Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: கொலை மிரட்டல்

”வீரபாண்டி ராஜா மீது நில அபகரிப்பு புகார்!” சேலத்தில் மூதாட்டி கதறல்!!

”வீரபாண்டி ராஜா மீது நில அபகரிப்பு புகார்!” சேலத்தில் மூதாட்டி கதறல்!!

அரசியல், குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தைச் சேர்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மீதான நில அபகரிப்புப் புகார்கள்தான், அவருடடைய அரசியல் வாழ்வுக்கே முடிவுரை எழுதியது. 2011ல் ஆட்சிக்கு வந்த அதிமுக, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து, அலைக்கழித்ததில் இறந்தே போனார். இந்நிலையில், வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான வீரபாண்டி ராஜா என்கிற ராஜேந்திரன் மீதும் இப்போது நில அபகரிப்பு புகார் எழுந்துள்ளது. சேலத்தை அடுத்த, உத்தமசோழபுரம் பில்லுக்கடை மேட்டைச் சேர்ந்த சுப்ரமணி மனைவி பாப்பாத்தி (65). இவருடைய கணவர், 1990ம் ஆண்டு தென்னை மரத்தில் இருந்து விழுந்து இறந்து விட்டார். இவருக்கு சரவணன் (49), செந்தில்குமார் என்ற இரு மகன்களும், சந்திரா என்ற ஒரு மகளும் உள்ளனர்.   ''தங்கள் நிலத்தை அபகரித்துக் கொண்டதோடு, அடியாள்களை வைத்து கொலை மிரட்டல் விடுக்க
”அரசாங்கத்தை தனியாரிடம் விற்றுவிடுங்கள்!”- சீமான் ஆவேசம்

”அரசாங்கத்தை தனியாரிடம் விற்றுவிடுங்கள்!”- சீமான் ஆவேசம்

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
எல்லா துறைகளிலும் தனியார்தான் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்றால் அரசாங்கம் எதற்கு? அதையும் தனியாருக்கு ஏலம் விட்டுவிட வேண்டியதுதானே? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கூறினார்.   சேலம் மாவட்டம் காமலாபுத்தில் 160 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக காமலாபுரம், சிக்கனம்பட்டி, சட்டூர், பொட்டியபுரம், தும்பிப்பாடி ஆகிய கிராமங்களில் 570 ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.   இதற்கு அந்த கிராமங்கங்களைச் சேர்ந்த மக்கள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தவிர, சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைக்காகவும் சேலம் மாவட்டத்தில் 18 கிராமங்களில் விளை நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இத்திட்டத்தை எதிர்த்தும் விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நி