Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: குறுக்கு விசாரணை

கோகுல்ராஜ் கொலை வழக்கு: கவுண்டர் பெண்களை தலித் ஆண்கள் காதலிக்க கூடாது என்று யுவராஜ் சொன்னாரா?#Gokulraj #Day13

கோகுல்ராஜ் கொலை வழக்கு: கவுண்டர் பெண்களை தலித் ஆண்கள் காதலிக்க கூடாது என்று யுவராஜ் சொன்னாரா?#Gokulraj #Day13

கரூர், குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் புதன்கிழமையன்று (டிசம்பர் 12, 2018) நடந்த சாட்சிகள் விசாரணையின்போது, அரசுத்தரப்பு சாட்சிகள் அடுத்தடுத்து பிறழ் சாட்சியம் அளித்ததால் சிபிசிஐடி போலீசார் அதிருப்தி அடைந்தனர். சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ் (23). பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவர், திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரியில் பி.இ. முடித்திருந்தார். கடந்த 24.6.2015ம் தேதியன்று, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே, ரயில் தண்டவாளத்தில் தலை வேறு, முண்டம் வேறாக கோகுல்ராஜ் சடலம் கைப்பற்றப்பட்டது. போலீசார் விசாரணையில் அவர், ஆணவக்கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.   இது தொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனத்தலைவர் யுவராஜ், அவருடைய தம்பி தங்கதுரை, கார் ஓட்டுநர் அருண், சங்கர் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: கர்ஜித்த நீதிபதி…! பம்மிய வழக்கறிஞர்கள்!! #Gokulraj #Day11

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: கர்ஜித்த நீதிபதி…! பம்மிய வழக்கறிஞர்கள்!! #Gokulraj #Day11

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணையின்போது, எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் அடிக்கடி குறுக்கீடு செய்ததால் நீதிபதி அவர்களை பலமுறை கடுமையாக எச்சரித்தார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த எதிர்தரப்பினர், குறுக்கு விசாரணை நடத்தாமல் வாய்தா வாங்கினர். தண்டவாளத்தில் சடலம்   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் சித்ரா. ஏழைக்கூலித்தொழிலாளி. இவருடைய இளைய மகன் கோகுல்ராஜ் (23). திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் பி.இ. படிப்பை நிறைவு செய்திருந்தார்.   கடந்த 23.6.2015ம் தேதியன்று தன்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்த தோழி சுவாதியை பார்க்கச் சென்றார். அன்று இரவு அவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் (24.6.2015) மாலை, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே காவேரி ஆர்எஸ் - ஆனங்கூர் இடையே ரயில் தண
கோகுல்ராஜ் கொலை வழக்கு: தடம் புரண்ட முக்கிய சாட்சி!; அரசுத்தரப்பு கடும் அதிருப்தி!! #Gokulraj #Day5

கோகுல்ராஜ் கொலை வழக்கு: தடம் புரண்ட முக்கிய சாட்சி!; அரசுத்தரப்பு கடும் அதிருப்தி!! #Gokulraj #Day5

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  தமிழகத்தை உலுக்கிய கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், ஒரே முக்கிய சாட்சியான கோகுல்ராஜின் தோழி ஸ்வாதி நேற்று (செப்டம்பர் 10, 2018) நீதிமன்றத்தில் பிறழ் சாட்சியம் அளித்தார். இதை சற்றும் எதிர்பாராத அரசுத்தரப்பு வழக்கறிஞர், சிபிசிஐடி போலீசார் உச்சக்கட்ட அதிருப்தி அடைந்தனர்.   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாச்சலம் - சித்ரா தம்பதியின் மகன் கோகுல்ராஜ் (23). பி.இ., பட்டதாரி. திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த இவர், தனது படிப்பை 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவு செய்திருந்தார். தீவிரமாக வேலை தேடி வந்த நிலையில், 23.6.2015ம் தேதியன்று வீட்டில் இருந்து கிளம்பினார். எப்போது வெளியே சென்றாலும் தாய் சித்ராவிடம் சொல்லிவிட்டுச் செல்வதோடு, அன்று மாலைக்குள் வீடு திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் அன்று இந்த நடைமுறைகள் எதையும் கோகுல்ராஜ் பின்பற்றவில்