Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: அந்நிய முதலீடு

போர் விமானம் கொள்முதலில்  35 ஆயிரம் கோடி ஊழல்?;  மோடி மீது அடுத்த அட்டாக்!

போர் விமானம் கொள்முதலில் 35 ஆயிரம் கோடி ஊழல்?; மோடி மீது அடுத்த அட்டாக்!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இந்திய ராணுவத்திற்கு ரஃபேல் ரக போர் விமானங்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் மூலம் ரூ.35 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக புதிய குற்றச்சாட்டை காங்கிரஸ் கிளப்பி இருக்கிறது. இந்த புகாருக்காவது பிரதமர் மோடி பதில் அளிப்பாரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. ஊழலை ஒழிப்பேன் என்ற முழக்கத்துடன் பிரதமர் அரியணையேறிய பாஜகவின் நரேந்திர மோடி, வல்லரசு கனவை நனவாக்குவதுதான் முதல் லட்சியம் என்றார். அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணமும், இந்தியாவுக்கு அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்காகவே மேற்கொள்ளப்படுகிறது என்றே அந்தப் பயணங்கள் குறித்த மதிப்பீட்டை மக்களிடம் பதிய வைத்து வருகிறது பாஜக. காவி கரங்களில் ஊழல் கறை படிந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் பாஜக, அறிவியல்பூர்வமான கொள்ளைகளில் ஈடுபட திட்டமிட்டு, அதற்கேற்ப சட்டத்தையும் இயற்றி வருவது கண்கூடு. உதாரணத்திற்கு, அரசியல் கட்சிகளுக்கு ரூ.20
நரேந்திர மோடி சொன்ன ‘அச்சா தின்’ எப்போது வரும்?

நரேந்திர மோடி சொன்ன ‘அச்சா தின்’ எப்போது வரும்?

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
உலகளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டபோதுகூட இந்தியாவின் பொருளாதாரம் சீர்குலையாமல் கட்டுக்குள் இருந்தது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாண்டு கால ஆட்சியில் இந்தியா கடுமையான பொருளாதார சரிவை மட்டுமல்ல, உற்பத்தி, வேலைவாய்ப்புகளையும் பறிகொடுத்து, கூட்டத்தில் தொலைந்த குழந்தைபோல தடுமாறிக் கொண்டிருக்கிறது. அச்சா தின்: கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, 'நான் பிரதமரானால் இந்தியாவுக்கு 'அச்சா தின்' (நல்ல நாள்) பிறந்து விடும்' என்றார். ஜன்தன், ஆதார், மேக் இன் இந்தியா, பணமதிப்பிழப்பு, புல்லட் ரயில், சவுபாக்கியா என ஒவ்வொரு திட்டம் அறிவிக்கும்போதும் புதிய இந்தியா பிறந்து விட்டதாக பிரதமர் மோடி அகன்ற மார்பை திறந்து சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார். அவருக்கும், அவரை இயக்கும் ஆர்எஸ்எஸ் கும்பலுக்கும் வேண்டுமானால் அந்த நாள்கள், நல்ல நாள்களாக இருக்கல