Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: காதல்

35 வருடம் காத்திருந்து காதலியை கரம் பிடித்த சிக்கண்ணா! காலம் போட்டு வைத்த கணக்கு!

35 வருடம் காத்திருந்து காதலியை கரம் பிடித்த சிக்கண்ணா! காலம் போட்டு வைத்த கணக்கு!

இந்தியா, முக்கிய செய்திகள்
  'பிணியும் மூப்பும் இறப்பும் மானுடர்க்கே அன்றி காதலுக்கு ஒருபோதும் அல்ல' என்பதை, 65 வயதிலும் தான் நேசித்த பெண்ணுக்காய் காதலை பசுமையுடன் பத்திரப்படுத்தி வந்திருக்கும் சிக்கண்ணா நிரூபித்திருக்கிறார்.   'காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை; மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்ந்ததில்லை' என்ற கண்ணதாசனின் வரிகள், சிக்கண்ணா - ஜெயம்மாவுக்கு ரொம்பவே பொருந்தும்.   கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புராவில் வசிக்கும் சிக்கண்ணாதான், கடந்த ஒரு வாரமாக இணையங்களில் பெரிய அளவில் கவனம் ஈர்த்தவர். இத்தனைக்கும் இவர் இப்போதும் மிகச்சாமானியர்தான்.   கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு மைசூருவுக்கு கூலி வேலைக்காகச் சென்றிருந்தார். அப்போது அவருக்கும், அதே ஊரில் வசித்து வந்த அவருடைய உறவுக்கார பெண்ணான ஜெயம்மாவுக்கும் (60) பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில்
பிரிந்தால் அக்கணமே செத்திடணும்! என்ன சொன்னாள் தலைவி?

பிரிந்தால் அக்கணமே செத்திடணும்! என்ன சொன்னாள் தலைவி?

இலக்கியம், சிறப்பு கட்டுரைகள், தகவல், முக்கிய செய்திகள்
எத்தொகை கொடுத்தாலும் ஈடாகாது நற்குறுந்தொகைக்கு. குறுந்தொகையானாலும், நெடுந்தொகையாக சிலாகித்துப் பேசிக்கொண்டே இருக்கலாம். 'இலக்கியம் பேசுவோம்' பகுதியில் குறுந்தொகையில் இருந்து இன்னொரு பாடலோடு வந்திருக்கிறேன். உலகம் முழுவதும் எத்தனை முகங்கள்... எத்தனை மொழிகள் இருந்தாலும் ஒரு சொல் கேட்ட மாத்திரத்திலேயே நமக்குள் ஒரு கணம், பேருவகையை தந்து விட்டுப் போகும். அதுதான், காதல்.   அதனால்தான் மகாகவி பாரதி, 'ஆதலால் காதல் செய்வீர் உலகத்தீரே' என அறைகூவல் விடுத்தான். காதலினால் கலவி உண்டாம்; காதலினால் கவலைகள் போம்' என்றான். உள்ளத்தால் கூடிய காதலின் உச்சக்கட்ட அக்னாலெட்ஜ்மென்ட்தான், உடல் தீண்டல்.   உள்ளத்தால் இணைந்த பிறகு, உடல்தீண்டல் நிகழ்கிறது. அங்கே, ஈருடல் ஓருயிராகிறது. தலைவனும், தலைவியும் கட்டி அணைத்துக் கொண்டால் அங்கே காற்றுகூட இடையறுத்துச் செல்லக்கூடாதாம். அந்தளவு
நோயாய் நெஞ்சினில் நீ நுழைந்தாய்…! திரை இசையில் வள்ளுவம் (தொடர்)

நோயாய் நெஞ்சினில் நீ நுழைந்தாய்…! திரை இசையில் வள்ளுவம் (தொடர்)

இலக்கியம், சினிமா, முக்கிய செய்திகள்
திரை இசையில் வள்ளுவம்: (தொடர் - 8/17) நோயாய்  நெஞ்சினில் நீ நுழைந்தாய் மருந்தை ஏனடி தர மறந்தாய்...   கடந்த இரண்டு தொடர்களிலும் 'ஊக்கம் உடைமை', 'மெய்ப்பொருள் அறிதல்' என அடுத்தடுத்து அறிவுரை மழையாகி விட்டதே என்று வாசகர்கள் சிலர் நினைத்திருக்கக் கூடும். அதனால்தான் இந்த முறை, நோயும் நோய் தீர்க்கும் மருந்தையும் பாடுபொருளாக எடுத்துக் கொண்டோம்.   'என்னது மருத்துவக் கட்டுரையா?. அதற்குத்தான் 'நலமறிய ஆவல்' என்ற பகுதி இருக்கிறதே' என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. பதற்றம் கொள்ள வேண்டாம். நான் குறிப்பிடும், நோய் என்பது நோய் அல்ல; மருந்து என்பதும் மருந்து அல்ல. ஆனால், அந்த நோயும் மருந்தும் ஆதாம் ஏவாள் காலத்து அரதப்பழசு.   சரி. பீடிகை போடாமல் விஷயத்திற்கு வருகிறேன். 'மகாதேவி' (1957) படத்தில் ஒரு சிறுவனின் காலில் பாம்பு கடித்து விடும். எந்தப் பாம்பு கடித
திரை இசையில் வள்ளுவம்: குடித்தால் போதை தரும் மது; நினைத்தால் போதை தரும் காதல்…(தொடர்)

திரை இசையில் வள்ளுவம்: குடித்தால் போதை தரும் மது; நினைத்தால் போதை தரும் காதல்…(தொடர்)

இலக்கியம், சினிமா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
ஒன்றே முக்கால் அடியில் உலகையே அளந்த வள்ளுவன்தான், காதலின் உச்சமும் ஆழமும் தொட்டவன் என்றால் மிகையாகாது. 1330 பாக்களில், 250 பாடல்களே காமத்துப்பாலில் இடம் பெற்றிருந்தாலும், வள்ளுவனின் உச்சபட்ச கற்பனை வளத்தை அதில்தான் காண முடியும் என்பது என் கருத்து.   மாந்தர்களிடையே காதல் பூக்கும் தருணம், காதலர்களுக்குள் ஏற்படும் ஊடல், பின் கூடல் ஆகிய உணர்வுகளை மிக நுட்பமாக, உளவியல் ரீதியாக ஆராய்ந்து எழுதி இருப்பானோ என்றுகூட தோன்றுகிறது. காதலுக்கு வள்ளுவன் வகுத்தளித்த கோட்பாடுகள் இன்றும் மாறவே இல்லை. உலகம் முழுவதும் அப்படித்தான் இருக்கும் என்று கருதுகிறேன்.   இப்போதுபோல், சங்க காலத்தில் மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி இருப்பார்களா? எனத்தெரியாது. ஆனாலும், அவன் காலத்திலும் சமூகத்தை சீரழிக்கக் கூடியதாகத்தான் மதுபானம் இருந்திருக்கிறது என்பதை 'கள்ளுண்ணாமை' அதிகாரத்தின் மூலம் அறியலாம்.