Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: தமிழ் மொழி

தேனீர்? தேநீர்? எது சரியானது?

தேனீர்? தேநீர்? எது சரியானது?

சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கொரோனா ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை வழங்கி, 34 வகையான கடைகளைத் திறக்க தமிழக அரசு திங்கள்கிழமை (மே 11) முதல் அனுமதி அளித்திருக்கிறது. அவற்றுள் முக்கியமானது, தேநீர் கடைகள் திறப்பு குறித்தது. நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கலாம். ஆனால், கடைகளில் நின்று பருக அனுமதி இல்லை. பாத்திரத்தில் வாங்கிச் செல்லலாம். ஒரு கோப்பை தேநீரை ஒவ்வொரு மிடறாக உறிஞ்சி உறிஞ்சி பருகிக்கொண்டே அரசியல் பேசுவது என்பது தமிழர்களுக்கு எப்போதும் அலாதியானது.   ஊரடங்கு தளர்வு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலும் 'தேனீர்' கடைகள் என்றே சொல்லப்பட்டு இருக்கிறது. இப்போதும் அச்சு ஊடகங்களில் பிழை திருத்தம் பிரிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பத்திரிகைகளில் தினத்தந்திக்கு தனித்த இடம் உண்டு.
பாஜக: எலி ஏன் 8 முழ வேட்டி கட்டிக்கிட்டு ஓடுது? #MannKiBaat #NarendraModi

பாஜக: எலி ஏன் 8 முழ வேட்டி கட்டிக்கிட்டு ஓடுது? #MannKiBaat #NarendraModi

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
உலகிலேயே பழமையான மொழியாக தமிழ் மொழி இருப்பதால் இந்தியாவே பெருமை கொள்கிறது என்று திடீரென்று தமிழின் மீது பாசமழை பொழிந்திருக்கிறார், பிரதமர் நரேந்திர மோடி. இதுதான் சமூக ஊடகங்களில் அண்மைய விவாதங்களில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.   மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நரேந்திர மோடி, வானொலியில் 'மனதில் இருந்து பேசுகிறேன்' (மன் கீ பாத்) உரையாற்றி வருகிறார். கடந்த 25.8.2018ம் தேதி நடந்த ஓர் உரையாடலில்தான் தமிழை வானளாவப் புகழ்ந்திருக்கிறார்.     இப்படி அவர் உயர்தனிச் செம்மொழியாம் தமிழைப் புகழ்வது முதல் முறையல்ல. நடப்பு ஆண்டில் பிப்ரவரி மாதம் டெல்லி டால்கோட்ராவில் நடந்த ஒரு விவாதத்தின்போதும்கூட, 'சமஸ்கிருதத்தைவிட அழகான தமிழ்மொழியை கற்காமல் விட்டது வருத்தம் அளிக்கிறது,' என்று கூறியிருக்கிறார்.     மேடைகளில் தமிழில் சில வ
தமிழ் மொழியை அங்கீகரித்த கூகுள் ஆட்சென்ஸ்!

தமிழ் மொழியை அங்கீகரித்த கூகுள் ஆட்சென்ஸ்!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
இணைய உலகில் மிகப்பெரும் தேடியந்திரமாக உள்ள கூகுள், தனது ஆட்சென்ஸ் (AdSense) மூலமாக இதுவரை 42 மொழிகளுக்கு அங்கீகாரம் அளித்து இருந்தது. ஆட்சென்ஸ் அங்கீகாரம் பெற்ற மொழிகளில் வெளிவரும் இணையதளங்களுக்கு மட்டுமே கூகுள் நிறுவனம் விளம்பரங்கள் வழங்கி வந்தது. அதேநேரம், உலகளவில் 10 கோடி பேருக்கும் மேலான மக்களால் பேசப்பட்டு வரும் தமிழ் மொழிக்கு இதுவரை கூகுள் ஆட்சென்ஸ் அங்கீகாரம் இல்லாமல் இருந்து வந்த நிலையில், தற்போது தமிழ் மொழிக்கும் அங்கீகாரம் அளித்துள்ளது. கடந்த பிப்ரவரி 9, 2018ம் தேதி இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதன்மூலமாக தமிழுக்கு புதிய பொருளாதார கதவுகள் திறந்துள்ளதாகக் கூறலாம். இனி உலகின் பல மூலைகளிலும் உள்ள தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். கடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த தொடர் முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாகவே ஆட்சென்ஸின் அங்கீகாரம் பார்க்கப்படுகிற
ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை: உலகை ஆளப்போகும் தமிழ்!

ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை: உலகை ஆளப்போகும் தமிழ்!

இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உலகப்புகழ் பெற்ற அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் தமிழ் அறிஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக டாக்டர் ஜானகிராமன், டாக்டர் சம்பந்தம் ஆகியோர் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். தமிழ் இருக்கைக்காக நிதியுதவியும் வழங்கினர். அதைத் தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது, ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையிலும் ஜெயலலிதா அறிவித்தார். இதற்காக சுமார் ரூ.33 கோடி செலவாகும் என்று தமிழ் அறிஞர்கள் கூறினர். மேலும், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து இதுவரை ரூ.19 கோடி திரட்டப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைவதற்காக தமிழக அரசின் பங்களிப்பாக ரூ.10 கோடி வழங்கப்படுவதாக தமிழக முதல்வ
அலுவல் மொழி சட்டமும் அத்துமீறும் அரசாங்கமும்!

அலுவல் மொழி சட்டமும் அத்துமீறும் அரசாங்கமும்!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
-பிந்துசாரன், சமூக செயற்பாட்டாளர்-   1950 -ம் ஆண்டு சனவரி 26ம் நாள் இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டு, இந்திய அரசியலமைப்புச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன்படி, இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக இந்தி இருக்கும் எனத் தெரிவிக்கின்றது.   இந்தியுடன் ஆங்கிலமும் 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்து இருக்கும் எனவும், பிறகு 1965ம் ஆண்டு முதல் ஆங்கிலம் ஆட்சிமொழி என்னும் நிலையை தானாக இழக்கும் எனவும் அறிவிக்கின்றது. இந்திய ஒன்றிய அரசின் இந்தி மொழித்திணிப்பை எதிர்த்து, தமிழ்நாட்டில் 1965ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்மொழி காக்கும் போராட்டத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் உயிர் ஈந்தனர்.   அதன் விளைவாக அலுவல் மொழிச்சட்டத்தில், இந்தியுடன் ஆங்கிலமும் அலுவல் மொழியாக நீட்டிக்கப்படும் எனத்திருத்தம் செய்யப்பட்டது. இதனால் இந்திய ஒன்றியத்தில் இருந்து, இந்தி மொழி அல்லாத பிறம