Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: தமிழகம்

குஜராத் தேர்தல் முடிவு தமிழகத்தில் எதிரொலிக்குமா?; பாஜகவை ‘தாளிக்கும்’ மீம் கிரியேட்டர்கள்!

குஜராத் தேர்தல் முடிவு தமிழகத்தில் எதிரொலிக்குமா?; பாஜகவை ‘தாளிக்கும்’ மீம் கிரியேட்டர்கள்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
குஜராத், ஹிமாச்சல் பிரதேச மாநில தேர்தல் முடிவுகளின் தாக்கம் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்ற பாஜக தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா ஆகியோரை மீம் கிரியேட்டர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். தமிழகத்தில் ஒருபோதும் மதவாத அரசியல் எடுபடாது என்றும் சூடாக பதிலடி கொடுத்துள்ளனர். நடந்து முடிந்த குஜராத் மற்றும் ஹிமாச்சல்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக ஆட்சியைப் பிடித்திருக்கிறது. ஒரு வாக்கு அல்லது ஒரு தொகுதி முன்னிலை பெற்றாலும் வெற்றிதான். அதனால் வேண் டுமானால் தேர்தல் வெற்றியை பாஜக கொண்டாடலாமே தவிர, சட்டை காலரை தூக்கிவிட்டுக்கொள்ளும் வெற்றி அல்ல. குறிப்பாக, குஜராத் மாநிலத்தில். குஜராத் மாநிலத்தில் ஒட்டுமொத்த காபினெட் அமைச்சர்களையும் களமிறக்கி, தேர்தல் வேலை பார்த்தது பாஜக. காங்கிரஸின் மணிசங்கர அய்யர், பாகிஸ்தானுடன் சேர்ந்து கொண்டு தன்னை கொல்ல சதி செய்வதாகவெல்லாம் உச்சக
தமிழகத்தின் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!; பின்னணி என்ன?

தமிழகத்தின் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!; பின்னணி என்ன?

அரசியல், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் விரைவில் பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யா, கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார். அதைத்தொடர்ந்து, மஹாராஷ்டிரா மாநில ஆளுநராக உள்ள சி.வித்யாசாகர் ராவ், தமிழக பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு செப். 22ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இறந்தார். இதைத்தொடர்ந்து அதிமுக சசிகலா, ஓபிஎஸ், இபிஎஸ் அணி என மூன்று அணிகளாக உடைந்தது. தமிழக ஆளுங்கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பங்களால் ஆட்சியும் ஸ்திரத்தன்மையை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. தமிழகத்திற்கு முழுநேர ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக வ
நீட் தேர்வு: போராட்டக் களமானது தமிழகம்!

நீட் தேர்வு: போராட்டக் களமானது தமிழகம்!

கல்வி, கோயம்பத்தூர், சென்னை, தஞ்சாவூர், தமிழ்நாடு, திருவாரூர், முக்கிய செய்திகள், விழுப்புரம்
நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பரவலாக மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது. உள்கட்சி பிளவுகளால், ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளவே தடுமாறிக் கொண்டிருக்கும் தமிழக அரசு, போராட்டங்களைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் கையறு நிலையில் இருக்கிறது. முத்துக்குமார், செங்கொடி ஆகியோரின் உயிர் தற்கொடைகளைத் தொடர்ந்து தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. அதேபோல், மருத்துவப் படிப்பு கானலான விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் மரணம் காரணமாக, தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வெடித்துள்ளது. கடந்த சில நாள்களாகவே வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக 'மெரீனாவில் ஒன்றுகூடுவோம்' என்ற பெயரில் தகவல்கள் பரவின. இதனால் உஷார் அடைந்த தமிழக காவல்துறை, மெரீனா கடற்கரையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியது. கடற்கரை பகுதியில் குழுக்களாக சுற்றுவோ