Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: கட்டப்பஞ்சாயத்து

திருச்செங்கோடு: எழுந்து நின்று பதில் சொல்லாததால் பட்டியல் சமூக இளைஞர்கள் மீது தாக்குதல்; எப்ஐஆர் பதியாமல் போலீசார் கட்டப்பஞ்சாயத்து!

திருச்செங்கோடு: எழுந்து நின்று பதில் சொல்லாததால் பட்டியல் சமூக இளைஞர்கள் மீது தாக்குதல்; எப்ஐஆர் பதியாமல் போலீசார் கட்டப்பஞ்சாயத்து!

நாமக்கல், முக்கிய செய்திகள்
திருச்செங்கோடு அருகே, பொது வெளியில் மது அருந்திய பட்டியல் சமூக இளைஞர்களை உள்ளூரைச் சேர்ந்த கவுண்டர் சமூக ஆள்கள் தட்டிக் கேட்டபோது, அவர்கள் எழுந்து நின்று பதில் சொல்லாததால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பட்டியல் சமூக வாலிபரின் காது ஜவ்வு கிழிந்தது.   நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் அருகே உள்ள அவினாசிப்பட்டியைச் சேர்ந்த செங்கோடன் மகன் வெற்றிவேல் (32). ரிக் லாரி ஓட்டுநர். இதே ஊரைச் சேர்ந்த சின்னுசாமி மகன் ராஜமாணிக்கம் (40). அவினாசிப்பட்டி ஊராட்சிமன்றத் துணைத்தலைவர். இருவரும் உறவினர்கள். கடந்த 4ம் தேதி இரவு, அவினாசிப்பட்டிக்கு பக்கத்து ஊரான வண்டிநத்தம் சின்ன ஏரி பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இதையடுத்து அவர்கள் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்றபோது செயின் ரிப்பேர் ஆனதால் அதை சரி செய்து கொண்டிருந
தோக்குறோமா ஜெயிக்குறோமாங்குறது முக்கியமில்ல… முதல்ல சண்ட செய்யணும்! வடசென்னை விமர்சனம்!! #VadaChennai

தோக்குறோமா ஜெயிக்குறோமாங்குறது முக்கியமில்ல… முதல்ல சண்ட செய்யணும்! வடசென்னை விமர்சனம்!! #VadaChennai

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழ் சினிமாக்காரர்களாலும் உலகப்படங்களை எடுக்க முடியும் என்பதற்கான புதிய நம்பிக்கையை தனது 'ஆடுகளம்', 'விசாரணை' படங்களின் வாயிலாக நிரூபித்த இயக்குநர் வெற்றிமாறனிடம் இருந்து, மற்றொரு உலகத்தர படமாக வெளிவந்திருக்கிறது, 'வடசென்னை'.   விளிம்புநிலை மக்களின் கதை:   'இது வடசென்னை மக்களின் வாழ்வியல் கதை அல்ல' என்று மிகுந்த ஜாக்கிரதை உணர்வுடன் சொல்லிவிட்டுத்தான் கதைக்குள் பயணிக்கிறார் வெற்றிமாறன். ஆனால், படம் நெடுக வடசென்னையில் வசிக்கும் பெரும்பான்மை விளிம்புநிலை மக்களின் வாழ்வியலைத்தான் வணிகத்தன்மையோடு கொடுத்திருக்கிறார்.   வடசென்னையில் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, போதைப்பொருள் கடத்தல் என கொடிக்கட்டி பறக்கிறது இரண்டு கோஷ்டி. ஒன்று, குணா (சமுத்திரக்கனி) தலைமையிலான கோஷ்டி. இன்னொன்று, செந்தில் (கிஷோர்) கோஷ்டி. இந்த இரு கோஷ்டிகளுக்கு இடையே, கேரம் போர்டு சாம்பியனாவதும், அதன்மூலம
துணை வேந்தர் கணபதி மீது குவியும் புகார்கள்;  கட்டப்பஞ்சாயத்து  ரவுடிபோல் மிரட்டியது அம்பலம்!

துணை வேந்தர் கணபதி மீது குவியும் புகார்கள்; கட்டப்பஞ்சாயத்து ரவுடிபோல் மிரட்டியது அம்பலம்!

கோயம்பத்தூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி, லஞ்சம் பெற்றுக்கொண்டு பணி நியமனம் செய்ததாக 20 பேர் புதிதாக லஞ்ச ஒழிப்புப்பிரிவில் புகார்கள் அளித்துள்ளனர். மேலும், உதவி பேராசிரியர் சுரேஷை கட்டப்பஞ்சாயத்து ரவுடிபோல் பணம் கேட்டு கடுமையாக மிரட்டியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவை பாரதியார் பல்கலை துணை வேந்தராக பணியாற்றி வந்த கணபதியை, கடந்த 3ம் தேதி லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். உதவி பேராசிரியர் சுரேஷ் என்பவரை பணி நியமனம் செய்வதற்காக 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். இதையடுத்து, அவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று முன்தினம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். கணபதிக்கு தரகு வேலை பார்த்ததாக பேராசிரியர் தர்மராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். மற்றொரு பேராசிரியர் மதிவாணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வரு