Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: சென்செக்ஸ்

பாஜக வெற்றி: புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச்சந்தை

பாஜக வெற்றி: புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச்சந்தை

முக்கிய செய்திகள், வர்த்தகம்
நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்று மாநிலங்களில் பாஜக பெற்ற அதிரிபுதிரியான வெற்றியின் தாக்கம், இந்தியப் பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. இதனால் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை (டிச. 4) சென்செக்ஸ் 1400 புள்ளிகளுக்கு மேலும், நிப்டி 400 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது. வர்த்தக நேர முடிவில் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 418 புள்ளிகள் (2.07%) உயர்ந்து, 20686 புள்ளிகளில் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 1383 புள்ளிகள் உயர்வுடன் (2.05%) 68865 புள்ளிகளில் நிறைவடைந்தது. பொதுத்துறை வங்கிகள் 3.85 சதவீதம், நிதிச்சேவை நிறுவனப் பங்குகள் 3.23 சதவீதம், எனர்ஜி துறை பங்குகள் 2.61 சதவீதம், ரியால்டி நிறுவனப் பங்குகள் 2.03 சதவீதம் மற்றும் உலோகத்துறை பங்குகளும் ஏற்றம் கண்டன. அதேநேரம், மருந்து மற்றும் ஊடகத்துறை பங்குகள் லே
ஏற்றத்தில் பங்குச்சந்தைகள்! சென்செக்ஸ் 57600 புள்ளிகளில் நிறைவு!!

ஏற்றத்தில் பங்குச்சந்தைகள்! சென்செக்ஸ் 57600 புள்ளிகளில் நிறைவு!!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
கடந்த இரண்டு செஷன்களாக சரிவில் இருந்த இந்திய பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை (டிச. 7) மீண்டெழுந்து ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்திருக்கின்றன. புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் பற்றிய அதீத அச்சுறுத்தல்களால் உலகம் முழுவதும் கடந்த வார இறுதியிலும், நடப்பு வாரத்தின் முதல் நாளான திங்களன்றும் பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன.   இந்நிலையில், முந்தைய கொரோனா வைரஸைக் காட்டிலும் பெரிய அளவில் பாதிப்பை ஒமிக்ரான் வைரஸ் ஏற்படுத்தாது என்ற தகவலால் பங்குச்சந்தைகள் இன்று தடாலடியாக மீண்டெழுந்தன.   இன்று வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 886.51 புள்ளிகள் (1.56%) உயர்ந்து, 57633 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்திருந்தது. அதேபோல, தேசிய பங்குச்சந்தையான நிப்டி 264.45 புள்ளிகள் உயர்ந்து 17176.70 புள்ளிகளில் நிறைவு பெற்றது. இது, முந்தைய நாள்
2ஜி தீர்ப்பு எதிரொலி: டிபி ரியால்டி, சன் டிவி, யுனிடெக் பங்குகள் உயர்வு!

2ஜி தீர்ப்பு எதிரொலி: டிபி ரியால்டி, சன் டிவி, யுனிடெக் பங்குகள் உயர்வு!

இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வர்த்தகம்
2ஜி அலைக்கற்றை வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, மாறன் சகோதரர்களின் சன் டிவி நெட்வொர்க் மற்றும் டிபி ரியால்டி, யுனிடெக் நிறுவனங்களின் பங்குகள் இன்று 20 சதவீதம் வரை உயர்ந்தன. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா, கனிமொழி எம்பி உள்ளிட்டோர் மீதான 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கு மற்றும் கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்த வழக்கில் இன்று (டிசம்பர் 21, 2017) டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கில் டிபி ரியால்டி, யுனிடெக் நிறுவன இயக்குநர்கள் பெயர்களும் சேர்க்கப்பட்டு இருந்தன. போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி 2ஜி அலைக்கற்றை வழக்கில் இருந்து அனைவரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து, மும்பை பங்குச்சந்தையில் டிபி ரியால்டி நிறுவனத்தின் பங்குகள் விலை அதிகபட்சமாக 19.89 சதவீதம் வரை உயர்ந்தது. இறுதியில் ரூ.43