Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: கலாச்சாரம்.

‘பீக்குஸ்கோத்தெ’ எனும் வாய்ப்பூட்டு!: “பிச்சை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் சவுராஷ்டிரர்கள்”

‘பீக்குஸ்கோத்தெ’ எனும் வாய்ப்பூட்டு!: “பிச்சை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் சவுராஷ்டிரர்கள்”

கலாச்சாரம், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, மதுரை, முக்கிய செய்திகள்
கடந்த 2016-ம் ஆண்டு தமிழ், தெலுங்கில் வெளியான 'பிச்சைக்காரன்' படத்தில், தாயின் உயிரைக் காப்பாற்ற நாயகன் தெருத்தெருவாக பிச்சை எடுப்பார். சாமியார் ஒருவரின் ஆலோசனையின்பேரில் இப்படி நேர்த்திக்கடன் செலுத்தி, தாயின் உயிரைக் காப்பாற்றுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும்.   மொழி, கலாச்சார ரீதியாக பாரம்பரியத்தை கட்டிக்காத்து வரும் சவுராஷ்டிரா சமூக மக்களிடையே இப்படி ஒரு சம்பிரதாயம் இன்றளவிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.   குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப்பட்டால், அவர்கள் விரைவில் நலம்பெற வேண்டும் என திருப்பதி ஏழுமலையானிடம் வேண்டிக் கொள்கிறார்கள். அவர்கள் குணமடைந்த பிறகு, பாதிக்கப்பட்டவர் உள்பட வேண்டுதல் வைத்த அனைவரும் கோயிலில் சென்று வாயில் 'அலகு பூட்டு' குத்திக்கொள்கின்றனர். சிலர், இதை 'வாய்ப்பூட்டு' என்றும் சொல்கின்றனர்.     குறைந்தபட்சம் ஏ
10 ரூபாய் நாணயங்கள் செல்லும்!; ஆர்பிஐ அறிவிப்பு

10 ரூபாய் நாணயங்கள் செல்லும்!; ஆர்பிஐ அறிவிப்பு

இந்தியா, முக்கிய செய்திகள்
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 14 வகையான பத்து ரூபாய் நாணயங்களும் செல்லுபடியாகும் என்றும், வங்கிகள் அவற்றை வாங்காமல் புறக்கணிக்கக்கூடாது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய பணச்சந்தையில் 5 ரூபாய், 10 ரூபாய், 2 ரூபாய், 1 ரூபாய் நாணயங்கள் பல்வேறு காலக்கட்டங்களில் வெளியிடப்பட்டன. இவற்றில், 10 ரூபாய் மதிப்பில் போலி நாணயங்கள் புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளதாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று வதந்தி பரவியது. பாகிஸ்தான் நாட்டில் இருந்து இவ்வாறு போலி நாணயங்கள் அச்சிட்டு, இந்தியாவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. இதை இந்திய அரசும் பலமுறை மறுத்துள்ளது. எனினும், சாலையோர வியாபாரிகள், சாமானியர்கள் முதல் வங்கியாளர்கள் வரை பத்து ரூபாய் நாணயங்களை பட்டுவாடாவுக்கு ஏற்க மறுத்தனர். பத்து ரூபாய் நாணயங்களை யாரும் வாங்காமல்