‘தலைவர்’!! #DMK #MKStalin

ஸ்டாலின் அடித்த சிக்ஸர்!; கன்னி உரையில் கனல் கக்கிய ‘தலைவர்’!! #DMK #MKStalin

அரசியல், சென்னை, தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
  திமுக தலைவராக பதவியேற்ற பின்னர் நிகழ்த்திய முதல் உரையிலேயே, 'பாஜகவுடன் நெருக்கம் காட்டுகிறதா திமுக?' என்ற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு, திராவிட இயக்கத்தின் அடிப்படை சித்தாந்தங்களைக்காக்க தொண்டர்களுக்கு அறைகூவல் விடுத்து, முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் இன்று ஈர்த்து இருக்கிறார் மு.க.ஸ்டாலின். திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பின்னர் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று (ஆகஸ்ட் 28, 2018) அக்கட்சியின் தலைவராக மகுடம் சூடினார். சென்னை அறிவாலயத்தில் இன்று நடந்த பொதுக்குழுவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்தார். இதுவரை ஸ்டாலின் வகித்து வந்த பொருளாளர் பதவிக்கு, தலைமை நிலையச் செயலாளரான துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   கருணாநிதி மறைந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் ம
காலமானார் கலைஞர் கருணாநிதி!

காலமானார் கலைஞர் கருணாநிதி!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி இன்று (ஆகஸ்ட் 7, 2018) மாலை 6.10 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 94.   திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒன்றரை ஆண்டு காலமாகவே உடல்நலம் குன்றி, சிகிச்சை பெற்று வந்தார். உணவுக்குழாயில் டிரக்கியாஸ்டமி உபகரணம் பொருத்தப்பட்டது. இந்நிலையில், திடீரென்று அவருடைய உடல்நலம் மேலும் குன்றியதை அடுத்து, கடந்த 11 நாள்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று இரவு அவருடைய உடல்நலம் மேலும் மோசமடைந்ததாக தகவல்கள் வெளியாயின. திமுக எம்.பி., எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்கள், முக்கிய தளகர்த்தர்கள் அனைவரும் சென்னைக்கு அழைக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பல ஊர்களில் இருந்தும் காவேரி மருத்துவமனை முன்பு விடிய விடிய திரண்டு நின்று, 'எழுந்து வா தலைவா எழுந்து வா தலைவா...' என்று முழக்கமிட்டபடியே இருந்தனர
கருணாநிதியை சந்தித்தபோது மோடி சொன்னது என்ன?

கருணாநிதியை சந்தித்தபோது மோடி சொன்னது என்ன?

அரசியல், சென்னை, முக்கிய செய்திகள்
பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (நவம்பர் 6, 2017) காலை சென்னை வந்தார். முன்னதாக அவர் தினத்தந்தி நாளிதழின் பவள விழாவில் கலந்து கொண்டார். அதையடுத்து அவர் திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்தார். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார். கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்த நரேந்திர மோடி, ஓய்வு எடுப்பதற்காக டெல்லியில் உள்ள தனது இல்லத்திற்கு வருமாறு கருணாநிதிக்கு அழைப்பு விடுத்தார். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது கருணாநிதிக்கு தொண்டையில் டிரக்கியாஸ்டமி உபகரணம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த உபகரணம் அகற்றப்பட்டு, தொண்டையில் தையல் போடப்பட்டு உள்ளது. இன்னும் அந்த தையல் பிரிக்கப்படவில்லை. இதனால் அவரால் உரக்கப் பேச முடியவில்லை. பணி மூப்
ஓராண்டுக்குப்பின் ‘முதல் பிள்ளை’யை பார்த்து ரசித்தார் கருணாநிதி!

ஓராண்டுக்குப்பின் ‘முதல் பிள்ளை’யை பார்த்து ரசித்தார் கருணாநிதி!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
'என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!' என்று கரகரப்பான குரலில் ஒலிக்கும் இந்த சொற்களுக்கு மயங்காத திமுக தொண்டர்களே இருக்க முடியாது. இப்படி திமுக தலைவர் கருணாநிதி பொதுக்கூட்டங்களில் சொல்லும்போது, கட்சியையும் தாண்டி அனைத்து தரப்பினரும் ரசிப்பார்கள். தொண்டர்களின் விசில் ஒலியும், கரவொலியும் அடங்க வெகுநேரம் ஆகும். திமுகவினர் சோர்வடையும் போதெல்லாம் அவர்களை உசுப்பிவிடுவது 'என் இனிய உடன்பிறப்புகளே'தான். திமுகவினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகமும், கருணாநிதியின் 'டிரெண்டி'யான இந்த பேச்சைக் கேட்டு ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. தற்போது, 94 வயதாகும் மு.கருணாநிதி, உடல்நலக்குறைவால் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தொண்டையில் டிரக்கியாஸ்டமி உபகரணம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதமாக அவருடைய உடல்நலம் வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகிறத