Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: அண்ணா.

அமமுகவில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல்; பின்னணி என்ன?

அமமுகவில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல்; பின்னணி என்ன?

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
டிடிவி தினகரன் தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகியதன் பின்னணியில் கட்சிப் பெயர் மீதான அதிருப்தி மட்டுமின்றி, மேலும் சில காரணங்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு எதிராக டிடிவி தினகரன் கம்பு சுழற்றத் தொடங்கியது முதலே, அவருக்காக மேடைதோறும் முழங்கியவர் நாஞ்சில் சம்பத். தினகரன் அணியில் கொள்கை பரப்புத் துணைச்செயலாளராகவும் இருந்து வந்தார். மதிமுகவில் இருந்து பிரிந்த அவர், கடந்த 2012ல் அதிமுகவில் ஐக்கியமானார். அப்போது ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட அதே பதவியில்தான் டிடிவி தினகரனும் அமர்த்தி இருந்தார். அண்மையில் டெல்லி உயர்நீதிமன்றம் டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றும், அவர் கேட்டிருக்கும் கட்சிப் பெயர்களில் ஒன்றை வழங்கலாம் என்றும் தீர்ப்பு அளித்தது. இதை வரவேற்ற நாஞ்
ஓராண்டுக்குப்பின் ‘முதல் பிள்ளை’யை பார்த்து ரசித்தார் கருணாநிதி!

ஓராண்டுக்குப்பின் ‘முதல் பிள்ளை’யை பார்த்து ரசித்தார் கருணாநிதி!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
'என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!' என்று கரகரப்பான குரலில் ஒலிக்கும் இந்த சொற்களுக்கு மயங்காத திமுக தொண்டர்களே இருக்க முடியாது. இப்படி திமுக தலைவர் கருணாநிதி பொதுக்கூட்டங்களில் சொல்லும்போது, கட்சியையும் தாண்டி அனைத்து தரப்பினரும் ரசிப்பார்கள். தொண்டர்களின் விசில் ஒலியும், கரவொலியும் அடங்க வெகுநேரம் ஆகும். திமுகவினர் சோர்வடையும் போதெல்லாம் அவர்களை உசுப்பிவிடுவது 'என் இனிய உடன்பிறப்புகளே'தான். திமுகவினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகமும், கருணாநிதியின் 'டிரெண்டி'யான இந்த பேச்சைக் கேட்டு ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. தற்போது, 94 வயதாகும் மு.கருணாநிதி, உடல்நலக்குறைவால் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தொண்டையில் டிரக்கியாஸ்டமி உபகரணம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதமாக அவருடைய உடல்நலம் வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகிறத