Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: காஸ் சிலிண்டர்

சேலத்தில் கோர விபத்து; காஸ் சிலிண்டர் வெடித்ததில் 4 வீடுகள் இடிந்தன; 5 பேர் பலி!

சேலத்தில் கோர விபத்து; காஸ் சிலிண்டர் வெடித்ததில் 4 வீடுகள் இடிந்தன; 5 பேர் பலி!

சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில், சமையல் காஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் அடுத்தடுத்து நான்கு வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கவிட்டல் 3வது தெருவைச் சேர்ந்தவர் வெங்கடராஜன் (62). இவருக்கு தன் வீடு அருகே சொந்தமாக மூன்று வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் கோபி, கணேசன், முருகன் ஆகியோர் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வருகின்றனர். இதில், கோபியுடன் அவருடைய மாமியார் ராஜலட்சுமி, உறவினர் எல்லம்மாள் ஆகியோரும், கணேசன் வீட்டில் தாயார் அம்சவேணி, மனைவி லட்சுமி, மகன்கள் ஷாம், சுதர்சன் ஆகியோரும், முருகன் வீட்டில் மனைவி உஷாராணி, மகன் கார்த்திக்ராம், மகள் பூஜாஸ்ரீ ஆகியோரும் வசித்து வருகின்றனர். இவர்களுடைய வீட்டிற்கு அருகிலேயே சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் சிறப்பு நிலைய அலுவலராக பணியாற்றி வந்த பத்மநாபன் (48), தனத
காஸ் சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் 3வது முறையாக உயர்வு; சேலத்தில் ரூ.828 ஆக நிர்ணயம்!

காஸ் சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் 3வது முறையாக உயர்வு; சேலத்தில் ரூ.828 ஆக நிர்ணயம்!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லா எல்பிஜி சிலிண்டர் விலை, நடப்பு மாதத்தில் மூன்றாவது முறையாக ஏற்றப்பட்டுள்ளது. இதனால் சேலத்தில், நடப்பு மாதத்தில் காஸ் சிலிண்டர் விலை 803ல் இருந்து 828 ரூபாயாக ஆக அதிகரித்துள்ளது.   சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இந்தியாவில் காஸ் சிலிண்டருக்கான தேவை, உற்பத்தித்திறன் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் மாதந்தோறும் காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயம் செய்து வருகிறது.   அதன்படி, ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில், அதற்கு அடுத்த மாதத்திற்கான புதிய விலை நிர்ணயம் செய்யப்படுவது நடைமுறை. ஆனால் அண்மைக் காலமாக இந்தியாவில், ஒரே மாதத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட முறை காஸ் சிலிண்டர் விலையை மறு நிர்ணயம் செய்யும் நில
காஸ் சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் இரண்டாம் முறையாக உயர்வு; சேலத்தில் 803; சென்னையில் 785 ஆக நிர்ணயம்!

காஸ் சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் இரண்டாம் முறையாக உயர்வு; சேலத்தில் 803; சென்னையில் 785 ஆக நிர்ணயம்!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
வீடுகளில் பயன்படுத்தப்படும் மானியமில்லா எல்பிஜி காஸ் சிலிண்டர் விலை, நடப்பு பிப்ரவரி மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டு உள்ளது. தற்போது மேலும் 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டு உள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உள்நாட்டு சந்தையில் தேவை அளவு, உற்பத்தித்திறன் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் காஸ் சிலிண்டர் விலை மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. எண்ணெய் நிறுனங்களின் கூட்டமைப்பு கூடி, விலை நிர்ணயம் செய்கின்றன.   நடப்பு பிப்ரவரி முதல் தேதியில் புதிய விலை அறிவிக்கப்படும் என வழக்கம்போல் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அன்றைய நாளில், காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. நடைமுறைக்கு மாறாக, பிப். 4ம் தேதியன்று எல்பிஜி சிலிண்டர் விலை 25 ரூபாய்
எல்பிஜி காஸ் சிலிண்டர் விலை 25 ரூபாய் திடீர் ஏற்றம்; சேலத்தில் 753க்கு கிடைக்கும்!

எல்பிஜி காஸ் சிலிண்டர் விலை 25 ரூபாய் திடீர் ஏற்றம்; சேலத்தில் 753க்கு கிடைக்கும்!

