Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: ஜிஎஸ்டி வரி

‘நச்’ கேள்விகள்; ‘பன்ச்’ பதில்கள்!; டெல்லியில் தெறிக்கவிட்ட மு.க.ஸ்டாலின்!

‘நச்’ கேள்விகள்; ‘பன்ச்’ பதில்கள்!; டெல்லியில் தெறிக்கவிட்ட மு.க.ஸ்டாலின்!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று 42 நாள்கள் ஆன நிலையில், பிரதமர் நரேந்திரமோடியை மரியாதை நிமித்தமாக டெல்லியில் வியாழனன்று (ஜூன் 17) நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார். மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்கக் கூடியவர்கள் பெரும்பாலும் முப்பது நாள்களுக்குள்ளாகவே பிரதமருடனான சம்பிரதாயமான சந்திப்பை முடித்து விடுவார்கள். ஆனால் கொரோனா பெருந்தொற்றால் தமிழகமே ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறிய வேளையில் பொறுப்பேற்றதால் இந்த சந்திப்புக்கு 42 நாள்கள் ஆகியிருக்கின்றன.   டெல்லி சென்ற ஸ்டாலினுக்கு திமுக எம்பிக்கள் அளித்த உற்சாக வரவேற்பு லோக்கல் மீடியாக்களையும், வடக்கத்திய அரசியல் தலைவர்களையும் கவனிக்க வைத்திருக்கிறது.   பிரதமரிடம் அதிமுக முன்னாள் முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் மீதான ஊழல்கள் பற்றியும் ஸ்டாலின் புகார் புஸ்தகம் வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனா
மாணவர்களை ஈர்த்த சேலம் புத்தகத்திருவிழா! ”கல்கி, சாண்டில்யன் படைப்புகளுக்கு வரவேற்பு” #SalemBookFestival

மாணவர்களை ஈர்த்த சேலம் புத்தகத்திருவிழா! ”கல்கி, சாண்டில்யன் படைப்புகளுக்கு வரவேற்பு” #SalemBookFestival

சேலம், தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலத்தில் நடந்து வரும் புத்தக திருவிழாவுக்கு பெரியவர்களைக் காட்டிலும் பள்ளி மாணவர்கள் அதிகளவில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, புத்தகங்களை வாங்கிச்செல்வது பதிப்பாளர், புத்தக விற்பனையாளர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்டுத்தி உள்ளது.   முதன்முதலாக சேலத்தில் ஆண்டுதோறும் நியூ செஞ்சுரி புத்தக நிலையம் சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகே, புத்தகக் கண்காட்சி நடத்தி வருகிறது. இந்த ஆண்டு முதன்முதலாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணியின் முயற்சியால், பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்துடன் இணைந்து பிரம்மாண்ட புத்தகத் திருவிழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.   21ம் தேதி வரை திருவிழா   சேலம் போஸ் மைதானத்தில் கடந்த 9.11.2018ம் தேதி 1வது சேலம் புத்தகத்திருவிழா தொடங்கியது. வரும் 21ம் தேதி வரை இத்திருவிழா நடக்கிறது. காலை 11 மணி முதல் இரவு
லாரி ஸ்டிரைக்: ரூ.3000 கோடி வர்த்தகம் பாதிப்பு!; அத்தியாவசிய பொருள்கள் விலை உயரும்!!

லாரி ஸ்டிரைக்: ரூ.3000 கோடி வர்த்தகம் பாதிப்பு!; அத்தியாவசிய பொருள்கள் விலை உயரும்!!

இந்தியா, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் சரக்கு லாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருள்களின் விலைகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 3000 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.     மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பிரிமியம் உயர்வு, டீசல் விலை உயர்வு ஆகியவற்றைக் குறைக்க வலியுறுத்தியும், நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரியும் இந்தியா முழுவதும் காலவரையற்ற சரக்கு லாரிகள் ஸ்டிரைக் நேற்று (ஜூலை 20, 2018) தொடங்கியது. இரண்டாம் நாளாக இன்றும் ஸ்டிரைக் தொடர்கிறது.   சேலம் மாவட்டத்தில் 35 ஆயிரம் சரக்கு லாரிகள் உள்பட தமிழகம் முழுவதும் 4.50 லட்சம் லாரிகள் இந்த ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன. நாடு முழுவதும் 68 லட்சம் சரக்கு லாரிகள் ஈடுபட்டுள்ளன. இரு நாள்களில் 90 சதவீத லாரிகள் ஓடவில்லை. வெளிமாநிலங்களுக்கு சரக்கு ஏற
177 பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு;  தவறை உணர்ந்த பாஜக!

177 பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு; தவறை உணர்ந்த பாஜக!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
இந்திய அரசு 177 பொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரியை இன்று (நவம்பர் 10, 2017) அதிரடியாக குறைத்துள்ளது. இதன்மூலம், எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டிய தவறுகளை பாஜக ஒப்புக்கொண்டதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. நாடு முழுவதும் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. ஒரே இந்தியா ஒரே வரி என்ற பாஜகவின் கொள்கையாக இந்த புதிய வரி சீர்திருத்தம் கருதப்படுகிறது. இதன்படி 0, 5, 12, 18, 28 என ஐந்து படிநிலைகளில் ஜிஎஸ்டி வரிகள் நிர்ணயிக்கப்பட்டன. அத்தியாவசியமான பொருள்களில் பலவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு இருந்தாலும், முக்கியமான பல பொருள்களுக்கும், சேவைகளுக்கும் அதிகபட்ச வரி விதிக்கப்பட்டு இருப்பதும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் போன்றோர், மாநிலங்களில் மதிப்புக்கூடுதல் வரிகள் அமலில் இருக்கும்போது