Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: தற்கொலை

இபிஎஸ் தொகுதியில் அதிகாலையில் பயங்கரம்! மகளை சுத்தியலால் தாக்கி கொன்ற காய்கறி வியாபாரி; மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை!

இபிஎஸ் தொகுதியில் அதிகாலையில் பயங்கரம்! மகளை சுத்தியலால் தாக்கி கொன்ற காய்கறி வியாபாரி; மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை!

சேலம், முக்கிய செய்திகள்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தொகுதிக்கு உட்பட்ட மணியகாரம்பாளையம் அருகே, பெற்ற மகளை தந்தையே சுத்தியலால் தாக்கிக் கொலை செய்தார். ஊர் மக்கள் கூடியதை அறிந்து அவரும் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள மணியகாரம்பாளையம் ஆதிகாட்டுரைச் சேர்ந்தவர் கோபால் (54). உள்ளூரில் தள்ளுவண்டி மூலம் காய்கறி விற்று வந்தார். இவருடைய மனைவி மணி. இவர்களுக்கு பிரியா (15) என்ற மகள் இருந்தார். அவர், தாதாபுரம் அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர்களுக்கு ரமேஷ்கண்ணன் என்ற மகனும் இருக்கிறார். கோபாலின் மனைவி மணி, கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளி. அடிக்கடி வேலைக்காக வெளியூருக்குச் சென்று விடுவார். மகன் ரமேஷ்கண்ணன், செட்டிமாங்குறிச்சியில் உள்ள ஒரு பேக்கரி
கியூபா போராளி ஃபிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை

கியூபா போராளி ஃபிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
கியூபா புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகனான ஃபிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டியஸ்-பாலார்ட், திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். கியூபா தலைநகரான ஹவானாவில் தற்கொலை செய்துகொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 68. இறந்த நிலையில், நேற்று (பிப்ரவரி 1, 2018) அவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டது. மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஃபிடல் காஸ்ட்ரோவின் முதல் மனைவி மிர்தா டயஸ்&பாலார்ட். அவருக்குப் பிறந்த ஒரே மகன்தான், இப்போது தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் டியஸ்-பாலார்ட். இவர், 'ஃபிடலிட்டோ' என்றும் அந்நாட்டு மக்கள் அழைத்து வந்தனர். ஃபிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டியஸ்-பாலார்ட், முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் பயிற்றுவிக்கப்பட்ட அணுக்கரு இயற்பியலாளர் ஆவார். கியூபாவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'கிரான்மா', ''கடந்த பல மாதங்கங்
பெரியார் பல்கலை முன்னாள் பதிவாளர் திடீர் தற்கொலை ஏன்?;  கைது நடவடிக்கைக்கு பயந்து விஷம் குடித்தாரா?; திடுக்கிடும் தகவல்கள்!

பெரியார் பல்கலை முன்னாள் பதிவாளர் திடீர் தற்கொலை ஏன்?; கைது நடவடிக்கைக்கு பயந்து விஷம் குடித்தாரா?; திடுக்கிடும் தகவல்கள்!

அரசியல், ஈரோடு, கல்வி, சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் அங்கமுத்து (58) திடீரென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதன் பின்னணியில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள தோப்புப்பாளையத்தைச் சேர்ந்தவர் அங்கமுத்து (58). சேலம் பெரியார் பல்கலையில் உடல்கல்வி இயக்குநராக பணியாற்றி வந்தார். நேற்று (டிசம்பர் 18, 2017) காலை அவர் வீட்டில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கிக் கிடந்தார். இதையறிந்த அவருடைய மனைவி விஜயலட்சுமி, உடனடியாக அருகில் உள்ள தன்வந்திரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு கைவிரித்த நிலையில், கணவரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் செல்லும் வழியிலேயே அங்கமுத்து இறந்துவிட்டது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த பெருந்துறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தங்கவேல், தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறார். அவர
சேலம்: 414 ரூபாய்தான் கூலி; அதுவும் 14 மாசமா கொடுக்கல! தற்கொலைக்கு தள்ளும் மாவட்ட நிர்வாகம்

சேலம்: 414 ரூபாய்தான் கூலி; அதுவும் 14 மாசமா கொடுக்கல! தற்கொலைக்கு தள்ளும் மாவட்ட நிர்வாகம்

