Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: குள்ளம்பட்டி விவசாயிகள்

எட்டு வழிச்சாலை: ஒரு மாதத்தில் நல்ல தீர்ப்பு வரும்!; அருள்வாக்கு சொன்ன விவசாயி

எட்டு வழிச்சாலை: ஒரு மாதத்தில் நல்ல தீர்ப்பு வரும்!; அருள்வாக்கு சொன்ன விவசாயி

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில், இன்னும் ஒரு மாதத்திற்குள் நல்ல தீர்ப்பு வரும் என்று விவசாயி அருள்வாக்கு கூறினார்.   சேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை 36.3 கிலோமீட்டர் தொலைவுக்கு எட்டு வழிச்சாலை வழித்தடம் அமைகிறது. இதற்காக 248 ஹெக்டேர் நிலம் கையப்படுத்தப்பட உள்ளது. இதில் 90 சதவீதம் சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான விளை நிலங்கள் ஆகும். இதனால் விவசாயிகள் நிலத்தை விட்டுத்தர மறுப்பதுடன், சாமானிய மக்களுக்கு பயன் அளிக்காத எட்டு வழிச்சாலைத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று போராடி வருகின்றனர்.   மின்னாம்பள்ளி, குள்ளம்பட்டி விவசாயிகள் குலதெய்வமான பெரியாண்
எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு; கிராம சபையில் பரபரப்பு!; எடப்பாடி மண்ணில் ஓயாத சலசலப்பு!!

எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு; கிராம சபையில் பரபரப்பு!; எடப்பாடி மண்ணில் ஓயாத சலசலப்பு!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் இன்று (ஆகஸ்ட் 15, 2018) நடந்த கிராம சபைக்கூட்டங்களில் எட்டு வழிச்சாலை, விமான நிலைய விரிவாக்கத் திட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், ஒட்டுமொத்த அதிகார வர்க்கமும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறது.   கிராம ஊராட்சிகளின் மேம்பாட்டுக்காக ஆண்டுதோறும் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய நான்கு நாள்களில் கட்டாயமாக அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதன்படி, சுதந்திர தினமான இன்று தமிழகம் முழுவதும் உள்ள 12618 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடந்தன. இக்கூட்டம் கூட்டப்படுவதற்கு ஏழு நாள்களுக்கு முன்பாக தண்டோரா போட்டு, மக்களுக்கு எந்த இடத்தில் கூட்டம் நடக்கிறது? எத்தனை மணிக்கு தொடங்குகிறது? விவாதிக்கப்பட வேண்டிய பொருள்கள் என்னென்ன என்பது முன்கூட்டியே தெரிவிக்கப்பட வேண்டும்.   ஆனால், ஜ
எட்டு வழிச்சாலைக்கு மண் பரிசோதனை செய்ய எதிர்ப்பு; விவசாயிகளை மிரட்டிய போலீசார்!!

எட்டு வழிச்சாலைக்கு மண் பரிசோதனை செய்ய எதிர்ப்பு; விவசாயிகளை மிரட்டிய போலீசார்!!

சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் அருகே, எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு கடுமையாக வலுத்துள்ள நிலையில், இன்று (ஜூலை 23, 2018) மேம்பாலம் கட்டுவதற்காக மண் பரிசோதனை செய்ய வந்த ஊழியர்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களை கைது செய்து விடுவோம் என்று காவல்துறையினர் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   சேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக சேலம் மாவட்டத்தில் மொத்தம் 248 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதில், 186 ஹெக்டேர் நிலங்கள், தனியார் விவசாயிகளுக்குச் சொந்தமான விளைநிலங்கள் ஆகும்.     சேலம் மாவட்டம் ராமலிங்கபுரம், குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி, குப்பனூர், நிலவாரப்பட்டி, சித்தனேரி, பாரப்பட்டி, பூலாவாரி அக்ரஹாரம் உள்ளிட்ட 20 கிராமங்களின் வழியாக எட்டு வழிச்சாலை செல்கிறது. விவசாய நிலத்தை அழித்துப் போடப்படும் பசுமைவழி விரைவுச்சாலைக
தொடரும் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு: சேலம் விவசாயிகள் அம்மனிடம் கோரிக்கை மனு கொடுத்து நூதன போராட்டம்! ”சேலத்தில் கலவரம் வெடிக்கும்!!”

தொடரும் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு: சேலம் விவசாயிகள் அம்மனிடம் கோரிக்கை மனு கொடுத்து நூதன போராட்டம்! ”சேலத்தில் கலவரம் வெடிக்கும்!!”

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
''எடப்பாடியும் கண்டுக்கல....மோடியும் கண்டுக்கல.... அதனால் எங்கள் கோரிக்கையை பெரியாண்டிச்சி அம்மனிடம் பொங்கலிட்டு மனு கொடுக்கிறோம்," என்று நூதன போராட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள் குள்ளம்பட்டி விவசாயிகள். எதிர்பாராத விதமாக அந்த இடத்தில் திடீரென்று பெண்கள் அருள் வந்து ஆட, கோயில் திடலே பெரும் களேபரத்தில் ஆழ்ந்தது.   சென்னை - சேலம் பசுமைவழி விரைவுச்சாலைக்காக சேலம் மாவட்டத்தில் 18 கிராமங்களில் 36.3 கி.மீ. தொலைவுக்கு விளை நிலங்கள், குடியிருப்பு நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கான நில அளவீட்டுப்பணிகள் ஜூன் 18ம் தேதி தொடங்கி, 25ம் தேதி வரை நடந்தது. கையகப்படுத்தப்பட வேண்டிய நிலங்கள் சேட்டிலைட் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அளந்து, முட்டுக்கற்கள் நடப்பட்டன.     சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி, ஹெக்டேருக்கு 21.3 லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 9.04 கோடி ரூபாய்