Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: கடன் சுமை

தமிழக பட்ஜெட் தாக்கல்: கடன் சுமை 5.70 லட்சம் கோடியாக உயரும்!

தமிழக பட்ஜெட் தாக்கல்: கடன் சுமை 5.70 லட்சம் கோடியாக உயரும்!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் அறிக்கை, சட்டப்பேரவையில் செவ்வாயன்று (பிப். 23) தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தின் கடன் சுமை, அடுத்த ஆண்டு மார்ச் 31க்குள் 5.70 லட்சம் கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.   தமிழக சட்டப்பேரவையில், 2021-2022ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட், செவ்வாய்க்கிழமை (பிப். 23) தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். விரைவில் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளதால், இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.   நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:   தமிழக அரசின் நிதி பற்றாக்குறை மாநில அரசின் மொத்த உற்பத்தி மதிப்பில் 2021-2022ம் நிதியாண்டில் 4 சதவீதத்திற்குள்ளும், 2022-2023ம் நிதியாண்டில் 3.5 சதவீதத்திற்குள்ளும்,
சேலம் மாநகராட்சி ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட 5 கோடி ரூபாய் பி.எப். தொகை எங்கே?

சேலம் மாநகராட்சி ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட 5 கோடி ரூபாய் பி.எப். தொகை எங்கே?

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாநகராட்சி ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்பட்ட 5 கோடி ரூபாய், இதுவரை பி.எப். கணக்கில் செலுத்தப்படாமல் உள்ளதால், பணிக்காலத்தில் இறந்த மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு உரிய காலத்தில் பணப்பலன்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.   சேலம் மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளர்கள் முதல் ஆணையர் / தனி அலுவலர் வரை ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். 20 அல்லது அதற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் எந்த ஒரு தொழிலகமும் தொழிலாளர் வருங்கால வைப்பது நிதி கணக்கு எனப்படும் இபிஎப் கணக்கிற்குள் அடங்கும். இபிஎப் கணக்கின்படி, மாதம் 15 ஆயிரத்திற்கும் கீழ் ஊதியம் பெறும் ஊழியர்கள் சம்பளத்தில் இருந்து அவர்களின் பங்களிப்பாக மாதம் 12 சதவீத தொகை பிடித்தம் செய்யப்படும். அதற்கு நிகராக வேலை அளிப்பவர் அ
டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்திற்கு மூடுவிழா?

டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்திற்கு மூடுவிழா?

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தை மூடிவிடும் திட்டத்தில் இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. உப்பு முதல் சாப்ட்வேர் வரை 100க்கும் மேற்பட்ட தொழில்துறைகளைக் கொண்டது டாடா குழுமம். இந்தக் குழுமத்தின் டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ் உள்பட 29 நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளன. தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்டுள்ள கடும் போட்டி காரணமாக கடந்த சில ஆண்டாகவே டாடா டெலிசர்வீசஸ் (மஹாராஷ்டிரா) நிறுவனம் கடும் நெருக்கடியில் தவித்து வருகிறது. சுமார் 31 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் இருப்பதாக கூறப்படுகிறது. மறுகட்டமைப்புக்கு வாய்ப்பு இல்லாத நிலையில், 5000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் பேசி வருகிறது. இது தொடர்பாக டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது, ''டாடா