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, திருநெல்வேலி, முக்கிய செய்திகள்
சேலத்தில், உழைக்கும் மக்களுக்கு வழங்கப்படும் சொற்ப கூலியைக்கூட 14 மாதமாக வழங்காமல் போக்குக் காட்டிவரும் மாவட்ட நிர்வாகத்தால், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.   சமூகநலத்துறையின் கீழ் அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகங்கள் தமிழகம் முழுவதும் 26 இடங்களில் இயங்கி வருகிறது. சேலம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் குடியிருப்புக்கு எதிரில் அய்யந்திருமாளிகையிலும், பெத்தநாயக்கன்பாளையத்திலும் செயல்பட்டு வருகிறது. பெற்றோரில் யாராவது ஒருவரை இழந்த அல்லது இருவரையும் இழந்த பெண் குழந்தைகள் இந்தக் காப்பகத்தில் தங்க வை க்கப்படுகின்றனர். 5 வயது முதல் 18 வரை இந்தக் காப்பகத்தில் தங்க வைத்துப் பாதுகாப்பதுடன், அரசுப்பள்ளியில் படிக்க வைத்தும் வருகிறது. தாய், தந்தை இருவரையும் இழந்த பெண் குழந்தை எனில், அவர்களுக்கு 21 வய
ஆபரேஷன் குபேரன்களும் கந்து வட்டி அரக்கன்களும்!

ஆபரேஷன் குபேரன்களும் கந்து வட்டி அரக்கன்களும்!

அரியலூர், ஈரோடு, கடலூர், கன்னியாகுமரி, கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர், சிறப்பு கட்டுரைகள், சிவகங்கை, சென்னை, சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, தர்மபுரி, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, தேனி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, புதுச்சேரி, பெரம்பலூர், மதுரை, முக்கிய செய்திகள், ராமநாதபுரம், விருதுநகர், விழுப்புரம், வேலூர்
கந்துவட்டிக்காரர்களை ஒடுக்க 'ஆபரேஷன் குபேரா' (Operation Kubera) நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், கண்டுகொள்ளாத காவல்துறையால் கந்து வட்டி அரக்கர்களுக்கு ஏழைகள் இரையாவது தொடர்ந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கந்து வட்டி கொடுமையால் கூலித்தொழிலாளியான இசக்கிமுத்து நேற்று (அக். 23, 2017) குடும்பத்துடன் தீக்குளித்த நிகழ்வு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கிப் போட்டது. இசக்கிமுத்துவின் மனைவி, இரு குழந்தைககளும் தீக்கு இரையாகினர். இசக்கிமுத்து, தீவிர சிகிச்சையில் இருக்கிறார். இனியும் இசக்கிமுத்துவின் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவலம் வேறு யாருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது. இதில் யாருக்கும் இரண்டாம் கருத்து இருக்க முடியாது. ஆனால், கந்துவட்டிக்காரர்களின் கொடுமை மட்டுமேதான் இசக்கிமுத்து, இத்தகைய முடிவெடுக்கக் காரணம் என்று சொல்லிவிட முடியாது. இந்த சமூகத்தி
நெல்லையில் தீக்குளிப்பு: கந்து வட்டி கொடுமைக்கு தாய், மகள்கள் பலி; கணவர் கவலைக்கிடம்

நெல்லையில் தீக்குளிப்பு: கந்து வட்டி கொடுமைக்கு தாய், மகள்கள் பலி; கணவர் கவலைக்கிடம்

தமிழ்நாடு, திருநெல்வேலி, முக்கிய செய்திகள்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (அக். 23, 2017) காலை கந்துவட்டி கொடுமையால் விரக்தி அடைந்த கூலித்தொழிலாளி குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதில் அவருடைய மனைவி, இரு மகள்கள் பரிதாபமாக பலியாயினர். திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (32). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சுப்புலட்சுமி (24). இவர்களுக்கு மதிசரண்யா (4), அக்ஷய சரண்யா (2) என்ற இரு பெண் குழந்தைகள். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் இன்று நடந்து வருகிறது. இந்த முகாமில் மனு கொடுப்பதற்காக இசக்கிமுத்து குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகம் வந்தார். மனுக்கள் கொடுக்கும் அரங்கு முன்பு திடீரென்று அவர்கள் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை தங்கள் மீதும், குழந்தைகள் மீதும் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டன