Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: ஆர்ப்பாட்டம்

இளம்பெண்கள் பலி! 55 கோடி ரூபாய் மோசடி! சேலம் தொழில் அதிபர் மீது குவியும் புகார்கள்…. திணறும் போலீசார்…!!

இளம்பெண்கள் பலி! 55 கோடி ரூபாய் மோசடி! சேலம் தொழில் அதிபர் மீது குவியும் புகார்கள்…. திணறும் போலீசார்…!!

ஈரோடு, குற்றம், சேலம், தமிழ்நாடு, திருப்பூர், நாமக்கல், முக்கிய செய்திகள்
  முதலீட்டுத் தொகை திரும்பக் கிடைக்காத விரக்தியில் தற்கொலைக்கு முயன்ற பெண்களில் இருவர் அடுத்தடுத்து உயிரிழந்தது ஒருபுறம் இருக்க, சேலம் வின்ஸ்டார் சிவகுமார் மீது புகார் அளிக்க நாள்தோறும் குவியும் முதலீட்டாளர்களால் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திணறி வருகின்றனர்.   தற்கொலை முயற்சி சேலம் அம்மாபேட்டை நந்தனார் தெருவை சேர்ந்தவர் அழகேசன். கூலித்தொழிலாளி. இவருக்கு ஐந்து மகள்கள். இரண்டு மகள்களுக்கு திருமணம் நடந்துவிட்டது. மற்ற மூன்று மகள்களான மேனகா (33), ரேவதி (28), கலைமகள் (26) ஆகியோர் கடந்த 28.8.2018ம் தேதி திடீரென்று குருணை மருந்தை நீரில் கலக்கிக் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.   அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேனகா, கலைமகள் ஆகியோர் உடல்நலம் மோசமானதால், தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு
சேலம்: திமுக ஆர்ப்பாட்டமும் அம்பலமான கோஷ்டி பூசலும்! #DMK #MKStalin

சேலம்: திமுக ஆர்ப்பாட்டமும் அம்பலமான கோஷ்டி பூசலும்! #DMK #MKStalin

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆளுங்கட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் பெரிய அளவில் கவன ஈர்ப்பைப் பெற்றிருந்தாலும், மாங்கனி மாவட்ட திமுகவில் நிலவும் கோஷ்டி பூசல்களையும் பட்டவர்த்தனமாக அம்பலமாக்கியுள்ளது.   ஆர்ப்பாட்டம்   அதிமுக அரசில் குட்கா ஊழல், பொதுப்பணித்துறை டெண்டர் ஊழல், மணல் கொள்ளை ஊழல், சத்துணவு முட்டையில் ஊழல் என எல்லா துறைகளிலும் மலிந்து கிடக்கும் ஊழலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் திமுக சார்பில் செப். 18ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடந்தது.   சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு, அதிமுக அரசை வெளுத்து வாங்கினார்.   மு.க.ஸ்டாலின், திமுக தலைவராக பொறுப்பேற்ற பிறகு மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் என்றால் அது, செப். 18ம் தேதியன்று சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டம்தான்.