Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: தமிழக பட்ஜெட்

தமிழக பட்ஜெட்: குடிசை இல்லா தமிழகம் உருவாக்க இலக்கு; சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

தமிழக பட்ஜெட்: குடிசை இல்லா தமிழகம் உருவாக்க இலக்கு; சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு முதன்முதலாக 2021-2022ம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) வெள்ளிக்கிழமை (ஆக. 13), சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கையை தாக்கல் செய்து, உரையாற்றினார். வழக்கமாக பட்ஜெட் அறிக்கை, காகிதங்களில் அச்சிட்டு அனைத்து எம்எல்ஏக்களுக்கும் வழங்கப்படும். காகிதங்களுக்காக மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கும் நோக்கில், முதன்முதலில் காகிதமில்லா பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் அறிக்கையை அறிந்து கொள்வதற்காக அனைத்து எம்எல்ஏக்களின் இருக்கையிலும் கணினித் திரை வைக்கப்பட்டது.   பட்ஜெட் 2021 சிறப்பு அம்சங்கள்:   இலவச வீடுகள்:   நடப்பு 2021 - 2022ம் நிதியாண்டில் 8017 கோடி ரூபாய் செலவில் சுமார் 2 லட்சம் இலவச வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். கிராமப்புற
தமிழக பட்ஜெட் தாக்கல்: கடன் சுமை 5.70 லட்சம் கோடியாக உயரும்!

தமிழக பட்ஜெட் தாக்கல்: கடன் சுமை 5.70 லட்சம் கோடியாக உயரும்!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் அறிக்கை, சட்டப்பேரவையில் செவ்வாயன்று (பிப். 23) தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தின் கடன் சுமை, அடுத்த ஆண்டு மார்ச் 31க்குள் 5.70 லட்சம் கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.   தமிழக சட்டப்பேரவையில், 2021-2022ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட், செவ்வாய்க்கிழமை (பிப். 23) தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். விரைவில் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளதால், இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.   நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:   தமிழக அரசின் நிதி பற்றாக்குறை மாநில அரசின் மொத்த உற்பத்தி மதிப்பில் 2021-2022ம் நிதியாண்டில் 4 சதவீதத்திற்குள்ளும், 2022-2023ம் நிதியாண்டில் 3.5 சதவீதத்திற்குள்ளும்,
தமிழக பட்ஜெட்: விவசாயிகளுக்கு ரூ.8000 கோடி பயிர்க்கடன்;  3 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

தமிழக பட்ஜெட்: விவசாயிகளுக்கு ரூ.8000 கோடி பயிர்க்கடன்; 3 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விவசாயம்
வரும் 2018-19ம் நிதியாண்டில் விவசாயிகளுக்கு, ரூ.8000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும் என்றும், 3 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என்றும் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.   திமுக வெளிநடப்பு:   2018&2019ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை, தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 15, 2018) தாக்கல் செய்தார். காலை 10.30 மணிக்கு சட்டப்பேரவை கூடியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண் அரசைக் கண்டித்தும், இது தொடர்பாக சந்தித்துப் பேச தமிழக கட்சிகளுக்கு பிரதமர் நேரம் ஒதுக்காததைக் கண்டித்தும் திமுக எம்எல்ஏக்கள் இன்று கருப்பு சீருடையில் வந்திருந்தனர். ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கியதுமே, திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவையி