Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: சென்னை

இனிமேல் பெட்டிக்கடை வைக்கவும் ஆதார் கட்டாயம்; ஹைகோர்ட் சொல்லிடுச்சு!

இனிமேல் பெட்டிக்கடை வைக்கவும் ஆதார் கட்டாயம்; ஹைகோர்ட் சொல்லிடுச்சு!

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பிறப்பு முதல் இறப்பு வரை ஆதார் அட்டை அவசியம் என்ற நிலையில், இப்போது சாலையோரங்களில் பெட்டிக்கடை வைப்பதென்றாலும் ஆதார் அட்டை அவசியம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலையோரம் பெட்டிக்கடை வைக்க அனுமதி வழங்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அப்போது மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பெட்டிக்கடை நடத்த உரிமம் பெறுபவர்கள் வேறு நபர்களுக்கு விற்றுவிடுவதாகக் கூறினார். இதனையடுத்து, உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: ஒரு நபர் அதிக பெட்டிக்கடைகளை திறக்க தடை விதிக்க ஏதுவாக, அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும்போது, ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும். அவ்வாறு விண்ணப்பம் செய்யும் போது, ஒரு மாதத்தில் பரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி, மருத்துவமனை அருகே பெட்டிக்கடை வைக்கவும், சிகரெட்
ஆர்.கே.நகர்: 89013 ஓட்டுகள் பெற்று டிடிவி தினகரன் வெற்றி; டெபாசிட் இழந்தது திமுக; முழு விவரம்

ஆர்.கே.நகர்: 89013 ஓட்டுகள் பெற்று டிடிவி தினகரன் வெற்றி; டெபாசிட் இழந்தது திமுக; முழு விவரம்

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பிரஷ்ஷர் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன், 89013 வாக்குகள் பெற்று அமோக பெற்றி பெற்றார். ஆளும் அதிமுக வேட்பாளர் மதுசூதனனைவிட அவர் 40707 வாக்குகள் கூடுதலாக பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட திமுக உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். கடந்த 2016ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி அவர் உடல்நலக்குறைவால் இறந்தார். கடந்த ஓராண்டாக அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதற்கிடையே ஆளும் அதிமுகவுக்குள் ஏற்பட்ட உள்கட்சி பிரச்னைகளால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஓரணியாகவும், டிடிவி தினகரன் தலைமையில் மற்றொரு அணியாகவும் பிளவு பட்டது. முடக்கப்பட்டு இருந்த இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சிப்
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!

கல்வி, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு - 2018 எழுத உள்ள தனித்தேர்வர்கள், வரும் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு: தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு 2018ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 20ம் தேதி வரை நடக்கிறது. முதன்முதலாக எஸ்எஸ்எல்சி தேர்வு எழுத உள்ள நேரடி தனித்தேர்வர்கள் வரும் 22.12.2017ம் தேதி முதல் 29.12.2017ம் தேதி வரை, அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசுத்தேர்வு சேவை மையத்திற்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஞாயிற்றுக்கிழமைகள் நீங்கலாக மற்ற அனைத்து வேலை நாள்களிலும் இந்த மையம் செயல்படும். முதன்முறையாக தேர்வு எழுதினாலும் அனைத்து பாடத்தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க வேண்டும். மேற்கண்ட நாள்களில் பதிவு செய்யாமல் தவறவிட்டவர்கள், 2.1.2018ம் தேதி முதல் 4.1.2108ம் தேதி வரை தட்கல்
ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சென்னை இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை!

ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சென்னை இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை!

இந்தியா, சென்னை, தமிழ்நாடு, திருநெல்வேலி, முக்கிய செய்திகள்
சென்னை மதுரவாயலைச் சேர்ந்த காவல்துறை ஆய்வாளர், ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளை கும்பலால் இன்று (டிசம்பர் 13, 2017) சுட்டுக்கொல்லப்பட்டார். வீர மரணம் அடைந்த ஆய்வாளருக்கு, சக காவல்துறையினர் இரங்கலை தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த தேவர்குளம் சாலைப்புதூரைச் சேர்ந்தவர் பெரியபாண்டியன் (48). சென்னை மதுரவாயல் டி-4 காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அவர் கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதிதான் இந்த காவல் சரகத்திற்கு மாறுதல் ஆகி வந்துள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்த முகேஷ்குமார் (37) என்பவர் புழல் புதிய லட்சுமிபுரம் என்ற பகுதியில் மஹாலட்சுமி தங்க மாளிகை என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வந்தார். அந்த கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள், சுவரில் துளையிட்டு 3.50 கிலோ தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச்சென்றது. கடந்த நவம்பர் 16ம் தேதி இந்த துணிகரச் சம்பவம
இப்படை வெல்லும் – சினிமா விமர்சனம்

இப்படை வெல்லும் – சினிமா விமர்சனம்

சினிமா, முக்கிய செய்திகள்
சென்னையில் குண்டுகளை வெடிக்கச் செய்து நாச வேலைகளில் ஈடுபடும் ஒரு பயங்கரவாதியிடம் சிக்கிக்கொள்ளும் கதாநாயகன், அவரிடம் இருந்து தப்பித்தாரா? குண்டுவெடிப்பில் இருந்து மக்களை காப்பாற்றினாரா? என்பதுதான், 'இப்படை வெல்லும்' படத்தின் ஒன்லைன். நடிகர்கள்: உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், சூரி, ஆர்.கே.சுரேஷ், டேனியல் பாலாஜி, ராதிகா, எம்எஸ் பாஸ்கர், ரவி மரியா மற்றும் பலர். இசை: டி. இமான்; ஒளிப்பதிவு: ரிச்சர்டு டி நாதன்; எடிட்டிங்: பிரவீன்; தயாரிப்பு: லைகா புரொடக்ஷன்ஸ்; இயக்கம்: கவுரவ் நாராயணன். சர்வதேச பயங்கரவாதியான சோட்டா (டேனியல் பாலாஜி), சென்னையில் சில இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து, அமைதியை சீர்குலைக்க திட்டம் தீட்டுகிறார். அதற்காக அவர் உத்தரபிரதேச சிறையில் இருந்து தப்பித்து, சென்னை வந்து சேர்கிறார். ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் நாயகன் மதுசூதனன் (உதயநிதி ஸ்டாலின்)
அடடடா, நாட்டுல இந்த பக்தாஸ் தொல்ல தாங்க முடியலப்பா!

அடடடா, நாட்டுல இந்த பக்தாஸ் தொல்ல தாங்க முடியலப்பா!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இந்து தீவிரவாதம் குறித்து கமல்ஹாஸன் தெரிவித்த கருத்துக்கு எதிராக மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் ட்விட்டரில் கருத்துக்கூறிய பாஜக ஹெச்.ராஜாவை கிண்டலடித்து இணையவாசிகள் 'மீம்'கள் பதிவிட்டுள்ளனர். நடிகர் கமல்ஹாஸன், வார இதழ் ஒன்றில் எழுதி வரும் கட்டுரையில், ''இந்து தீவிரவாதம் இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்,'' என்று கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பாஜக தரப்பில் கடுமையான எதிர்வினைகள் கிளம்பி இருக்கும் நிலையில், அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவும் இதுபற்றி ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''விஸ்வரூபம் படப்பிரச்னையின்போது, முஸ்லிம் அமைப்புகள் 20 வருடத்திற்கு கமலின் பயம் போகாது என்றது சரிதான் போல. இந்துக்கள் மீது தாக்குதல் வெட்கம்,'' என்று நேற்று (நவம்பர் 2, 2017) கருத்து வெளியிட்டு இருந்தார். மேலு
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 2 சிறுமிகள் பலி: அலட்சியத்தால் இரையான அவலம்!

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 2 சிறுமிகள் பலி: அலட்சியத்தால் இரையான அவலம்!

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சென்னை கொடுங்கையூர் ஆர்ஆர் நகரில், அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த இரண்டு சிறுமிகள் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலியாயினர். சிறுமிகள் பலி: சென்னை கொடுங்கையூர் ஆர்ஆர் நகரைச் சேர்ந்த பாவனா (11), யுவஸ்ரீ (10) ஆகியோர் அங்குள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தனர். வடகிழக்கு பருவமழை காரணாக அப்பகுதியில் பள்ளிக்கு இன்று (நவம்பர் 1, 2017) விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் இரண்டு சிறுமிகளும் இன்று மதியம் வீடு அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். தெருவோரம் இருந்த மின்பெட்டியில் (Electricity Piller Box) இருந்து ஒரு மின்சார கம்பி அறுந்து மண் தரையில் நீண்டு கிடந்தது. அதை அறியாமல் மதித்த சிறுமிகள், மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டனர். இருவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாயினர். அவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த மற்றொரு சிறுமி மின்சாரம் பாய்ந்ததில் பலத்த கா
ரஜினிக்கு சொந்த வீட்டிலேயே கடும் எதிர்ப்பு;  லதா ரஜினிகாந்த் வழக்கு!

ரஜினிக்கு சொந்த வீட்டிலேயே கடும் எதிர்ப்பு; லதா ரஜினிகாந்த் வழக்கு!

இந்தியா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பணமதிப்பிழப்புத் திட்டத்தை நரேந்திர மோடி அறிவித்தபோது, அதை வரவேற்று ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், அந்த திட்டத்தால்தான் வருமானம் பாதிக்கப்பட்டதாக அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை சி.பி. ராமசாமி சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், இந்த வளாகத்தில் உள்ள ஒரு கடையை வாடகைக்கு எடுத்து, அதில் டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார். இதற்காக அந்தக் கடைக்கு அவர் மாதம் 3,702 ரூபாய் வாடகை செலுத்தி வந்தார். இந்த நிலையில், சென்னை மாநகராட்சி கடந்த ஜூன் மாதம் கடையின் வாடகையை உயர்த்தியது. இதுகுறித்து மாநகராட்சி சார்பில் லதா ரஜினிகாந்திற்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸில், மார்ச் மாதம் முதல் 21,160 ரூபாய் வாடகை கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னை