Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: எட்டு வழிச்சாலைத் திட்டம்

எட்டுவழிச்சாலை ரத்து: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; விவசாயிகள் வெற்றி கொண்டாட்டம்!

எட்டுவழிச்சாலை ரத்து: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; விவசாயிகள் வெற்றி கொண்டாட்டம்!

அரசியல், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டம் குறித்த அராசணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் திங்கள் கிழமையன்று (ஏப்ரல் 8, 2019) பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. இதையடுத்து சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகளும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியைக் கொண்டாடினர். சேலம் முதல் சென்னை வரையில் பசுமைவழி விரைவுச்சாலை என்ற பெயரில் எட்டுவழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்ற நடுவண் பாஜக மற்றும் தமிழக அதிமுக அரசுகள் மும்முரமாக செயல்பட்டு வந்தன. பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தால், சேலம் - சென்னை இடையிலான பயண நேரம் 70 கி.மீ. தூரம் குறையும் வகையில் மொத்தம் 277.3 கி.மீ. தூரத்திற்கு பாதை அமைக்கப்படும் என்று வரைவுத்திட்டத்தில் சொல்லப்பட்டது.   இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் 2343 ஹெக்டேர் நிலம் தேவை என்பதும்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்டது யார்?; திருமாவளவன் அதிர்ச்சி தகவல்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்டது யார்?; திருமாவளவன் அதிர்ச்சி தகவல்!

அரசியல், சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, முக்கிய செய்திகள்
  தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு பிரதமர் மோடிதான் உத்தரவிட்டார் என்று சேலத்தில் திருமாவளவன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.     எட்டு வழிச்சாலைத் திட்டத்தை கைவிடக்கோரி சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று (ஜூலை 20, 2018) ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின்போது அக்கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியது:   எட்டு வழிச்சாலைத் திட்டம் அமையவுள்ள சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் இந்தத் திட்டத்திற்கு மக்கள் ஆதரவு தரவில்லை. அப்படியிருந்தும், அரசு இந்த சாலைத் திட்டத்திற்காக துணிச்சலாக நிலங்களை கையகப்படுத்தி வருவது வேதனை அளிக்கிறது. இந்த சாலைத் திட்டத்தால் அடுத்த 50 ஆண்டுகளில் தொழில் வளர்ச்சி பெருகும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?     முதலில் கிராமச்சாலைகளை மாநில நெடுஞ்சாலைக
சூழலியல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் நிபந்தனை ஜாமினில் விடுதலை!; மன்சூர் அலிகானுக்கு ஜாமின் மறுப்பு

சூழலியல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் நிபந்தனை ஜாமினில் விடுதலை!; மன்சூர் அலிகானுக்கு ஜாமின் மறுப்பு

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
எட்டு வழிச்சாலை மற்றும் சேலம் விமான நிலையம் விரிவாக்கத்திற்கு எதிராக மக்களை தூண்டிவிட்டதாக கைது செய்யப்பட்ட சூழலியல் ஆர்வலர் பியூஷ் மானுஷ், நிபந்தனை ஜாமினில் இன்று (ஜூன் 22, 2018) விடுதலை செய்யப்பட்டார்.   சேலம் - சென்னை இடையே புதிதாக பசுமை வழிச்சாலை என்ற பெயரில் எட்டு வழிச்சாலைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 2343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. வனப்பகுதிகளில் 100 ஹெக்டேர் நிலமும் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இது தவிர, காமலாபுரம் விமான நிலையம் விரிவாக்கத்திற்காக 570 ஏக்கர் விவசாய நிலம் ஆர்ஜிதம் செய்யப்படுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இவ்விரு திட்டங்களால் விளை நிலங்கள் அழிக்கப்படுவதோடு, லட்சக்கணக்கான மரங்களும் அழிக்கப்படும் அபாயம் உள்ளதாக சூழலியல் ஆர்வலர் பியூஷ
”விவசாயிகள் மீது எடப்பாடி பழனிசாமி நடத்தும் போர்!”; முன்னாள் எம்எல்ஏ விளாசல்!!

”விவசாயிகள் மீது எடப்பாடி பழனிசாமி நடத்தும் போர்!”; முன்னாள் எம்எல்ஏ விளாசல்!!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விவசாயம்
எட்டு வழிச்சாலைத் திட்டம் என்ற பெயரில் விவசாயிகள் மீது எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் அறிவிக்கப்படாத போரை தொடுத்திருக்கிறது என்று முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர்.பார்த்திபன் தெரிவித்துள்ளார்.   விவசாயத்தை நாசமாக்கும் எட்டு வழிச்சாலைத் திட்டம் குறித்து திமுக தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.ஆர்.பார்த்திபன் 'புதிய அகராதி' இணைய ஊடகத்திற்கு அளித்த பேட்டி:   சேலம் - சென்னை இடையேயான பசுமை வழிச்சாலை எனப்படும் எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்காக ஐந்தாவது நாளாக இன்று (ஜூன் 22, 2018) மாசிநாயக்கன்பட்டி, உடையாப்பட்டி திமுக தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான தமிழக அரசு, எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்காக காவல்துறையினர் மூலம் விவசாயிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி அவர்களின் நிலங்களை கையகப்படுத்துகிறது. அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி விட்ட