Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: கிரய பாத்திரம்

நிலம் உங்களுக்கு… ஆனால் உரிமை எங்களுக்கு! சதிராடும் சேலம் ஆவின்!!

நிலம் உங்களுக்கு… ஆனால் உரிமை எங்களுக்கு! சதிராடும் சேலம் ஆவின்!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
கடந்த நாற்பது ஆண்டுகளில் தமிழகத்தில் ஒன்பது முறை ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கிறது. ஆனால், ஆவின் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்து, வீட்டு மனை பெற்றவர்களுக்கு இன்னும் கிரய பத்திரம் வழங்காமல் சேலம் ஆவின் நிறுவனம் வஞ்சித்து வருகிறது.   சேலத்தை அடுத்த தளவாய்ப்பட்டியில், கடந்த நாற்பது ஆண்டுகளாக 'சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிடெட்' எனப்படும் ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. தொடக்கத்தில் பால் கொள்முதல், விற்பனையில் மட்டும் கவனம் செலுத்தி வந்த இந்நிறுவனம், சில ஆண்டுகளிலேயே பால் பவுடர் உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் ஆலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆலை விரிவாக்கத்திற்காக தளவாய்ப்பட்டி, அதைச் சுற்றியுள்ள சித்தனூர், ரொட்டிக்காரன் வட்டம், பெருமாள் கரடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 25 அப்பாவி குடும்பங்களுக்குச் சொந்தமான நிலங்களை ஆர்ஜி