Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: சிபிஎஸ்இ.

வினாத்தாள் லீக்: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு கணித பாடத்திற்கு மறுதேர்வு கிடையாது!

வினாத்தாள் லீக்: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு கணித பாடத்திற்கு மறுதேர்வு கிடையாது!

இந்தியா, கல்வி, முக்கிய செய்திகள்
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து அந்தப்பாடத்திற்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று கணித பாடத்திற்கு மறுதேர்வு கிடையாது என சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ மாணவ, மாணவிகளுக்கு கடந்த மார்ச் 5ம் தேதி முதல் நாடு முழுவதும் பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வந்தது. இதில் பிளஸ்2 பொருளியல் மற்றும் பத்தாம் வகுப்பு கணிதம் ஆகிய பாடத்தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் முன்கூட்டியே வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியானதாக புகார்கள் எழுந்தன. சிபிஎஸ்ஐ நிர்வாகத்தைக் கண்டித்து டெல்லியில் பெற்றோர்கள், மாணவர்கள் தரப்பில் போராட்டம் நடந்தது. மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வீட்டையும் பலர் முற்றுகையிட்டு போராடினர். இதையடுத்து, பிளஸ்2 பொருளியல் மற்றும் பத்த
2 பாடங்களுக்கு மறு தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு; மாணவர்கள் கொதிப்பு#CBSE

2 பாடங்களுக்கு மறு தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு; மாணவர்கள் கொதிப்பு#CBSE

இந்தியா, கல்வி, முக்கிய செய்திகள்
தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் வெளியானதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு கணிதம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொருளியல் ஆகிய இரு பாடங்களுக்கு மட்டும் மறு தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ இன்று (மார்ச் 28, 2018) அறிவித்துள்ளது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் எஸ்எஸ்எல்சி மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் 28 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு, இம்மாதம் 5ம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வந்தது. இன்று (மார்ச் 28, 2018) பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதப் பாடத்தேர்வு நடந்தது. இத்தேர்வுக்கான வினாத்தாள், தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே வெளியானதாக புகார்கள் எழுந்தன. கையால் எழுதப்பட்ட வினாத்தாள் ஒன்று வாட்ஸ்அப்பில் நேற்று இரவே வெளியானது. அதிலுள்ள பல வ
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

இந்தியா, கல்வி, தகவல், முக்கிய செய்திகள்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு எனப்படும் 'நீட்' தேர்வு எழுதப்பட வேண்டும். 2018-2019 கல்வியாண்டுக்கான நீட் தேர்வு, வரும் மே 6ம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 9ம் தேதி (இன்று) வரை அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இதற்கான அவகாசத்தை வரும் 12ம் தேதி (திங்கள் கிழமை) வரை நீட்டித்துள்ளது. அன்று மாலை 5.30 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். முன்பு நீட் தேர்வு எழுத ஆதார் அட்டை அவசியம் என்று அறிவுறுத்தி இருந்தது. இது தொடர்பான ஒரு வழக்கில், நீட் உள்ளிட்ட எந்த ஒரு நுழைவுத்தேர்வுக்கும் ஆதார் அட்டை தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதையடுத்து, ஆன்லைன் விண்ணப்பம் பூர்த்தி செய்யப்படும்போது ஆதார் விவரங்களை உள்ளீடு செய்யத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளத
நீட் தேர்வு:  பொதுப்பிரிவினர் வயது வரம்புக்கு இடைக்காலத் தடை;  சிபிஎஸ்இ-க்கு நோட்டீஸ்!

நீட் தேர்வு: பொதுப்பிரிவினர் வயது வரம்புக்கு இடைக்காலத் தடை; சிபிஎஸ்இ-க்கு நோட்டீஸ்!

இந்தியா, கல்வி, முக்கிய செய்திகள்
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு எழுதும் பொதுப்பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகப்பட்ச வயது வரம்புக்கு இடைக்காலத் தடை விதித்து, டெல்லி உயர் நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 28, 2018) உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கவும் சிபிஎஸ்இ-க்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. வரும் கல்வி ஆண்டில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 6ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 8ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மார்ச் 9ம் தேதி வரை இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. நீட் தேர்வை, பட்டியல் இனப்பிரிவினர் 30 வயது வரை எழுதலாம் என்றும், பொதுப்பிரிவினர்
நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்;  ஆதார் கார்டு அவசியம்; சிபிஎஸ்இ அறிவிப்பு

நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்; ஆதார் கார்டு அவசியம்; சிபிஎஸ்இ அறிவிப்பு

இந்தியா, கல்வி, தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு எனப்படும் நீட் (National Eligibility cum Entrance Test- NEET 2018) தேர்வுக்கு இன்றுமுதல் (பிப்ரவரி 8, 2018) விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. ஆதார் கார்டு விவரங்கள் இருந்தால்தான் தேர்வு எழுத முடியும். மார்ச் 9ம் தேதி, கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் ஆகிய மருத்துவப்படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. கடந்த ஆண்டு முதல் தமிழகத்திலும் நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்நிலையில், நடப்பு 2018-2019ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு இன்று முதல் (பிப்ரவரி 8, 2018) விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ (The Central Board of Secondary Education- CBSE) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க