Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: தானம் அறக்கட்டளை

52 ஆயிரம் பெண்கள் சேர்ந்து உருவாக்கிய ஏஸ் பவுண்டேஷன்! தெற்கில் இருந்து புறப்படும் மகளிர் படை!!

52 ஆயிரம் பெண்கள் சேர்ந்து உருவாக்கிய ஏஸ் பவுண்டேஷன்! தெற்கில் இருந்து புறப்படும் மகளிர் படை!!

சேலம், தமிழ்நாடு, மகளிர், மதுரை, முக்கிய செய்திகள்
சேலத்தில் 52 ஆயிரம் பெண்கள் சேர்ந்து 'ஏஸ் பவுண்டேஷன்' (ACE Foundation)என்ற மகளிர் சுய உதவிக்குழுக்களின் மாபெரும் கூட்டமைப்பை தொடங்கி உள்ளனர். இந்தியா முழுவதும் இயங்கி வரும் அமைப்பு ரீதியற்ற பெண்கள் குழுக்களை ஒருங்கிணைக்கும் முகமாக புதிய பயணத்தை தொடங்கியுள்ளது இந்த மகளிர் படை. இது முற்றிலும் அரசியல் சார்பற்ற அமைப்பு.   தானம் அறக்கட்டளையின் ஓர் அங்கமாக இயங்கி வந்த களஞ்சியம் மகளிர் சுயஉதவிக்குழு, இன்று முதல் (பிப்ரவரி 9, 2019) 'ஏஸ் பவுண்டேஷன்' என்ற புதிய அமைப்பினூடாக தனது பயணத்தை தொடங்கி உள்ளது. அதாவது, தானம் அறக்கட்டளைக்கும் இப்புதிய அமைப்பிற்கும் இனி யாதொரு தொடர்பும் இருக்காது. இப்படியொரு துணிச்சலான முடிவை, சேலம் மாவட்டத்தில் களஞ்சியம் மகளிர் சுயஉதவிக்குழுக்களில் இயங்கி வரும் 52 ஆயிரம் பெண்கள் கூட்டாக தீர்மானித்துள்ளனர். இந்தக் கூட்டமைப்பின் ஒட்டுமொத்த நிர்வாகத்தி
பூவனம்: புதிய வானம்! ”வறுமையில் இருந்து மீண்ட குடும்பத்தலைவிகளின் கதை!!” #Kalanjiyam #DHANFoundation

பூவனம்: புதிய வானம்! ”வறுமையில் இருந்து மீண்ட குடும்பத்தலைவிகளின் கதை!!” #Kalanjiyam #DHANFoundation

சேலம், தமிழ்நாடு, புத்தகம், மதுரை, முக்கிய செய்திகள்
(பூவனம்)   மதுரையை தலைமை இடமாகக்கொண்டு செயல்படும் தானம் அறக்கட்டளை, ஓர் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய பல பணிகளை லாபநோக்கமின்றி செய்து வருகிறது. தானம், ஓர் இணை அரசாங்கத்தையே நடத்தி வருகிறது என்பதே சாலப்பொருந்தும். இதன் ஓர் அங்கமான சேலம் மண்டல களஞ்சியம், அக்டோபர் 2, 2018ம் தேதியன்று, 'புதிய வானம்' என்ற நூலை வெளியிட்டுள்ளது. வறுமை, கந்துவட்டி, மது உள்ளிட்ட சமூகக் கேடுகளில் இருந்தும், சமூக துயரங்களில் இருந்தும் மீண்ட 50 குடும்பத் தலைவிகளின் வெற்றிக்கதைகளை, 'புதிய வானம்' நூலில் பதிவு செய்திருக்கிறது, களஞ்சியம்.   வெற்றிக்கதைகளில் இருந்து சில... சில ஆண்டுகள் முன்புவரையிலும்கூட, விசைத்தறிக் கூடங்களில் வாரம் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டிருந்த தன் கணவரை, இன்றைக்கு மாதம் 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க வைத்திருக்கிறார் குடும்பத் தலைவி, இலஞ்சியம்.