Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: தங்கப்பதக்கம்

உலகக்கோப்பை ஏர் ரைஃபிள் போட்டியில் தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை!

உலகக்கோப்பை ஏர் ரைஃபிள் போட்டியில் தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை!

உலகம், கடலூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விளையாட்டு
பிரேசிலில் நடந்த துப்பாக்கி சுடுதல் (ஏர் ரைஃபிள்) போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் கடலூரைச் சேர்ந்த இளம் வீராங்கனை இளவேனில் வாலறிவன். அவருக்கு உலகம் முழுவதும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.   பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில், தற்போது மூத்தோர்களுக்கான உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் (ஏர் ரைஃபிள்) போட்டி நடந்து வருகிறது. உலகம் முழுவதும் 72 நாடுகளைச் சேர்ந்த 541 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.   நேற்று (ஆகஸ்ட் 28, 2019) நடந்த இறுதிப்போட்டியில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவன், 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இரண்டாம் இடத்தை, பிரிட்டனை சேர்ந்த வீராங்கனை சியோனட் மின்டோஸ் பெற்றார். அவர் 250.6 புள்ளிகள் எடுத்தார்.
உங்களை யாரோடும் ஒப்பிடாதீர்கள்! பட்டமளிப்பு விழாவில் நீதிபதி அறிவுரை!!

உங்களை யாரோடும் ஒப்பிடாதீர்கள்! பட்டமளிப்பு விழாவில் நீதிபதி அறிவுரை!!

கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
  ''உங்களை யாரோடும் ஒப்பிடவோ, யாரைப் போலவும் இருக்க வேண்டும் என்றோ முயற்சிக்க வேண்டாம்; ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள்,'' என்று சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ச.ஜெகதீசன் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார்.   சேலம் பெரியார் பல்கலையில் செவ்வாய்க்கிழமை (நவ. 27, 2018) நடந்த பதினெட்டாவது பட்டமளிப்பு விழாவில் அவர் இவ்வாறு கூறினார்.   130 பேருக்கு தங்கப்பதக்கம்: பல்கலை அளவில் முதல் மதிப்பெண் பெற்ற 130 மாணவ, மாணவிகளுக்கு வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் தங்கப்பதக்கம் வழங்கினார். பல்வேறு துறைகளில் பிஹெச்.டி. ஆய்வை முடித்த 130 பேருக்கு முனைவர் பட்டம் வழங்கி, பாராட்டினார்.   பெரியார் பல்கலை மற்றும் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்கலையில் இணைவு பெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 49534 பேருக்கு