முக்கிய செய்திகள்
வீடுகளில் பயன்படுத்தப்படும் மானியமற்ற எல்பிஜி காஸ் சிலிண்டர் விலை நடப்பு பிப்ரவரி மாதத்தில் திடீரென்று 25 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் சேலத்தில் காஸ் சிலிண்டர் விலை நடப்பு மாதம் 728ல் இருந்து 753 ரூபாயாக அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, நுகர்வுத்திறன், உற்பத்தித்திறன், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் வீட்டு உபயோக மற்றும் வர்த்தக காஸ் சிலிண்டர் விலைகள் மாதந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு விலை நிர்ணயம் செய்கிறது. மாதந்தோறும் 1ம் தேதி முதல் புதிய விலை நடைமுறைக்கு வரும். கடந்த டிசம்பர் மாதம் வீட்டு உபயோக எல்பிஜி காஸ் சிலிண்டர் விலை இரண்டு முறை தலா 50 ரூபாய் வீதம் 100 ரூபாய் உயர்த்தப்பட்டது. ஒரே மாதத்தில் இரண்டு முறை விலையேற்றம் என்பதால் அரசியல் அர
சமையல் காஸ் சிலிண்டர் விலை 63 ரூபாய் உயர்ந்தது! ரூ.979 ஆக நிர்ணயம்!!

சமையல் காஸ் சிலிண்டர் விலை 63 ரூபாய் உயர்ந்தது! ரூ.979 ஆக நிர்ணயம்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வர்த்தகம்
  வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடையுள்ள காஸ் சிலிண்டர் விலை நடப்பு நவம்பர் மாதத்திற்கு ரூ.979 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது, முந்தைய அக்டோபர் மாதத்தைக் காட்டிலும் 62.50 ரூபாய் அதிகமாகும். ரூ.979 ஆக நிர்ணயம்   காஸ் சிலிண்டர் விலைகள் மாதந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை, உற்பத்தி மற்றும் உள்ளூரில் காஸ் சிலிண்டர்களுக்கான தேவை, ஆலைகளின் உற்பத்தித்திறன் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது.   அதன்படி நடப்பு 2018, நவம்பர் மாதத்திற்கு வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடையுள்ள காஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு, ரூ.979 ஆக நிர்ணயித்துள்ளது. இது, முந்தைய அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் ரூ. 62.50 அதிகமாகும
எகிறியது காஸ் சிலிண்டர் விலை! பட்ஜெட்டில் துண்டு!!

எகிறியது காஸ் சிலிண்டர் விலை! பட்ஜெட்டில் துண்டு!!

இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தசரா, தீபாவளி என பண்டிகைகள் வரிசைக்கட்டி நிற்கும் நிலையில் நடுத்தர வர்க்கத்தின் பட்ஜெட்டை பதம் பார்க்கும் வகையில் சமையல் காஸ் சிலிண்டர் விலை இந்த மாதம் 916.50 ரூபாயாக உயர்ந்தது.   வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் காஸ் சிலிண்டர்களின் விலை மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, உற்பத்தி, உள்நாட்டில் சிலிண்டர்களுக்கான தேவை, உற்பத்தித்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்களின் சிண்டிகேட் கமிட்டி இதன் விலையை நிர்ணயம் செய்து வருகிறது.   வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு மத்திய அரசு 320 ரூபாய் வரை மானியத்தொகையை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்பி விடுகிறது. அதனால், முழு தொகையை காஸ் முகவர்களிடம் செலுத்தி, சிலிண்டரை பெற்று வருகின்றனர்.   கடந்த செப்டம்ப
”மோடி பெயரை கேட்டதும் கை, கால்கள் நடுங்கின!”; கிருஷ்ணகிரி பெண்ணின் வெள்ளந்தி பேச்சு!!

”மோடி பெயரை கேட்டதும் கை, கால்கள் நடுங்கின!”; கிருஷ்ணகிரி பெண்ணின் வெள்ளந்தி பேச்சு!!

இந்தியா, கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பிரதம மந்திரி உஜ்ஜவாலா திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கு இலவச காஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பலருக்கும் இலவச காஸ் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஜம்மு - காஷ்மீர், ஒதிஷா, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் உஜ்ஜவாலா திட்டப் பயனாளிகள் சிலரிடம் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 28-5-2018ம் தேதி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் உரையாடினார்.   தமிழ்நாடு தரப்பில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள மேலுமலை, போகிபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ருத்ரம்மா, ஈஸ்வரி, சந்திரா ஆகியோரிடம், அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். காலம் காலமாக விறகு அடுப்பில், புகை, கண் எரிச்சலுடன் சமைத்துக் கொண்டிருந்த அவர்கள் இ