Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: சேலம் மத்திய சிறை

சிறை கொட்டடியில் சந்தன வீரப்பன் அண்ணன் மாதையன் மரணம்; வயதான கைதிகளின் கதி என்ன?

சிறை கொட்டடியில் சந்தன வீரப்பன் அண்ணன் மாதையன் மரணம்; வயதான கைதிகளின் கதி என்ன?

ஈரோடு, சேலம், தமிழ்நாடு
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன், மே 25ம் தேதி, புதன்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தார். 78 வயதான மாதையன், நீண்ட காலமாக சிறைக் கொட்டடியில் இருந்தே உயிர் விட்டிருக்கிறார். அவருடைய மரணம், தமிழக சிறைச்சாலைகள் வயதான கைதிகளின் வதை முகாம்களாக மாறி வருகிறதா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது. சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன், ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வனச்சரகர் சிதம்பரம் என்கிற சிதம்பரநாதன் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். 1987ல் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆரம்பத்தில், சிதம்பரம் கொலை வழக்கில் மாதையன் பெயர் சேர்க்கப்படவில்லை. ஆனாலும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 1996ம் ஆண்டு அவருக்கு
கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜ் கூட்டாளிக்கு மருத்துவ பரிசோதனை! #Gokulraj

கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜ் கூட்டாளிக்கு மருத்துவ பரிசோதனை! #Gokulraj

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 15வது குற்றவாளியான கிரிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை (நவம்பர் 3, 2018) மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.   ஆணவக்கொலை   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி வாலிபர் கோகுல்ராஜ் (23). கடந்த 23.6.2015ம் தேதியன்று வீட்டில் இருந்து கிளம்பிச்சென்ற அவர், 24.6.2015ம் தேதி மாலை, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தண்டவாளத்தில் சடலம் கவிழ்ந்து கிடந்தது. தலை வேறு, உடல் வேறாக துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது.   அவர் கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த, தன்னுடன் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்து வந்த சுவாதியை காதலித்து வந்ததாகவும், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர் ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்
”சாரதாவுக்கு எல்லாம் தெரியும்…!” சிறுமியை கொன்ற தினேஷ்குமார் உளறல்!

”சாரதாவுக்கு எல்லாம் தெரியும்…!” சிறுமியை கொன்ற தினேஷ்குமார் உளறல்!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
- சிறப்பு செய்தி -   சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி தெற்கு காட்டுக்கொட்டாயைச் சேர்ந்த சிறுமி ராஜலட்சுமியை (14), வீடு அருகே வசிக்கும் தினேஷ்குமார் (25), கடந்த 22.10.2018ம் தேதி இரவு கழுத்து அறுத்து படுகொலை செய்தார். தலை வேறு, உடல் வேறாக வீசியெறிந்த சம்பவம் பல்வேறு மட்டங்களிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின.   கொடுவாளால் வெட்டி கொலை முதல் தகவல் அறிக்கையில் கொலையாளி தினேஷ்குமார், சம்பவத்தன்று சிறுமியை பாலியல் உறவுக்கு அழைத்ததாகவும், அதை தன் தந்தையிடம் சொல்லி விடுவதாகக்கூறிவிட்டு சிறுமி ஓடியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொடுவாளால் வெட்டி கொலை செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.   கொலையாளியின் மனைவி சாரதாவோ, கதிர் அறுக்கும் வாகன ஓட்டுநரான தன் கணவர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அக். 20ம் தேதி முதல், மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் காணப்பட்டார் என்றும்,
சேலம்: லஞ்ச வழக்கில் கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட்!

சேலம்: லஞ்ச வழக்கில் கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் அருகே, லஞ்ச வழக்கில் கையும் களவுமாக கைது செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், ஏட்டு இளங்கோ ஆகிய இருவரும் இன்று (ஆகஸ்ட் 11, 2018) பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.   சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள சின்னதண்டா கிராமத்தில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, கடந்த 3ம் தேதி சிலர் சேவல்கட்டு பந்தயம் நடத்தினர். இதற்கு காவல்துறையில் அனுமதி பெறவில்லை எனத் தெரிகிறது. இதனை அப்பகுதி மக்கள் பலர் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கொளத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்றார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வருவதை அறிந்ததும் அங்கிருந்த பலரும் தெறித்து ஓடினர். அப்போது பலர் தங்களது மோட்டார் சைக்கிள்களையும் விட்டுவிட்டு ஓடிவிட்டனர். அந்த வாகனங்களை எல்லாம் போலீசார் கொளத்தூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.   இந
சேலத்தில் ரூ.23 லட்சம் போதை பொருள்கள் பறிமுதல்; 4 பேர் கைது!

சேலத்தில் ரூ.23 லட்சம் போதை பொருள்கள் பறிமுதல்; 4 பேர் கைது!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலத்திற்கு, அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருள்கள் கடத்தி வரப்படுவதாக மாநகர காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார் (சூரமங்கலம்), ஷர்மிளா பானு (கொடுங்குற்றப்பிரிவு), எஸ்ஐ அங்கப்பன் (கருப்பூர்), ஏட்டு ராஜ்குமார் (நுண்ணறிவுப்பிரிவு) ஆகியோர் இன்று (ஆகஸ்ட் 11, 2018) அதிகாலை கருப்பூர் செக்போஸ்ட் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். செக்போஸ்ட் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று பொலிரோ பிக்அப் வாகனங்களை போலீசார் சோதனை செய்தனர். அந்த வாகனங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை போதைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது.   ஒவ்வொரு வாகனத்தில் இருந்தும் தலா 50 மூட்டைகள் வீதம் மொத்தம் 150 மூட்டைகள் கைப்பற்றப்பட்டன. ஒவ்வொரு மூட்டையிலும் தலா 30 கிலோ போதைப்பொருள் பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றின் மதி
சேலம் சிறையில் மன்சூர் அலிகான் திடீர் உண்ணாவிரதம்!; ”யாருக்காக எட்டு வழிச்சாலை?”

சேலம் சிறையில் மன்சூர் அலிகான் திடீர் உண்ணாவிரதம்!; ”யாருக்காக எட்டு வழிச்சாலை?”

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நடிகர் மன்சூர் அலிகான், எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திடீரென்று இன்று (ஜூன் 23, 2018) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.   சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தும்பிப்பாடி கிராமத்தில் கடந்த மே 3ம் தேதி, காமலாபுரம் விமான நிலையம் விரிவாக்கம், எட்டு வழிச்சாலை திட்டங்களுக்காக விளை நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சூழலியல் ஆர்வலர் பியூஷ் மானுஷ், நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினர்.   குறிப்பாக மன்சூர் அலிகான், 'எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை வெட்டிக் கொன்றுவிட்டு ஜெயிலுக்குப் போவேன்,' என்று ஆவேசமாக பேசினார். கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக கடந்த 17ம் தேதி காலை, சென்னை அரும்பாக்கத்தில் வீட்டில் தூங்கிக