Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: கைத்தறி நெசவாளர்

சேலம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் ஊழல்! நெசவாளர்களின் ரத்தத்தையும் உறிஞ்சிய அதிமுக பிரமுகர்கள்!!

சேலம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் ஊழல்! நெசவாளர்களின் ரத்தத்தையும் உறிஞ்சிய அதிமுக பிரமுகர்கள்!!

குற்றம், சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில், பட்டு நெசவாளர்கள் கைத்தறி கூட்டுறவு சங்கத்தில் சரக்கு விற்பனை இருப்பில் 1.10 கோடி ரூபாய்க்கு மேல் போலி முறைகேடு செய்திருப்பது அம்பலமாகி உள்ளது. இந்த நூதன மோசடி மூலம் ஆளும் அதிமுக பிரமுகர்கள் நெசவாளர்களின் ரத்தத்தையும் உறிஞ்சி குடித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன.   சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தில், 'சேலம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் லிமிடெட்' என்ற பெயரில் கூட்டுறவு நிறுவனம் 1956ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. கைத்தறியால் நெய்யப்பட்ட வெண்பட்டு வேட்டி, சட்டை, அங்கவஸ்திரத்திற்கு உலகளவில் பெயர் பெற்றது இந்நிறுவனம். இதில் தற்போது, 1558 நெசவாளர்கள் 'ஏ' வகுப்பு உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில், 1150 நெசவாளர்கள் தொடர்ந்து வெண்பட்டு உருப்படிகளை நெய்து வருகின்றனர். இந்நிறுவனத்தின் ஆண்டு விற்பனை சராசரியாக 12 கோடி ரூபாய். கடைசிய
ஒற்றை சாக்கு மூட்டையும் ஒரு கிரவுண்டு நிலமும்! அடமானம் வைக்கப்பட்ட பெண் ஊரின் அடையாளமானார்!!

ஒற்றை சாக்கு மூட்டையும் ஒரு கிரவுண்டு நிலமும்! அடமானம் வைக்கப்பட்ட பெண் ஊரின் அடையாளமானார்!!

சேலம், மகளிர், முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டம் புத்தூர் அக்ரஹாரம் சந்தனக்காரன் காடு பகுதியில், 'செட்டியாரம்மா' என்றால் சின்ன குழந்தைகளும் சொல்லி விடும். ஆமாம். பண்ணாரியம்மன் களஞ்சியம் குழுவின் மூத்த உறுப்பினரான ஜெயந்தியை (50) அப்பகுதியில் 'செட்டியாரம்மா' என்றே அழைக்கிறார்கள். சத்தியமங்கலத்தில் இருந்து மூட்டை முடிச்சுகளுடன் பிழைப்புத்தேடி கைக்குழந்தைகளுடன் சேலம் வந்த அவர், சந்தனக்காரன்காடு கிராமத்தின் அடையாளமாக வளர்ந்திருக்கிறார். அந்தளவுக்கு அவர் எட்டிப்பிடித்த உயரங்கள் அளப்பரியது.   ''தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்து சோர்விலாள் பெண்'' என்ற அய்யன் வள்ளுவன் வாக்கிற்கு ஏற்ப, தன்னையும் உயர்த்திக்கொண்டு கரம் பற்றிய கணவரையும், பெற்றெடுத்த பிள்ளைகளையும் கரை சேர்த்திருக்கிறார் ஜெயந்தி. பண்ணாரியம்மன் களஞ்சியம் மகளிர் குழுவில் பதினைந்து ஆண்டுகளுக்கும் மே