Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: எம்பிபிஎஸ்

நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்;  ஆதார் கார்டு அவசியம்; சிபிஎஸ்இ அறிவிப்பு

நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்; ஆதார் கார்டு அவசியம்; சிபிஎஸ்இ அறிவிப்பு

இந்தியா, கல்வி, தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு எனப்படும் நீட் (National Eligibility cum Entrance Test- NEET 2018) தேர்வுக்கு இன்றுமுதல் (பிப்ரவரி 8, 2018) விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. ஆதார் கார்டு விவரங்கள் இருந்தால்தான் தேர்வு எழுத முடியும். மார்ச் 9ம் தேதி, கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் ஆகிய மருத்துவப்படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. கடந்த ஆண்டு முதல் தமிழகத்திலும் நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்நிலையில், நடப்பு 2018-2019ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு இன்று முதல் (பிப்ரவரி 8, 2018) விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ (The Central Board of Secondary Education- CBSE) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க