Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: இந்தியா அபார வெற்றி

கடைசி டி-20: இந்தியா அபார வெற்றி; தொடரையும் கைப்பற்றியது!

கடைசி டி-20: இந்தியா அபார வெற்றி; தொடரையும் கைப்பற்றியது!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
கேப் டவுனில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி மற்றும் மூன்றாவது ட்வென்டி-20 போட்டியில், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, 3 போட்டிகள் கொண்ட தொடைரையும் 2-1 கணக்கில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது. தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு மூன்று ட்வென்டி-20 போட்டிகளில் பங்கேற்று விளையாடியது. முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. இதையடுத்து தொடரை கைப்பற்றும் முனைப்பில் மூன்றாவது மற்றும் இறுதி டி-20 போட்டியில் இரு அணிகளும் நேற்று (பிப்ரவரி 24, 2018) களமிறங்கின. இந்திய நேரப்படி, இரவு 9.30 மணிக்கு போட்டி தொடங்கியது. விராட் கோலிக்கு ஓய்வு: கேப்டவுன் நியூலேன்ட் மைதானத்தில் போட்டி நடந்தது. இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. கேப்டன் விராட் கோலிக்கு முதுகுப்
முதல் டி-20: இந்தியா அபார வெற்றி; புவி. 5 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை

முதல் டி-20: இந்தியா அபார வெற்றி; புவி. 5 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
ஜோகன்னஸ்பர்கில் இன்று (பிப்ரவரி 18, 2018) நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர்குமார் 5 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை படைத்தார். தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ட்வென்டி-20 தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஜோகன்னஸ்பர்கில் இன்று நடந்தது. 'டாஸ்' வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் டுமினி, முதலில் பந்து வீச தீர்மானித்தார். இந்திய அணியில் சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு, வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட் இடம் பெற்றார். ஓர் ஆண்டு இடைவெளிக்குப் பின்னர், சுரேஷ் ரெய்னா மீண்டும் அணியில் இணைந்தார். தென்னாப்பிரிக்கா அதிரடி ஆட்டக்காரர் ஏபி டி வில்லியர்ஸ், காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. கிளாசன், டாலா அறிமுகமா