Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: ஆண்டாள்

ஜீயர் உண்ணாவிரதமும் மோடியின் பக்கோடாவும்!

ஜீயர் உண்ணாவிரதமும் மோடியின் பக்கோடாவும்!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில் பாஜக தங்கள் இருப்பை நிலைநிறுத்துவதற்காக மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் தவிடுபொடியாகிக் கொண்டே போவதை கிண்டலடித்து, சமூகவலைத்தளங்களில் பலர் கேலியான விமர்சனங்களை பதிவிட்டுள்ளனர். நரேந்திர மோடியின் 'பக்கோடா' முதல் ஜீயர் உண்ணாவிரதம் வரை ஒவ்வொன்றையும் முடிச்சுப்போட்டு கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.   மத்தியில் அசுர பலத்தில் இருக்கும்போதே, தமிழகத்திலும் முக்கிய கட்சிகளின் வரிசையில் வந்துவிட வேண்டும் என்றுதான் பாஜக ரொம்பவே மெனக்கெடுகிறது. ஆனால், அதன் ஒவ்வொரு முயற்சியும் பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாகி விடுகிறது. சாரணர் தேர்தல் முதல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவிடம் தோற்றது வரை பாஜகவின் பலம் என்ன என்பதை தமிழ்நாடே அறியும். அவர்கள் வெற்றி என்பதெல்லாம் இபிஎஸ், ஓபிஎஸ் கும்பலை வளைத்துப் போட்டது மட்டுமே. மங்குனி அமைச்சர்களுக்கும் விழுந்து வணங்குவதற்கு பாத
தமிழ்த்தாய்க்கு அவமரியாதை; விஜயேந்திரா, மண்டியிட்டு மன்னிப்புக்கேள்!

தமிழ்த்தாய்க்கு அவமரியாதை; விஜயேந்திரா, மண்டியிட்டு மன்னிப்புக்கேள்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்காத காஞ்சி காமகோடி பீட இளைய மடாதிபதி விஜயேந்திரர், தமிழ்த்தாய் சிலை முன்பு மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். காஞ்சி மடம் அளித்துள்ள பதிலும், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் தந்தை எஸ்.ஹரிஹரன் எழுதிய தமிழ் சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று (ஜனவரி 23, 2018) நடந்தது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நூலை வெளியிட, சமஸ்கிருத பாரதியின் தேசிய அமைப்பு பொது செயலாளர் தினேஷ் காமத் பெற்றுக் கொண்டார். விழாவில், காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர், பேராசிரியர் சாலமன் பாப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்போது, 'நீராருங் கடலுடுத்த...' எனத்தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் இசைக்கப்பட்டது. வழக்