Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: சிலுவை

பச்சையப்பாத்திரம் – கவிதை நூல் விமர்சனம்!

பச்சையப்பாத்திரம் – கவிதை நூல் விமர்சனம்!

இலக்கியம், சேலம், புத்தகம், முக்கிய செய்திகள்
(பூவனம்)   சேலம் மோகன் நகரைச் சேர்ந்த தோழர் சுகபாலாவின் இரண்டாவது படைப்பு, 'பச்சையப்பாத்திரம்'. அள்ள அள்ளக்குறையாத அட்சயப்பாத்திரம் பற்றியே முழுமையாக அறிந்திடாத நம்மவர்க்கு, பச்சையப்பாத்திரம் சொல்லை உருவாக்கி தமிழ்மொழிக்கு கொடையளித்திருக்கிறார். இந்தச் சொல்லை உருவாக்கியதற்காகவே அவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. இந்த நூலின் பாடுபொருள் மரம்தான். அதனூடாக காதல், மனிதர்களின் மனப்பிறழ்வு, உழைக்கும் வர்க்கத்தின் மீதான சுரண்டல், மானுட குலத்திற்கே உரிய முரண்கள் என பல கிளைகளாக கவிதைகள் விரிகின்றன. தோழரே மரமாகிறார். சிறு புல்லாகிறார். குழந்தையாகிறார். அவரே, புத்தனாகவும் மாற முயற்சிக்கிறார். வண்ணத்துப்பூச்சியை பிடித்து, பறக்கவிட்ட பிறகும் அதன் வண்ணங்கள் நம் விரல்களில் ஒட்டிக்கொண்டிருக்குமே அப்படித்தான், பச்சையப்பாத்திரம் நூலை வாசித்த பின்னரும் அதன் தாக்கம் மனதினுள் அப்பிக்கொண்டு வி