Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: அறுவை சிகிச்சை

கர்ப்பப்பையில் கட்டி…! ”ஆபத்தை அறியாத பெண்கள்”

கர்ப்பப்பையில் கட்டி…! ”ஆபத்தை அறியாத பெண்கள்”

அலோபதி, சேலம், தமிழ்நாடு, பெண்கள் நலம், மருத்துவம், முக்கிய செய்திகள், விழுப்புரம்
(நலமறிய ஆவல்) பெண்களின் கர்ப்பப்பையில் கட்டி வளருதல் என்பது, அவர்களுக்கு ஏற்படும் முக்கிய உடல்நலப் பிரச்னைகளில் ஒன்று. இப்பிரச்னை சற்று விநோதமானதும்கூட. காரணம், கர்ப்பப்பையில் கட்டி வளர்ந்திருக்கிறது என்பதே பெண்கள் பலருக்கும் தெரியாது என்கிறார்கள் மருத்துவர்கள். சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தில் உள்ள திரு மருத்துவமனையில் ஒரு பெண்ணின் கர்ப்பப்பையில் இருந்து, சுமார் 4 கிலோ கட்டியை, லேப்ராஸ்கோப் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி இருக்கிறார்கள் மருத்துவர்கள். மூத்த மருத்துவர் திருவருட்செல்வன், மகப்பேறு மருத்துவர் சரவணக்குமார், மயக்கவியல் மருத்துவர் சாய்குமார் குழுவினர் இந்த சிகிச்சையை திறம்பட செய்துள்ளனர். கர்ப்பப்பை கட்டி எதனால் ஏற்படுகிறது? காரணங்கள் என்ன? புற்றுநோயாக மாறுமா? உள்ளிட்ட கேள்விகளை மகப்பேறு மருத்துவர் சரவணக்குமாரிடம் முன்வைத்தோம். இனி, அவர்... காரணங்கள்: ஈஸ்
சேலம்: கேன்சர் நோயால் உயிருக்குப் போராடும் இலங்கை தமிழரின் மகன்;  ‘உதவும் உள்ளங்கள் நினைத்தால் காப்பாற்றலாம்’!!

சேலம்: கேன்சர் நோயால் உயிருக்குப் போராடும் இலங்கை தமிழரின் மகன்; ‘உதவும் உள்ளங்கள் நினைத்தால் காப்பாற்றலாம்’!!

உலகம், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள குறுக்குப்பட்டி (அட்டை) இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் யோகராஜா. பெயிண்டர். இவருடைய மனைவி சுமதி. இவர்களுக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள். மகளும், மகனும் ஏற்காட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படிக்கின்றனர். இரண்டாவது மகன் பூபாலன் (16), எஸ்எஸ்எல்சி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு புலம்பெயர்ந்த ஏராளமான தமிழர்களில் யோகராஜா குடும்பமும் ஒன்று. கடந்த 1990ம் ஆண்டு குறுக்குப்பட்டி முகாமில் குடும்பத்துடன் தஞ்சம் அடைந்தார். பெயிண்ட் அடிக்கும் வேலைக்குச் சென்றால்தான் அன்றாடம் வீட்டில் அடுப்பெரியும். இந்த வேலையில் தினமும் அவருக்கு ரூ. 450 கூலி கிடைக்கிறது. 12 மணி நேரம் வேலை செய்தால் ரூ. 650 வரை கிடைக்கும். ஆனாலும் ஆண்டு முழுவதும் வேலை கிடைக்காது. சொற்ப கூலி, அரசு வழங்கும் உதவித்தொகை மூலம் குடும்பம் நடத்தி வந்த நில
தமிழரின் அறுவை சிகிச்சைக்கு 11 லட்சம் வசூலித்து கொடுத்த கேரள மக்கள்; நெகிழ வைக்கும் சம்பவம்

தமிழரின் அறுவை சிகிச்சைக்கு 11 லட்சம் வசூலித்து கொடுத்த கேரள மக்கள்; நெகிழ வைக்கும் சம்பவம்

இந்தியா, தமிழ்நாடு, மதுரை, முக்கிய செய்திகள்
விபத்தில் சிக்கிய தமிழருக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால் உயிரிழந்தபோது மனிதம் செத்துவிட்டதாக கேரள மக்கள் மீது விமர்சனம் எழுந்த நிலையில், அதே கேரள மக்கள் இன்னொரு தமிழரின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக ரூ.11 லட்சம் வசூலித்துக் கொடுத்து மனிதத்தை மீட்டெடுத்துள்ளனர். நெகிழ்ச்சியான நிகழ்வின் பின்னணி இதுதான்... மதுரையைச் சேர்ந்தவர் ஜெயன். இவருடைய மனைவி மாரியம்மாள். குடும்பத்துடன் கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம் சிங்காவனம் என்ற கிராமத்தில் வசிக்கிறார். அவர் கேரளாவில் குடியேறி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஜெயன், இஸ்திரி (அயனிங்) கடை வைத்திருக்கிறார். சிங்காவனம் மற்றும் பல்லம் கிராம மக்கள் தங்கள் உடைகளை ஜெயனிடம் கொடுத்துதான் இஸ்திரி செய்து வருகின்றனர். பெரும்பாலும் ஜெயனே, வீடு வீடாகச் சென்று துணிகளை பெற்றுக்கொண்டு வந்து இஸ்திரி செய்து தருவதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் அவர் அந்த