Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: சாதி மறுப்புத் திருமணம்

சாதி மறுப்பு திருமணம் செய்தோரை பிரிக்க யாருக்கும் உரிமை இல்லை! உச்சநீதிமன்றம் அதிரடி

சாதி மறுப்பு திருமணம் செய்தோரை பிரிக்க யாருக்கும் உரிமை இல்லை! உச்சநீதிமன்றம் அதிரடி

இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளை பிரிக்க பெற்றோர் உள்பட யாருக்கும் உரிமை கிடையாது என உச்சநீதிமன்றம் இன்று (ஜனவரி 16, 2018) அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது. வட மாநிலங்களில் காப் பஞ்சாயத்து என்ற கட்டப்பஞ்சாயத்தின் பேரில் கலப்புத் திருமணம் செய்த காதலர்களை கொடூரமாக தண்டித்தல், கொலை செய்தல் போன்றவைகள் பரவலாக அரங்கேறி வருகின்றன. இதை தடுப்பது குறித்து ஒருவர் தொடர்ந்த பொது நல வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது. தீர்ப்பில் மேலும் கூறியுள்ளதாவது: சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளை கட்டப் பஞ்சாயத்து மூலமோ, கிராமப் பஞ்சாயத்து மூலமோ, சமுதாயப் பெரியவர்கள் என்ற பெயரிலோ யாரும் அவர்களைக் கேள்வுி கேட்கக் கூடாது. அதற்கு அவர்களுக்கு உரிமை கிடையாது. பெற்றோர்களுக்கும் கூட காத
சாதி ஆணவப் படுகொலையும் நீதிமன்ற தீர்ப்பும்!

சாதி ஆணவப் படுகொலையும் நீதிமன்ற தீர்ப்பும்!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, திண்டுக்கல், திருப்பூர், முக்கிய செய்திகள்
உடுமலை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, வரலாற்றின் பக்கங்களில் நீடித்து நிலைத்து நிற்கும். ஆனால், இந்த தீர்ப்பு சமூக அடுக்குகளில் படிந்திருக்கும் சாதிய உணர்வுகளுக்கு சாவு மணி அடித்திருக்கிறதா என்றால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. ''கேளடா மானிடாவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை'' என்று சாதிக்கு எதிராக புரட்சி கீதம் பாடிய பாரதியின் பிறந்த நாளுக்கு மறுநாள் (டிசம்பர் 12, 2017), இந்திய திருநாடே அதுவரை எதிர்பார்த்திராத ஒரு தீர்ப்பை, திருப்பூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன் வழங்கினார். உடுமலை சங்கரின் காதல் மனைவி கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு 5 ஆண்டுகள் தண்டனையும் வழங்கினார் நீதிபதி. அதுவும், ஒரு பெண் நீதிபதியே இப்படி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க