Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி: லஞ்சம் வாங்கிய திட்ட அலுவலர் கைது!

கிருஷ்ணகிரி: லஞ்சம் வாங்கிய திட்ட அலுவலர் கைது!

கிருஷ்ணகிரி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலராக பணியாற்றி வருபவர் நரசிம்மன் (49). அரூரைச் சேர்ந்தவர். இதே அலுவலகத்தில், பதிவுரு எழுத்தராக சத்தியமூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார்.   ரூ.15 ஆயிரம் லஞ்சம்:   ஊரக வளர்ச்சி முகமைத் திட்டத்தின் கீழ், மாவட்ட நூலகம் அருகில் வணிக கடைகள் கட்டி வா-டகைக்கு விடப்படுகிறது. அதில் ஒரு கடையை தனக்கு ஒதுக்கித் தருமாறு, கிருஷ்ணகிரி டி.பி. சாலையில் வெல்ல மண்டி நடத்தி வரும் ஜெயக்குமார் என்பவர் விண்ணப்பித்து இருந்தார்.   கடை ஒதுக்க வேண்டும் என்றால் அதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சமாக திட்ட அலுவலருக்குக் கொடுக்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சி முகமை அலுவலக பதிவுரு எழுத்தர் சத்தியமூர்த்தி கூறியுள்ளார். அப்போது ஜெயக்குமாரும் பணம் கொடுக்க ஒப்புக்கொண்டாலும், லஞ்சம் கொடுத்து கடையை வாடகைக்கு எடுக்க அவர் விரும்பவில்ல
”மோடி பெயரை கேட்டதும் கை, கால்கள் நடுங்கின!”; கிருஷ்ணகிரி பெண்ணின் வெள்ளந்தி பேச்சு!!

”மோடி பெயரை கேட்டதும் கை, கால்கள் நடுங்கின!”; கிருஷ்ணகிரி பெண்ணின் வெள்ளந்தி பேச்சு!!

இந்தியா, கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பிரதம மந்திரி உஜ்ஜவாலா திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கு இலவச காஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பலருக்கும் இலவச காஸ் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஜம்மு - காஷ்மீர், ஒதிஷா, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் உஜ்ஜவாலா திட்டப் பயனாளிகள் சிலரிடம் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 28-5-2018ம் தேதி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் உரையாடினார்.   தமிழ்நாடு தரப்பில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள மேலுமலை, போகிபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ருத்ரம்மா, ஈஸ்வரி, சந்திரா ஆகியோரிடம், அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். காலம் காலமாக விறகு அடுப்பில், புகை, கண் எரிச்சலுடன் சமைத்துக் கொண்டிருந்த அவர்கள் இ
3000 பாம்புகளை காப்பாற்றிய ஓசூர் ‘ஸ்னேக்’ டேவிட்!;  ”விரலை இழந்த பின்னும்  தணியாத ஆர்வம்”

3000 பாம்புகளை காப்பாற்றிய ஓசூர் ‘ஸ்னேக்’ டேவிட்!; ”விரலை இழந்த பின்னும் தணியாத ஆர்வம்”

கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, தர்மபுரி, முக்கிய செய்திகள்
சி-ற-ப்-பு-க்-க-ட்-டு-ரை ''பாம்புகள் பற்றிய தவறான அபிப்ராயங்களால்தான் அவற்றை மனிதர்கள் கொல்லத் துடிக்கின்றனர். அதைப் புரிந்து கொண்டால் வீட்டுக்கு வீடு நாய் வளர்ப்பதுபோல் பாம்புகளை வளர்க்க ஆரம்பித்து விடுவோம்,'' என்கிறார் டேவிட் மாறன். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்தவர் டேவிட் மாறன். அசோக் லேலன்ட் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். மனைவி அழகேஸ்வரி. ஹைம் ஸ்கை, வெண்ணிலா என இரண்டு பெண் குழந்தைகள். டேவிட் மாறன் என்று சொன்னால்கூட பலர் ஒரு கணம் யோசிக்கக் கூடும். ஆனால், 'ஸ்னேக்' டேவிட் என்ற அடைமொழியுடன் கேட்டால், சின்னக் குழந்தைகூட அவருடைய வீட்டுக்கே நம்மை அழைத்துச் சென்றுவிடும். இந்தக் காலத்தில் சக மனிதர் ஒருவர் சாலையில் அடிபட்டுக் கிடந்தால்கூட 'உச்' கொட்டிவிட்டு கடந்து சென்று விடுவோர்தான் அதிகம். ஆனால், பாம்புகளுக்கு ஏதேனும் சிக்கல் என்றால் முதல் ஆளாக பறந்து சென்று மீட்பதில் தனிக்க
பள்ளி சிறுமிகளின் வாழ்வை மாற்றும் காயலான் கடை சைக்கிள்!; ஓசூர் இளைஞர்கள் புதிய முயற்சி!!

பள்ளி சிறுமிகளின் வாழ்வை மாற்றும் காயலான் கடை சைக்கிள்!; ஓசூர் இளைஞர்கள் புதிய முயற்சி!!

கல்வி, கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், சேவை, தமிழ்நாடு, தர்மபுரி, முக்கிய செய்திகள்
எதற்கும் உதவாது என வீட்டில் அடைத்து வைத்திருக்கும் பழைய சைக்கிள்களை, பழுது பார்த்து மலைக்கிராம பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர் ஓசூர் இளைஞர்கள். அவர்களின் புதிய முயற்சிக்கு பரவலாக வரவேற்பு கிடைக்கவே, அதை இதர ஏழை மாணவர்களுக்கும் விரிவு படுத்தியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது நாட்றாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி. 192 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பள்ளி அமைவிடம் என்னவோ, சமதளப் பரப்பில்தான் இருக்கிறது. எனினும், பிலிகுண்டு, சிவபுரம், பூமரத்துக்குழி, அட்டப்பள்ளம், பஞ்சல்துணை ஆகிய அடர்ந்த மலைக்கிராமங்களில் இருந்தும் கணிசமான மாணவ, மாணவிகள் வந்து படிக்கின்றனர். மலைப்பகுதி என்பதால் நகர்ப்புறம்போல் அடிக்கடி பேருந்துகளும் செல்லாது. அதனால் மாலை 4.15 மணிக்கு பள்ளி முடிந்தால் பல மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு நடந்தே செல்கின்றனர். மாணவிகளின் நிலை இன்னும் மோசம