Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: உச்ச நீதிமன்றம்

கருணை கொலை செய்யலாம்: உச்சநீதிமன்றம்

கருணை கொலை செய்யலாம்: உச்சநீதிமன்றம்

இந்தியா, முக்கிய செய்திகள்
தீராத, மீள முடியாத நோய்வாய்ப்பட்டவர்களை கருணை கொலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் இன்று (மார்ச் 9, 2018) தீர்ப்பு அளித்துள்ளது. மனிதர்கள் கண்ணியத்துடன் மரணத்தைத் தழுவ உரிமை உண்டு என்றும் கருத்து தெரிவித்துள்ளது. காமன் காஸ் என்ற தொண்டு நிறுவனம், கடந்த 2005ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், ''நீண்ட காலமாக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைய வாய்ப்பு இல்லாத நிலையில், மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் அவர்கள் உயிர் வாழச் செய்வதை தவிர்த்து, மரணத்தைத் தழுவ கருணை கொலைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்'' என்று கோரியிருந்தது.   பல ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. கடந்த 2014ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. அண்மையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, கருணை கொலை
காவிரி: உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு கேள்வி!

காவிரி: உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு கேள்வி!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடந்த 16ம் தேதி இறுதித் தீர்ப்பை அளித்துள்ளது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு இது தொடர்பாக யாரும் மேல்முறையீடு செய்ய இயலாது என்பதால், இப்போதைக்கு கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களும் பெரிய அளவில் கொந்தளிப்பை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு இல்லை. அதற்காக உச்ச நீதிமன்றம் நடுநிலையான தீர்ப்பை வழங்கி விட்டதாக நாம் கருதிவிட முடியாது. காவிரி நீர் பங்கீட்டில் பெரிய அளவில் ஆதாயம் அடைவது கர்நாடகமும், தமிழகமும்தான். கேரளாவும், புதுச்சேரியும் சொற்ப அளவில் ஆதாயம் பெறக்கூடிய இதர மாநிலங்கள். காவிரி விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், கடந்த 1991ம் ஆண்டு அளித்த இடைக்காலத் தீர்ப்பில், தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு 205 டிஎம்சி (ஒரு டிஎம்சி என்பது ஆயிரம் மில்லியன் கன அடி) தண்ணீர் வழங்க வேண்டும் என்று சொல்லி இருந்தது. இந்த நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப
தண்டனை தீர்ப்பை திரும்பப்பெற வேண்டும்!: பேரறிவாளன் புதிய மனு

தண்டனை தீர்ப்பை திரும்பப்பெற வேண்டும்!: பேரறிவாளன் புதிய மனு

அரசியல், இந்தியா, காஞ்சிபுரம், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை திரும்பப்பெற வேண்டும் என்று கோரி பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு பிப்ரவரி 21 ஆம் தேதிக்குள் சி.பி.ஐ பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1991-ஆம் ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரத்திற்கு வந்திருந்தபோது ராஜிவ் காந்தி மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயகுமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் தண்டிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். ராஜிவ் காந்தி கொலை வழக்கில், வெடிகுண்டு தயாரிக்கும் சதித்திட்டத்தில் உடந்தையாக இருந்தார் என்பதே பேரறிவாளன் மீது குற்றம் சாட்டப்பட்டது. நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரி தியாகராஜன் ஒரு பிராமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பரபரப்பு புகார்!: இந்தியா சந்தித்திராத விநோதம்!!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பரபரப்பு புகார்!: இந்தியா சந்தித்திராத விநோதம்!!

இந்தியா, முக்கிய செய்திகள்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதே சக நீதிபதிகள் இன்று (ஜனவரி 12, 2018) புகார் கூறியிருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உச்சநீதிமன்ற நிர்வாகம் குறித்தும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் இன்று காலை கூட்டாக பத்திரிகையாளர்களைச் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்திய வரலாற்றில் இதற்கு முன்பாக, நீதிபதிகள் குறிப்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஊடகத்தினரைச் சந்தித்து பேட்டி கொடுத்தது கிடையாது என்பதால், தலைநகர் டெல்லி பெரும் பரபரப்பானது. நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய நீதிபதி செல்லமேஸ்வர், “இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாதவகையில் நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு
”சிங்கப்பூரின் உன்னதமான சர்வாதிகாரத்தை விரும்புகிறோம்” – கமல் ட்வீட்

”சிங்கப்பூரின் உன்னதமான சர்வாதிகாரத்தை விரும்புகிறோம்” – கமல் ட்வீட்

உலகம், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நடிகர் கமல்ஹாசன், சிங்கப்பூர் நாட்டின் உன்னதமான சர்வாதிகாரத்தை விரும்புவதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வழக்கம்போல் அவருடைய கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளன. மத்திய, மாநில அரசுகள் மீதான விமர்சனங்களை ட்விட்டர் சமூக வலைத்தளம் மூலம் நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். 'மெர்சல்' படத்தின் சில காட்சிகளுக்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அந்தப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து இருந்தார் கமல்ஹாசன். இந்நிலையில், திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் இசைக்கப்படுவது குறித்து மறுபரிசீலனை செய்யலாம் என்று சில நாள்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து இருந்தது. இது தொடர்பாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''சிங்கப்பூரில் தேசிய கீதம் தினமும் நடுநிசியில் மட்டுமே இசைக்கப்படுகிறது. அதேபோல் தூர்தர்ஷனில் செயல்ப