Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: கோழி பண்ணையாளர்கள்

அமெரிக்க கோழிகளால் ஆபத்து! 4 கோடி பேருக்கு வேலை பறிபோகும்; எச்சரிக்கும் பண்ணையாளர்கள்!!

அமெரிக்க கோழிகளால் ஆபத்து! 4 கோடி பேருக்கு வேலை பறிபோகும்; எச்சரிக்கும் பண்ணையாளர்கள்!!

இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு கோழிகளை இறக்குமதி செய்யும் ஒப்பந்தத்தால், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் காலம்காலமாக கோழிப்பண்ணைத் தொழிலை நம்பி இருக்கும் 4 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோவதோடு, கடும் பொருளாதார இழப்பும் ஏற்படும் என்று கோழி பண்ணையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. உலக வர்த்தக ஒப்பந்தத்தின்பேரில் இந்தியாவில் இதுவரை பாரம்பரியமாக நடைபெற்று வந்த பல தொழில்கள் பெரும் சரிவை நோக்கிச் சென்று வருகின்றன. பல குடிசைத்தொழில்கள் அழிந்தே விட்டன. மிட்டாய் முதல் நொறுக்குத்தீனி தயாரிப்பு வரை பன்னாட்டு நிறுவனங்களின் நாலுகால் பாய்ச்சலால், இந்தியா ஆகப்பெரும் சந்தையாக உருவெடுத்து வருகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் பார்வையில், இந்தியர்கள் வெறும் நுகர்வோர்களாக மட்டுமே பார்க்கப்பட்டு வருகிறோம்.   இந்நிலையில்தான், உலகளவில் முட்டை, கறிக்கோழ