Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: உயர்கல்வித்துறை செயலர்

பிஹெச்.டி., ‘வைவா’ தேர்வுக்கு ஓராண்டு அவகாசம் நீட்டிப்பு!

பிஹெச்.டி., ‘வைவா’ தேர்வுக்கு ஓராண்டு அவகாசம் நீட்டிப்பு!

கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பி.ஹெச்டி., எம்.பில்., படித்து வரும் மாணவர்களுக்கு 'வைவா-வோஸ்' எனப்படும் வாய்மொழித் தேர்வில் கலந்து கொள்ள மேலும் ஓராண்டு காலம் அவகாசத்தை நீட்டித்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா, அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:   கொரோனா நோய்த்தொற்று அபாயம் காரணமாக, பல்கலைக்கழகங்களில் பிஹெச்.டி., எம்.பில்., ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொண்டு வரும் மாணவர்களுக்கு வாய்மொழித் தேர்வு நடத்தி முடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் வாய்மொழித் தேர்வுக்கு பதிவு செய்திருந்த காலம் ஏற்கனவே முடிந்திருந்தால், அந்த நாளில் இருந்து மேலும் ஓராண்டு காலம் வாய்மொழித்தேர்வை முடிக்க அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.   ஆராய்ச்சி மாணவ
சிண்டிகேட் கூட்டம்: முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த பெரியார் பல்கலை! #PeriyarUniversity

சிண்டிகேட் கூட்டம்: முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த பெரியார் பல்கலை! #PeriyarUniversity

கல்வி, கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
  உதவி பேராசிரியர் பணி நியமனங்களில் விதிமீறல், போலி அனுபவச் சான்றிதழ்கள், கல்வித்தகுதிகள் குறித்து தணிக்கை அறிக்கையில் ஆட்சேபனைகள் எழுந்துள்ள நிலையில், அதுகுறித்த விவரங்களை பெரியார் பல்கலை நிர்வாகம் உயர்கல்வித்துறை செயலருக்கு தெரிவிக்காமல் மறைத்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 101வது சிண்டிகேட் குழு கூட்டம்   சேலம் பெரியார் பல்கலையில் 101வது சிண்டிகேட் குழு கூட்டம் ஆட்சிக்குழு அரங்கத்தில் நேற்று (செப். 29, 2018) நடந்தது. உயர்கல்வித்துறை செயலராக அண்மையில் நியமிக்கப்பட்டு உள்ள மங்கத்ராம் ஷர்மா, நேற்றைய கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.   இதற்காகவே அவர், சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு காலை 11.15 மணியளவில் வந்து சேர்ந்தார். அங்கிருந்து கார் மூலம் பல்கலைக்கு அழைத்து வரப்பட்டார். இதனால் வழக்கத்தைவிட சற்