Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: ஒரு நாள் போட்டி.

கிரிக்கெட்: இந்தியாவுக்கு மரண அடி கொடுத்தது இலங்கை!

கிரிக்கெட்: இந்தியாவுக்கு மரண அடி கொடுத்தது இலங்கை!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
தரம்சாலாவில் இன்று நடந்த முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார பெற்றி பெற்றது. இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகள் மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி, ஹிமாச்சல்பிரதேச தலைநகர் தரம்சாலாவில் இன்று (டிசம்பர் 10, 2017) நடந்தது. பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும், பனிப்பொழிவு காரணமாக பகல் 11.30 மணிக்கே போட்டி தொடங்கியது. இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி ஓய்வில் சென்றதால், ஒரு நாள் தொடருக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். ரஹானே நீக்கப்பட்டு ஸ்ரேயாஸ் அய்யர் முதன்முதலாக ஆடும் லெவனில் இடம் பிடித்தார். டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திசாரா பெரேரா, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.
கிரிக்கெட்: நியூஸிக்கு 281 ரன் இலக்கு; கோஹ்லி புதிய சாதனை!

கிரிக்கெட்: நியூஸிக்கு 281 ரன் இலக்கு; கோஹ்லி புதிய சாதனை!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
கனே வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவுடன் மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் ஒரு நாள் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (அக். 22, 2017) மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. இந்திய அணியில் நீண்ட நாள்களுக்குப் பிறகு, தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம் பிடித்தார். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் மட்டை வீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் ஜோடி பெரிய அளவில் சோபிக்கவில்லை. சிக்ஸர் அடித்து அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கிய ரோஹித் ஷர்மா, 20 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷிகர் தவானும் 9 ரன்களில் வெளியேறினார். இருவருமே நியூஸியின் டிரன்ட் போல்ட் வேகத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். தினேஷ்கார்த்திக் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்தார். அவரும் ஒருகட்டத்தில் 37 ரன்களில் த