Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: ஆடிட்டர் குருமூர்த்தி

ஆடிட்டர் குருமூர்த்தி இப்படி பேசலாமா?

ஆடிட்டர் குருமூர்த்தி இப்படி பேசலாமா?

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பாஜக ஆதரவாளரும், துக்ளக் பத்திரிகை ஆசிரியருமான ஆடிட்டர் குருமூர்த்தி, பொருளாதார அறிவு இல்லாதவர்கள்தான் பக்கோடா விற்பனை செய்வதை விமர்சிப்பார்கள் என்ற கருத்துக்கு, சமூகவலைத்தளத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ, மரணம் அடைந்த பிறகு அதன் செய்தி ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டார் ஆடிட்டர் குருமூர்த்தி. இவர் பாஜகவின் ஊதுகுழலாக அறியப்பட்டவர். ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி. கடந்த ஜனவரி இறுதியில் வானொலியில் 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ''நாட்டில் பக்கோடா விற்பவர்கள்கூட தினமும் 200 ரூபாய் சம்பாதிக்கின்றனர். அதுவும் வேலைவாய்ப்புதானே?'' என்றார். பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கடந்த மக்களவை தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், தவறான பொருளாதார கொள்கைகள், பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி
”ஆண்மையற்ற அதிமுக தலைவர்கள்”; சர்ச்சை கிளப்பிய ஆடிட்டர் குருமூர்த்தியின் ட்வீட்!!

”ஆண்மையற்ற அதிமுக தலைவர்கள்”; சர்ச்சை கிளப்பிய ஆடிட்டர் குருமூர்த்தியின் ட்வீட்!!

அரசியல், சென்னை, முக்கிய செய்திகள்
டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மீது ஆறு மாதம் கழித்து நடவடிக்கை எடுத்துள்ளது தொடர்பாக, துக்ளக் பத்திரிகை ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ஆண்மையற்றவர்கள் என்று ட்வீட் செய்த விவகாரம் அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். ஆளுங்கட்சி வேட்பாளரான மதுசூதனன் தோல்வி அடைந்தார். இந்நிலையில், அதிமுக கட்சிப் பொறுப்பில் இருந்து வரும் தினகரன் ஆதரவாளர்கள் நாஞ்சில் சம்பத், புகழேந்தி, சரஸ்வதி, கலைராஜன் உள்ளிட்டோர் நேற்று திடீரென்று நீக்கப்பட்டனர். இது தொடர்பாக துக்ளக் பத்திரிகை ஆசிரியரும், பாஜக பிரமுகருமான ஆடிட்டர் குருமூர்த்தி, ''இந்த பலவீனமான நபர்கள், ஆறு மாதம் கழித்துதான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். ஆண்மையற்ற தலைவர்கள்.