Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: ஆய்வு

முதுகெலும்பற்ற அடிமைகளும் மூளையற்ற பக்தாள்களும்!

முதுகெலும்பற்ற அடிமைகளும் மூளையற்ற பக்தாள்களும்!

அரசியல், கோயம்பத்தூர், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்டு நடந்து வரும் ஆளுநரின் ஆய்வுப்பணிகளுக்கு பல்வேறு மட்டத்திலும் கடும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், தமிழக அரசை ஆளுநர் மூலம் நிர்வாகம் செய்ய பாஜக திட்டமிட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. பாரதியார் பல்கலைக்கழகத்தின பட்டமளிப்பு விழாவிற்காகக் கோயம்புத்தூருக்குச் சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பட்டங்களை வழங்கியதோடு ராஜ்பவனுக்கு திரும்பி இருக்கலாம். என்ன நினைத்தாரோ, திடீரென்று அவர் கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அரசின் நலத்திட்டப்பணிகள் குறித்த ஆய்வு என்ற பெயரில் கோதாவில் குதித்தார். பாஜகவை சும்மாவே தெறிக்கவிடும் எதிர்க்கட்சிகள் விடுவார்களா?. அக்கட்சியை கடும் விமர்சனங்களால் பிராண்டி எடுத்து வருகிறார்கள். 'தமிழகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் ஆளுநர் ஆய்வு செய்கிறார். அதில் ஒன்றும் தவறு இல்லை' என்று பாஜக
‘சுமார் மூஞ்சி குமார்’களை விரும்பும் பெண்கள்: சர்வே சொல்றத கேளுங்க!

‘சுமார் மூஞ்சி குமார்’களை விரும்பும் பெண்கள்: சர்வே சொல்றத கேளுங்க!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
எல்லாவற்றிலும் ஸ்மார்ட் ஆக இருக்கும் ஆண்களைக் காட்டிலும், 'சுமார் மூஞ்சி குமார்'களையே பெண்களுக்கு அதிகம் பிடித்திருக்கிறதாம். நம்ம ஊர்ல இல்லைங்க. இது லண்டன் பெண்களின் சமாச்சாரம். இங்கிலாந்தின் லண்டன் பல்கலை., ஒன்று, பெண்களுக்கு எப்படிப்பட்ட ஆண்களை பிடிக்கும் என்ற ஆய்வை சமீபத்தில் நடத்தியது. எத்தனை பேரிடம் இந்த ஆய்வு நடந்தது என்ற தகவல்கள் இல்லை. ஆனால் ஆய்வின் முடிவில், பல்வேறு ருசிகரமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அர்னால்டு ஸ்வஸ்நேகர் போல கட்டுமஸ்தான ஆண்களை, அவ்வளவாக பெண்கள் விரும்புவதில்லை என்பது அந்த ஆய்வில் கிடைத்த முக்கிய தகவல்களில் ஒன்று. அதேபோல், விரல் நுனியில் தகவல்களை வைத்துக்கொண்டு 'டான் டான்' என்று பொளந்து கட்டும் ஆண்கள் மீது மதிப்பு இருக்கிறதே தவிர, அவர்களை வாழ்க்கைத் துணையாக ஏற்பதில் சற்று தயக்கம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில் பங்கேற்ற பெண்களில் 1