Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: அண்ணா சமாதி

கருணாநிதி மரணம்… தலைவராகும் தளபதி… எதையும் இழக்கத் தயாரான ஸ்டாலின்! கண்ணீர்மயமான திமுக செயற்குழு!!

கருணாநிதி மரணம்… தலைவராகும் தளபதி… எதையும் இழக்கத் தயாரான ஸ்டாலின்! கண்ணீர்மயமான திமுக செயற்குழு!!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  திமுக தலைவர் கருணாநிதி மறைந்த எட்டாம் நாளான இன்று (ஆகஸ்ட் 14, 2018), அக்கட்சி செயற்குழுவின் அவசரக்கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. நேற்றைய தினம் மு.க. அழகிரி, ''கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் என் பின்னால் இருக்கிறார்கள். முக்கிய தலைவர்கள் ரஜினிகாந்துடன் தொடர்பில் இருக்கின்றனர்,'' என்று சரவெடி கொளுத்திப் போட்டார். இதனால் இன்றைய அவசர செயற்குழுக் கூட்டத்தில் அனல் பறக்கும் என்ற பரபரப்பும், எதிர்பார்ப்பும் அரசியல் களத்தில் நிலவியது. 325 செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பலரும் கலந்து கொண்ட இக்கூட்ட அரங்கம், ஆரம்பத்தில் இருந்தே இறுக்கமாக காணப்பட்டது. எவர் முகத்திலும் மகிழ்ச்சி ரேகைகள் தென்படவில்லை.   மேடையின் பின்னணியில் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் ஸ்டாலின் முகமும் அச்சிடப்பட்ட பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இதற்கு முன்பே
கருணாநிதி: சந்தன பேழைக்குள் துயில் கொண்ட சூரியன்!

கருணாநிதி: சந்தன பேழைக்குள் துயில் கொண்ட சூரியன்!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  திமுக தலைவர் கருணாநிதி விரும்பியபடியே, மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அவருடைய உடல் இன்று (ஆகஸ்ட் 8, 2018) மாலை 6.50 மணியளவில் சந்தனப் பேழைக்குள் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றியதால் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாகவே தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். அவருக்கு அவ்வப்போது மருத்துவமனையிலும், வீட்டிலும் மருத்துவர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர்.   இந்த நிலையில்தான் கடந்த 11 நாள்களாக காவேரி மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தமிழகத்தில் ஐந்து முறை முதல்வர், தொடர்ச்சியாக 13 முறை சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியே காணாத எம்எல்ஏ என ஓய்வின்றி மக்களுக்கு உழைத்த கருணாநிதியின் நினைவுகள் தப்பின. சிகிச்சை பலனின்றி நேற்று (ஆகஸ்ட் 7, 2018) மாலை 6.10 மணியளவில் இறந்தார். தான் மறைந்த பிறகு, மெ