Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: தமிழ்நாடு பணியாளர்கள் அரசு தேர்வாணையம்

டிஎன்பிஎஸ்சி பரிதாபங்கள்: மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க!

டிஎன்பிஎஸ்சி பரிதாபங்கள்: மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க!

சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப்-4 போட்டித்தேர்வு வழக்கம்போல் பல்வேறு குளறுபடியான வினாக்களால், வேலை தேடும் இளைஞர்களின் சாபத்தை அள்ளிக்கட்டிக் கொண்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி ஆணையத் தலைவராக முன்னாள் டிஜிபி நட்ராஜ் பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு புதிய முயற்சிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர் தலைவராக இருந்தபோது குரூப்-2 பிரிவில் இருந்த சில பணியிடங்களை குரூப்-1 தரத்திற்கு கொண்டு சென்றார். குரூப்-2 பிரிவில் நேர்காணல் இல்லாத பணியிடங்களை 'குரூப்-2 ஏ' என்றும், அப்பணியிடங்களை ஒருங்கிணைந்த சார்நிலை பணித்தொகுதியாகவும் மாற்றினார். அண்மையில், குரூப்-4 எழுத்தர் நிலையிலான தேர்வும், கிராம நிர்வாக அலுவலர் தேர்வும் ஒரே தேர்வாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் (பிப்ரவரி 11, 2018) நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தே