Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: சட்டப்பேரவை

”பெண்களின் இடுப்பு ‘பேரல்’ போல் ஆகிவிட்டது!” திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி சர்ச்சை பேச்சு!

”பெண்களின் இடுப்பு ‘பேரல்’ போல் ஆகிவிட்டது!” திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி சர்ச்சை பேச்சு!

கோயம்பத்தூர், தேர்தல் 2021, முக்கிய செய்திகள்
திமுக பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான திண்டுக்கல் லியோனி, "ஒரு காலத்தில் பெண்களின் இடுப்பு எட்டு போல் இருந்தது; இப்போது பேரல் போல் ஆகிவிட்டது,'' என்று பேசியது அரசியல் அரங்கில் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.   கோவை தொண்டாமுத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி, மார்ச் 23ம் தேதி, குனியமுத்தூர் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார்.   பரப்புரையின்போது அவர், ''வெளிநாட்டு மாடுகளின் பாலைக் குடித்து குடித்து நம் ஊர் பெண்களும், குழந்தைகளும் பலூன் போல ஊதிவிட்டனர். ஒரு காலத்தில், பெண்களின் இடுப்பு எட்டு போல் இருந்தது. குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்தால் கச்சிதமாக அமர்ந்து கொள்ளும். ஆனால், இப்போது பெண்களின் இடுப்பு, பேரல் போல ஆகிவிட்டது. குழ
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்; ஏப். 6ல் வாக்குப்பதிவு; மே 2ல் வாக்கு எண்ணிக்கை!

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்; ஏப். 6ல் வாக்குப்பதிவு; மே 2ல் வாக்கு எண்ணிக்கை!

தேர்தல் 2021, முக்கிய செய்திகள்
தமிழகம், புதுவையில் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவும், மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த 2016ம் ஆண்டு ஏப். மாதம் தேர்தல் நடந்தது. நடப்பு சட்டப்பேரவையின் ஆயுள் காலம் வரும் மே 24, 2021ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் வழக்கத்தை விட முன்கூட்டியே தேர்தல் பரப்புரைகளை தொடங்கி விட்டன.   தேர்தல் குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என கடந்த சில நாள்களாகவே எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெள்ளிக்கிழமை (பிப். 26) மாலை டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.   தமிழகம், ப
தலித் வாக்காளர்கள்தான் டார்கெட்! நாமக்கல்லில் திமுக பரபர… அதிமுக கொர்ர்…#ParliamentElection

தலித் வாக்காளர்கள்தான் டார்கெட்! நாமக்கல்லில் திமுக பரபர… அதிமுக கொர்ர்…#ParliamentElection

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  பதினாறாவது மக்களவையின் ஆயுள் காலம் 2019, மே மாதத்துடன் முடிவு பெறுகிறது. மார்ச் முதல் வாரத்தில், பதினேழாவது மக்களவை தேர்தல் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா இல்லாமல் அதிமுகவும், கருணாநிதி இல்லாமல் திமுகவும் சந்திக்கும் முதல் பொதுத்தேர்தல் இது என்பதால், தமிழக தேர்தல் களம் முன்னெப்போதையும் விட சூட்டைக் கிளப்பும்.   திமுக வேகம் ஆளும் அதிமுகவைக் காட்டிலும் திமுக தரப்பு, மக்களவை தேர்தல் பணிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ரொம்பவே வேகம் காட்டி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம், மாவட்டந்தோறும் நிர்வாகிகள் கருத்துக்கேட்பு கூட்டம், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் வரை நடத்தி முடித்துவிட்டது.   தேர்தல் நெருக்கத்தில் மக்களைச் சந்திப்பது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது எல்லாம் காலங்காலமாக இருந்து வரும் நடைமுறைதான் என
சட்டப்பேரவை: மு.க.ஸ்டாலின் வெளிநடப்பும் டிடிவி தினகரன் வருகையும்!

சட்டப்பேரவை: மு.க.ஸ்டாலின் வெளிநடப்பும் டிடிவி தினகரன் வருகையும்!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து அடிக்கடி வெளிநடப்பு செய்யும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை கிண்டலடித்தும், முதன்முதலில் எம்எல்ஏவாக பேரவைக்குள் காலடி வைத்த டிடிவி தினகரனை பாராட்டியும் ட்விட்டரில் பலர் 'மீம்'கள் பதிவிட்டுள்ளனர். நடப்பு ஆண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 8, 2017) தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் தமிழக ஆளுநராக பொறுப்பேற்றார் பன்வாரிலால் புரோஹித். அவர் உரையாற்றும் முதல் கூட்டத்தொடர் இது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆர்.கே.நகர் தொகுதி முதன்முதலில் இடைத்தேர்தலைச் சந்தித்தது. அதில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்ற டிடிவி தினகரன், எம்எல்ஏ ஆக காலடி வைக்கும் முதல் கூட்டத்தொடர். மக்களவை, மாநிலங்களவை எம்பியாக இருந்த டிடிவி தினகரன் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் இடைவெளிக்குப்பிறகு, மக்கள் பிரதிநிதியாக அவர் இப்போது சட்டப்பேரவைக்குள் நுழைந்துள்ளார்.
தமிழக அரசு ஆஹா…ஓஹோ…!; ஆளுநர் உரையில் பாராட்டு; முழு விவரம்

தமிழக அரசு ஆஹா…ஓஹோ…!; ஆளுநர் உரையில் பாராட்டு; முழு விவரம்

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக சட்டப்பேரவை நடப்பு ஆண்டில் முதல்முறையாக ஆளுநர் உரையுடன் இன்று (ஜனவரி 8, 2017) தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஆங்கிலத்தில் தனது உரையை வாசித்தார். முன்னதாக அவர், 'அனைவருக்கும் வணக்கம்' என்று தமிழில் கூறினார். இடையில் எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டபோதும், 'உட்காருங்க' என்று தமிழில் பேசினார். தமிழகத்தில் நிதி பற்றாக்குறை இருப்பினும் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவது பாராட்டுக்குரியது. தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்வதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பாராட்டினார். ஆளுநர் உரையின் முழு விவரம்: மறைந்த முதல்வர் ஜெயலலிதா காட்டிய வழியில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்கள் நலத்திட்டங்கள் நல்ல முறையில் இடைவிடாது செயல்படுத்தப்படுகின்றன. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக
குஜராத்: முதல்கட்ட தேர்தலில் 68% வாக்குப்பதிவு

குஜராத்: முதல்கட்ட தேர்தலில் 68% வாக்குப்பதிவு

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு இன்று (டிசம்பர் 9, 2017) நடந்த முதல்கட்ட தேர்தலில் 68% பேர் வாக்களித்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல்கட்டமாக, 89 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்தது. அம்மாநில முதலமைச்சர் விஜய்ருபானி உள்பட 977 வேட்பாளர்கள் இன்றைய வாக்குப்பதிவை சந்தித்தனர். இவர்களில் 57 பேர் பெண் வேட்பாளர்கள். சூரத் உள்ளிட்ட சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறுகள் போன்ற பிரச்னைகள் எழுந்தாலும் அமைதியாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. காலை 8 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிந்தது. பகரூச் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மண மேடையில் முகூர்த்தம் முடிந்து திருமண கோலத்தில் நேராக வாக்குச்சாவடிக்கு வந்து தம்பதியர் ஓட்டுப்போட்டனர். உல்லேடா பகுதியில் 126